Saturday, May 29, 2010

யுத்தம் 57 -நக்கீரன் கோபால்




shockan.blogspot.com

இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமியின் கேள்வியில்தான் நக்கீரன் மீதான பொய்வழக்குகளுக்கும் விசாரணைகளுக்குமான உள்நோக்கம் என்ன என்பது அடங்கியிருந்தது. தேவாரம் பற்றி நக்கீரனில் வெளிவந்த செய்திக்கும், வீரப்பன் சம்பந்தப்பட்ட வழக்கு களின் விசாரணைக்கும் என்ன சம்பந்தம்? நக்கீரன் மீதான பொய் வழக்குகளின் சூத்திர தாரிகளில் தேவாரம் முக்கியமானவர் என்பதா லும் அவருடைய இன்ஸ்ட்ரக்ஷன் படி செயல்படு கின்ற போலீஸ் டீம்தான் இந்த விசாரணையை நடத்துகிறது என்பதைத்தான் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று குறிப்பிட்டேன்.

""குழந்தை அது, இதுன்னு போட்டு தேவாரம் சாரை கேவலப்படுத்திட்டீங்களே!'' என்றார் லட்சுமணசாமி. விசாரணையின் பின்னணியில் இருப்பவர் யார் என்பதை அவரது வார்த்தைகள் மீண்டும் உறுதி செய்தன. ""அந்த செய்திக்குப் பழி வாங்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விசாரணை நாடகமா?'' என்றேன்.

லட்சுமணசாமி குறிப்பிட்டது, நக்கீரனில் வெளியான ஓர் ஆஸ்திரேலியப் பெண்ணின் வாக்குமூலம்தான். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார் அந்தப் பெண். ""தனது குழந்தைகளுக்கு தேவாரம்தான் தகப்பன்'' என்று அவர் தெரிவித்ததை நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என தேவாரம் மறுத்தார். இது பொய்க்குற்றச் சாட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் குழந்தைகளின் பர்த் சர்டிபிகேட்டில் தேவாரம்தான் தந்தை பெயரில் இருப்பதை வெளியிட்டிருந்தோம். என்ன நடந்தது என்பதை அந்த ஆஸ்திரேலியப் பெண் கண்ணீர் பொங்க விளக்கியிருந்தார். இந்த உண்மைகளை நக்கீரன் மட்டுமே வெளி யிட்டது என்பதால் தேவாரத்துக்கு அவ்வளவு ஆத்திரம். ""உண்மைகளை மறைப்பதற் காகத்தான், நக்கீரன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. ஆஸ்திரேலியப் பெண் விவ காரத்தில் ஆதாரத்துடன்தான் செய்திகளை வெளியிட்டோம்'' என்பதை இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமியிடம் தெரிவித்தேன். அவருக்கும் உண்மை தெரிந்திருக்கும். அதை மீறி, மேலிடத்து விசுவாசம் என ஒன்று இருக்கிறதே!

ஒரு கையெழுத்தைக் காட்டி ""இது வீரப்பன் கையெழுத்தா'' என்று என்னிடம் கேட்டார்கள். ""தெரியாது'' என்றேன். "எதை யாவது செய்து, என்னை வீரப்பன் வழக்கு களில் தொடர்புபடுத்திவிடவேண்டும்' என்று போலீசார் ரொம்பவே போராடிக்கொண்டிருந் தனர்.

""தீவிரவாதிகளுக்கு உதவக்கூடாது. போலீசுக்கு உதவணும்'' என்று சம்பந்தமில்லா மல் சொன்னார் டி.எஸ்.பி. நாகராஜன்.

""சார்... எங்க உதவியாலதான் பல வழக்குகளில் போலீசாரால் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுபிடிக்க முடிந்திருக்குது. பாபர் மசூதி நினைவுநாளையொட்டி 3 ரயில்களில் குண்டு வெடித்ததே... அதில் சம்பந்தப்பட்ட அலி அப்துல்லாவின் போட்டோவை அட்டையில்போட்டு, "இவன்தான் குண்டுவைத்தவன்'னு எழுதியது நக்கீரன்தான். அப்புறம்தான் போலீசுக்கு அடையாளம் தெரிஞ்சுது. திருவாரூரில் அவனை அரெஸ்ட் பண்ணினாங்க. நாங்க ஒரு போதும் தீவிரவாதத்துக்குத் துணை போகமாட்டோம். மக்களுக்குத் துணையா நிற்போம். மக்கள் பக்கம் யார் இருக்காங்களோ அவங்களுக்குத் துணையா இருப்போம்''.





""காட்டுக்குப் போன நக்கீ ரன் டீமுக்கு நிறைய பணத்தை இன்சூரன்ஸ் செய்திருக்கீங்க ளாமே?''

