shockan.blogspot.com
செய்யக்கூடாத தப்பை செய்து விட்டு போலீசாரிடம் மாட்டிக் கொள்ளும் பெரிய புள்ளிகளுக்கு உடனே நெஞ்சு வலி வருவது வாடிக்கை. இந்த நெஞ்சுவலி இந்திய அரசியல்வாதிகளின் பரம்பரரை சொத்தாகும். பாலியல் ஆராய்ச்சியாளர் நித்தியானந்தாவுக்கும் போலீஸ் விசாரணையின் போது நெஞ்சு வலி வந்து விட்டது. ஆனால், அது பொய் வலி என்று சோதித்து பார்த்த மருத்துவர்கள் சொல்லி விட்டனர்.
இப்போது நண்பனின் மனைவியை கசமுசா பண்ணிய கர்நாடக அமைச்சர் ஹாலப்பாவுக்கும் நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் படுத்து விட்டார். நண்பன் மனைவியை படுக்கைக்கு அழைத்த ஹாலப்பாவின் கதை கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.
ஷிமோகா என்ற பகுதியில் உள்ள ஒரு நண்பர் வீட்டில் இரவில் தங்கியபோது அவரது மனைவியை கற்பழித்ததாக எழுந்த சர்ச்சையால் பதவியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஹாலப்பா இன்று ஷிமோகா காவல்துறை ஆணையரிடம் சரணடைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. இவர் தனது நண்பரின் மனைவி சந்திரவதியை, கற்பழித்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஹாலப்பா பதவி விலகினார்.
அதன் பின்னர் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து ஹாலப்பா தலைமறைவாகி விட்டார்.
நாளைக்குள் அவர் சரணடைய வேண்டும் என்று போலீஸார் கெடு விதித்திருந்தனர். இந்தநிலையில் இன்று ஷிமோகா காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஹாலப்பா சரணடைந்து விட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment