Saturday, May 29, 2010

தரித்திரம் பிடிச்ச ராஜகோபுரமாம்!


நூறு இடிகள் ஒன்றாய் சேர்ந்து உச்சந் தலையில் விழுந்தது போன்ற பயங்கரச் சத்தத் தோடு இடிந்து நொறுங்கி விழுந்து கற்குவிய லாகி விட்டது, தென் கைலாயம் என்று நாயன் மார்களால் போற்றிப் புகழப்பட்ட காளத்தி நாதர் கோயிலின் 140 அடி உயர ராஜகோபுரம்.

26-05-10 அன்று கோபுரம் நொறுங்கி விழுந்தபோது அருகிலுள்ள கணேஷ் பவனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் பக்தர் சோமசுந்தரம் நம்மிடம், ""சார் ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தப்பவே நொறுங்கியிருக்க வேண்டிய காளத்தி நாதர் ராஜகோபுரம் இப்பத் தான் விழுந்தது. பத்து நிமிஷத்துக்கு முன்னால் வரை வானளந்து கொண்டிருந்த கோபுரம்... இப்ப மண்ணும் செப்பறியாங்கல்லும் தூசியுமா குவிந்து கிடக்குது!'' என்றார்.

""ஜெயலலிதா மேல உங்களுக்கு என்ன சார் கோபம்... காளஹஸ்திக்கு தினமும் பல லட்சம் பக்தர்கள் வர்றாங்க. அந்த பக்தர்களில் ஒருத்தராதான் ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தாங்க. அவங்க மேல ஏன் அபாண்டமா சொல்றீங்க? ஜெ. வர்றதுக்கு முன்னாடியே பனங்கிழங்கைப் பிளந்தது போல பிளந்தபடி தானே நின் றது அந்தக் கோபுரம்?''

""ஆமாமா... அப்பிடி நிக்கிறதைப் பார்த்து விட்டுத்தான்... தங்களோட தலைவியை வரவேற்கிறதுக்காக ஒண்ண ரை லட்ச ரூபாய்க்கு வெடிகளை வாங்கி வந்து இந்தக் கோபுரத்தை ஒட்டி வெடிச்சாங்க... வெடியினா சாதாரண வெடியில்லை... குவாரியில பாறை உடைக்க வைக்கிற ஜெலட்டின் வெடிச்சத்தம் மாதிரி சத்தம்... அந்த வெடிச் சத்தத்திலேயே அதிர்ந்து நொறுங்கி இருக்க வேண்டிய கோபுரம் 10 நாள் கழிச்சு விழுந்திருக்கு...!''






""தகவலுக்கு ரொம்ப நன்றி! நாங்க புறப்பட்டு விட்டோம்!''.

சென்னையில் இருந்து காளஹஸ்திக்குப் புறப்பட்டோம்.

காளஹஸ்தி மெயின்ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந் தது. அந்தச் சாலையை ஒட்டித்தான், நுழைவுவாயிலைப் போல கட்டப்பட்டி ருந்தது ராஜகோபுரம். இடிந்த மண் கற்குவியல் சாலையில் பாதியை அடைத்துக் கொண்டிருந்ததால்தான் போக்குவரத்தை நிறுத்தியிருந்தார்கள்.

""கோபுரம் பலகீனமானதுக்கு இந்த ரோட்டில், அளவுக்கு மீறிய எடையோடு போன லாரிகளும், ட்ரக்கு களும் கூட ஒரு காரணம் தான். யார் வந்தாலும் வெடிப் போட்டு வரவேற்பது, அப்புறம் யாருக்காவது கல்யாணம் என்றால் வெடி போடுவது என்ற பழக்கம் இங்கே இருக்கிறது. இதை தடை செய்திருந்தால் இந்தக் கோபுரம் உடைந்திருக்காது!'' பக்கத்தில் இருக்கும் கணேஷ்பவன் ஹோட்டல் ஊழியர் சொல்லிவிட்டு நகர்ந்ததும் மூடிக்கிடந்த ஒரு கடையின் உரிமையாளர் நம்மிடம்,

""கோபுரம் விரிசல் விட்டதுக்கு இந்த கணேஷ்பவன்காரங்கதான் கார ணம். கோபுரத்துக்கு பக்கத்தில இருந்த சங்கரமுனி மடத்தை விலைக்கு வாங்கி, அதை நொறுக்கிவிட்டு, இருபது அடி, முப்பது அடி பள்ளம் தோண்டி, சுரங்கத் தளமும் அஸ்திவாரமும் கட்டினார்கள். பள்ளம் தோண்டும் போதே கீறல் விழுந்து விட்டது கோபுரத்தில். இன்னொரு முக்கியமான காரணம் கோபுரத்தை சுற்றியிருக்கிற ஒவ்வொரு வீட்லயும் 400 அடிக்கு, 500 அடிக்கு "போர்' போட்டிருக்காங்களே அதுவும் கோபுரத்துக்கு பலகீனத்தை உண்டாக்கியிருக்கும்!'' என்று சொன் னார்.