""ஆமா சார்... ராஜ்குமார் மீட்புக்காக காட்டுக்குப் போனப்ப 1 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்தோம். ஆரம்பத்தில் போகவேணாம்னுதான் முடிவு செஞ்சிருந்தோம். கலைஞர், கிருஷ்ணா, சிவாஜி, ரஜினி, சின்னக்குத்தூசி அய்யா இவங்க ளெல்லாம் வலி யுறுத்தியதாலதான் காட்டுக்குப் போக சம்மதித்தோம்''. "இது ரொம்ப பெரிய மிஷன். அதோடு, ரொம்ப ரிஸ்க்கான மிஷன்'. அதனால, தம்பிகளோட குடும் பத்தினருக்கு ஒரு பயம் இருந்தது. என்னை நம்பி வரும் தம்பிகளின் குடும்பத் துக்கு தைரியம் கொடுக்க வேண்டியதும், நம்பிக்கை தர வேண்டியதும் என்னோட பொறுப்பு. அந்தக் குடும்பங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்குது. அதனால்தான் நேஷனல் இன்சூரன்ஸிலும் நியூ இந்தியா இன்சூரன்ஸிலும் பாலிசி போட்டோம். அவ்வளவு பெரிய தொகைக்கு ஓவர் நைட்டில் இன்சூர் பண்ணிக் கொடுத்தாங்க. அந்த நன்றியை நாங்க மறக்கவே முடியாது.

இன்சூரன்ஸ் பாலிசி டாக்குமென்ட்டோடு மறுநாள் காலையில் முதல்வர் கலைஞரைப் போய்ப் பார்த்து, டாக்குமென்ட்டைக் காட்டி னோம். அதைப் பார்த்த கலைஞர், "இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நீங்க போகவேண்டியிருக்கா'ன்னு கவலையோடு கேட்டார். "இல்லண்ணே நம்மை நம்பி வர்றவங்களுக்கு நம்பிக்கை அளிக்கணுமே'ன்னு சொன்னேன் . அவர் கண் கலங்கிட்டார். அப்ப போட்ட இன்சூரன்ஸை இப்ப வரைக்கும் கன்டின்யூ பண்ணிக்கிட்டிருக்கோம்'' என்றேன்.

மணி 3 ஆகிவிட்டது. அன்றைய விசாரணை அத்துடன் முடிந்தது. வெளியே வந்தபோது அட்வகேட் ப.பா. மோகன் அவரது ஜூனியர்கள் எல்லோரும் காத்திருந்தார் கள். விசாரணை கடுமையாக இருந்ததையும், தீவிரவாதிகள் லிஸ்ட்டில் என்னைச் சேர்ப்பதற்கு போலீசார் தயாராகி, அதற்கான ஆல்பத்தை ரெடி செய்து வைத்திருப்பதையும் வழக்கறிஞரிடம் சொன்னேன். விசாரணை நடந்த இடத்தின் வாசலில் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடானது. திரண்டிருந்த கோபிசெட்டிபாளையம் பத்திரிகையாளர்களிடம், ""என் மீது தீவிரவாதி என்ற முத்திரையைக் குத்த போலீஸ் எடுக்கும் முயற்சிகளை அப்படியே விளக்கினேன். பத்திரிகை சகோதரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரஸ் மீட் ஒரு புறமென்றால், தலைமைச்செயலாளர்-உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு போலீஸ் விசாரணையின் கடுமை பற்றி தந்தி கொடுப்பது இன்னொரு புறம் நடந்துகொண்டிருந்தது. கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கான அஃபிடவிட்டை ப.பா.மோகனின் ஜூனியர்கள் ரெடி செய்துகொண்டிருந்தனர்.

எல்லாம் முடிந்த பிறகுதான் மதிய உணவு. அதற்காக ஸ்டாலின் சிவகுமார் வீட்டிற்குச் சென்றோம். சத்தியமங்கலம் கோர்ட்டில் நமது ஜாமீனுக்கு ஷ்யூரிட்டி கொடுத்தவர் அவர். நான், அட்வகேட் ப.பா.மோகன், தம்பி ஜீவா, டிரைவர் மோகன், செக்யூரிட்டி குண்டு பூபதி, ஃபோட்டோகிராபர் இளங்கோவன் எல்லோரும் ஸ்டாலின் சிவகுமார் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, எங்க பின்னாடியே ஒரு எஸ்.டி.எஃப் ஜீப் ஃபாலோ பண்ணிக் கொண்டிருந்தது. "எதற்காக வருகிறார்கள், வேறு எங்காவது போவதற்காக இதே பாதையில் வருகிறார்களா' என்று யோசித்தபடி நாங்கள் சாப்பிடப் போய்விட்டோம்.

சாப்பிட்டு முடித்து திரும்பி வரும்போது அதே எஸ்.டி.எஃப் ஜீப் எங்களைப் பின்தொடர்ந்தது. நம்மைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என்பது உறுதியானதால், ஃபோட் டோகிராபர் இளங்கோவனிடம் அந்த வண்டியை வீடியோ எடுக்கச் சொன்னேன். ஃபோட்டோவும் வீடியோவும் அவர் தான் எடுத்துக்கொண்டிருந்தார். எஸ்.டி.எஃப் வண்டியையும் தனது ஸ்டில் கேமரா-வீடியோ கேமராக்களில் பதிவு செய் தார். இதை கோர்ட்டில் பதிவு செய்வதற்காக எடுத்தோம். விசாரணை நேரம் முடிந்தபிறகும், போலீசார் எங்களைப் பின் தொடர்வதை அஃபிடவிட்டில் சேர்த்து தாக்கல் செய்தோம்.

மறுநாள். கோபி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசா ரணைக்குச் சென்றபோது பெரிய பிரளயமே உருவாகியிருந் தது. எப்போதும் என்னை சுற்றிக்கொண்டு விசாரணை நடத் தத் தயாராக இருக்கும் அதிகாரிகள், அன்று வேறு ஏதோ பயணத்திற்குத் தயாராவது போல இருந்தனர். என்னைப் பார்த்ததும், ""சரி.. சரி.. கிளம்புங்க. காட்டுக்குப் போவோம்'' என்ற டி.எஸ்.பி. நாகராஜனின் குரலில் கடுமை தெறித்தது. போலீசார் பக்கம் திரும்பி, ""ஜீப் ரெடியா?'' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "இங்கேதானே விசாரணை நடத்தணும்னு கோர்ட் ஆர்டர் கொடுத்திருந்தது! நேற்று வேற ஏதாவது ஆர்டர் வாங்கிட்டாங்களா?' என்று யோசித்தேன். ""இங்கேதானே விசாரணை'' என்று கேட்டேன். எந்தப் பதிலும் வரவில்லை.

வழக்கம்போல சேரில் உட்கார்ந்து கொண்டேன். ""நான் வேற எங்கேயும் வர முடியாது. நீங்க கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லணும்ங்கிறதுதான் கோர்ட் உத்தரவு. கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் வரமாட் டேன்'' -நான் சொன்னதும் அவர்கள் வெளியே போய் யாரிடமோ பேசுகிறார்கள். ஒரு டீம், வெளியே நிற்கிற என் வண்டியை சர்ச் செய்கிறது. அதற்கு ப.பா.மோக னின் ஜூனியர்கள் சிவராமன், கார்த்தி ஆகியோர் பலமாக அப்ஜெக்ஷன் செய்கிறார்கள். ஒரு 20 நிமிடம் கழித்து போலீஸ் டீம் மீண்டும் உள்ளே வந்தது.

டி.எஸ்.பி. நாகராஜன் கோபத்தோடு பேச ஆரம் பித்தார். ""நீங்க எங்களைப் பற்றிய விவரங்களை வீரப்ப னுக்கு அனுப்பி, எங்களைக் கடத்துறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கீங்க. வீரப்பன் இருக்கிற இடம் உங்களுக்குத் தெரியும். வந்து காட்டுங்க'' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ""உங்க விசாரணை வளையத்தில இருக்கும்போது உங்களை கடத்த வீரப்பனுக்கு நான் உதவுறேனா? பொருத்தமே இல்லாம பொய்யை அள்ளிவிடுறீங்களே'' என்றதும், ""நேத்து என்ன செஞ்சீங்க'' என்றார் டி.எஸ்.பி. எனக்கு அப்போதும் எதுவும் தோன்றவில்லை. "அவர்கள் போட்ட எல்லா பொய்வழக்குகளிலும் பெயில் வாங்கிவிட்டோம். அந்த பெயிலைக் கேன்சல் பண்ணுவதற்கும் புது கேஸ் போடுவதற்கும் ரூட் போடுகிறார்களோ' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

டி.எஸ்.பி.யே பேச ஆரம்பித்தார். ""எங்க எஸ்.டி.எஃப் வாகனத்தை நீங்க ஃபோட்டோவும் வீடியோவும் எடுத்தீங்களா இல்லையா?''

""ஓ... அது உங்க வேலைதானா? ஆமா சார்.. நாங்க வெளியே போகும்போதும் திரும்பி வரும்போதும் எங்களை எந்த வாகனம் ஃபாலோ செய்தாலும் அதைப் பதிவு செய்வோம். அதிலே நாங்க கவனமா இருப்போம். எல்லாத்தையும் சட்டரீதியா நிரூபிக்கிறதுக்காகத்தான் இப்படி செய்றோம்''.

""இல்லை... எங்க வண்டியையும் எங்களையும் ஃபோட்டோ எடுத்து அதை வீரப்பனுக்கு அனுப்பி எங்களை அடையாளம் காட்டி, கடத்துறதுக்குத்தான் நீங்க ஏற்பாடு பண்ணுறீங்க. வீரப்பன்கிட்டே எங்களை நீங்க அடையாளம் காட்டிக் கொடுக்குறீங்க. உங்க ளுக்கு வீரப்பன் இருக்கிற இடம் தெரியும் உடனே எங்ககூட காட்டுக்கு கிளம்புங்க..''

-டி.எஸ்.பியின் குரல் வெறித்தனமாக இருந்தது. இன்னொரு பயங்கரம் சூழ்வதை உணர்ந்தேன்.

2 comments:

  1. may be vijay last three film flop.. i am sure that next film will be mega hits...by vijay fanz(yaresh)

    ReplyDelete
  2. win is like a butterfly it not only sit in flower..so please dont say anything wrong about our vijay.....vijay anna,don't worry next three film will surely hit....

    ReplyDelete