""கணேஷ்பவன்காரர்கள் இந்தப் பக்கம் தோண்டினாங்களா... போதாக் குறைக்கு இன்னொரு குரூப் அந்தப் பக்கம் பள்ளம் தோண்டி கிருஷ்ண தேவராயருக்கு மண்டபம் கட்டினாங்க. கிருஷ்ண தேவராயருக்கு சிலை யும் வச்சாங்க. கோபுரம் நொறுங்குனா சிலையும் உடை யும்னு நெனைச்சோம்... சிலைக்கு ஒரு சேதாரமும் இல்லை. நான் கும்புடுற காளத்தி நாதர் எந்த உயிரையும் எடுக்காம, பாதிப்பு ஏற்படாமல் பாத்துக்கிட்டாரு!'' -கன்னத்தில் போட்டுக் கொண்டார் பக்கத்தில் நின்ற கணேஷ்ராம் நாயுடு என்ற பக்தர்.

காளத்தி நாதர் கோயில் வெளிச்சுற்றுச் சுவரில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில், சாலையோரம், கோயிலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், ஒரு நுழைவு வாயிலைப் போல கட்டப்பட்டிருந்தது இந்த ராஜகோபுரம்.

""1988-ஆம் ஆண்டிலேயே இந்த ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உடனே கவர்மெண்ட் ஆபீசருங்க வந்தாங்க, பேசினாங்க. டெண்டர் விட்டாங்க. வெடிப்புல சிமெண்ட் பாலையும், மணலையும் கலந்து ஊத்துனாங்க. "விரிசலை 15 லட்சம் செலவழித்து அடைத்து விட்டோம்... இனிமேல் உலகம் அழியும் வரை இந்த ராஜகோபுரத்துக்கு அழிவே இல்லை'னு சொல்லிட்டு போயிட்டாங்க. சிவன் சொத்தை நாசம் பண்ணுன அந்த ஊழல் அதிகாரிகளை சிவபெருமான் தண்டிக்க மாட்டான்... சி.பி.ஐ.தான் விசாரித்து தண்டிக்கணும்... 1988-ல் 15 லட்சம்னா கொஞ்சமா?''

காளத்தி நாதர் கோயில் அர்ச்சகர் நம்மிடம் சொன்ன தகவல் இது.

""என்ன சாமி... நீங்களே உங்க கோயில் நிர்வாகம் பற்றி இவ்வளவு கேவலமா குற்றம் சாட்டுறீங்க?'' என்றோம்.

""ஏங்க... அந்த தரித்திரம் பிடித்த ராஜகோபுரத் துக்கும் எங்க கோயிலுக்கும் என்னங்க தொடர்பு? எங்க கண்ட்ரோல்ல அது இருந்ததே இல்லை. இந்தக் கோயிலை மகாராஜா கட்டும்போதே பயங்கர ஊழலாம். அப்புறம்... அந்த இடத்தில கோபுரம் கட்டப்பிடாதுனு "சாமி' சொன்னதாம். மீறித்தான் ராசா கட்டினாராம். அதனால, அந்த இடிஞ்ச தரித்திரம் பிடித்த கோபுரம் வழியா "காளத்தி நாதர்' போக மறுத்துவிட்டாராம். உற்சவ காலத்தில ஒருநாள் கூட அந்த கோபுர வழியா சாமி ரதம் போனதே இல்லை. அம்மன் விக்கிரகத்தை மட்டும்தான் அந்த வழியா தூக்கிப் போவாங்க. விஷயம் தெரிஞ்ச, வழக்கமா வர்ற பக்தர்கள் கூட அந்த கோபுரம் வழியா வரமாட்டாங்க. அது நொறுங்கினது நல்லதுதான்!'' -உதடுகளை நீட்டிவிட்டுப் போனார் அர்ச்சகர்.

ராஜகோபுரம் இடிந்து நொ றுங்கியதற்காக, கோயிலுக்குள் கும்பிட்டுக் கொண்டிருந்த பல நூறு பக்தர்களில் யாரும் வேத னைப்பட்டதாகத் தெரியவில்லை.

""ரொம்ப அழகா இருந்தது... இடிஞ்சு போச்சு... அதை விட அழகா ஒரு கோபுரத்தை அரசாங்கம் கட்டித் தரட்டும்!'' என்ற பக்தரொருவர் ""இது பகவான் சாபம் கோபம்னு நெனைக்காதீங்க. ஒரு ஆடு, மாடு கூட சாகாமப் பார்த்துக் கொண்டார் பகவான்!'' என்று பெருமையோடு சொல்லிவிட்டுப் போனார்.

இடிந்த கோபுரப் பாது காப்பில் நின்ற போலீசாரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

""சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்திரியும், எஸ்.பி.ராமகிருஷ்ணனும் உடனே வந்துட்டாங்க. பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பக்காவாக்கிட்டாங்க. போனவாரம் சென்னை ஐ.ஐ.டி. இன்ஜினியர்கள் வந்து பார்த்துச் சொன்னதுமே, ராஜகோபுரத்தைச் சுற்றி 30 அடி தூரத்திற்கு பென்சிங் போட்டு யாரும் நுழையாம தடுத்துவிட்டோம். அக்கம் பக்க வீடுகளை, கடைகளை மூடச் சொல்லி பாதுகாப்பான தூரத்திற்கு அனுப்பிவிட்டோம்!'' காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டை விரிவாகவே சொன்னார் அவர்.

காளஹஸ்தியில் அதிக கவலையோ வேதனையோ தென் படவில்லை. ஆனால் இங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பதி யில்...?

""ஏழுமலையானே...! காளஹஸ்தி கோயில் இடிஞ்சு போச்சாம்... இது எதுக்கு அறிகுறி? ஆந்திராவுக்கு ஆபத்து ஒண்ணும் வராம காப்பாத்து கோவிந்தா!'' என்றுதான் பலரும் வேண்டியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment