Saturday, May 29, 2010

போதை டாக்டரின் வெறியாட்டம்!


""நானாகவா நோயாளி யைக் கற்பழிக்கப் போனேன்? இன்னொரு டாக்டர் தைரியம் கொடுத்ததால்தான் போதையில் போனேன்... போய் கட்டிப்புடிச்சு... அதுக்காக இந்த நர்ஸ்களும் அந்த நோயாளியோட மகனும் மகளுமா சேர்ந்து செருப்பால அடிச்சு போலீஸ்ல புடுச்சுக் கொடுக்கலாமா? சும்மா விடமாட்டேன், ஜெயில்ல இருந்து திரும்பி வந்து நான் யார்னு காட்டுறேன்!'' -சவால் விட்டபடி சிறைக்குச் சென்றார் டாக்டர் இளங்கோ.

தன் மனைவி ஜெயலட்சுமிக்கு என்ன வியாதி என்பதைக் கண்டுபிடித்து குணப்படுத்துவார்கள் என்று நம்பித்தான் மதுரை ஆசீர்வாதம் மருத்துவமனைக்கு அனுப்பினார் பூசுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி.

அம்மாவோடு துணைக்குச் சென்றார்கள் மகனும் மகளும்.

ஜெயலட்சுமியை அட்மிட் செய்த ஆசீர்வாதம் கிளினிக் நிர்வாகம் ""பெரிய டாக்டர் ஆசீர்வாதம் மருந்துக் கம்பெனிகள் தயவால, குடும்பத்தோட மும்பைக்கு டூர் போயிருக்கிறார். டாக்டர் இளங்கோதான் டூட்டி டாக்டர். ஆண்டிப்பட்டி பக்கத்தில இருக்கிற சுப்லாபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர். அங்கே காலைல டூட்டி இங்கே நைட் டூட்டி... அவர் உங்களைப் பார்த்துப்பார்!'' என்றது.

டாக்டர் இளங்கோவின் சிகிச்சை பற்றி நோயாளி ஜெயலட்சுமியின் மகள் பாண்டியம்மாள் நம்மிடம் ""டாக்டரா அவர்? சரியான குடிகாரர்... தினமும் சாயந்தரம் குடிச்சிட்டுதான் வந்தார். உன் அம்மா சிவகாசி ஜெயலட்சுமி மாதிரி... நீயும் நல்லாதான் இருக்கே... குட்டி ஜெயலட்சுமினு ஆரம்பிச்சு... ரெட்டை அர்த்தத்தோட அசிங்க அசிங்கமா பேசினார். நான் நர்ஸ்கள்ட்ட சொன்னேன். எங்ககிட்டயும் அப்படித்தான் பேசுறார். ரொம்ப ஜாக்கிரதையா இரும்மானு சொன்னாங்க. இப்படி எங்க அம்மாகிட்ட தப்பா நடப்பார்னு கனவுல கூட நினைக்கலை!'' தேம்பினார் பாண்டியம்மாள். இன்னும் அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் இருந்து மீளாமல் நடுக்கத்தோடிருந்தார் பூசுத்தி ஜெயலட்சுமி.

""திங்கட்கிழமை நைட் எட்டரை மணி... பயங்கர போதையில வந்தாரு... உங்க அம்மாவை செக் பண்ணணும் வெளிய போங்கனு சொல்லி என் மகளையும் மகனையும் அனுப்பிட்டு ரூமை தாழ் போட்டாரு... படக்குனு திரும்பி வந்து என் ரெண்டு மார்பிலயும் கையை வச்சாரு... நான் தள்ளி விட்டுட்டு கத்தினேன். ஏண்டி கத்துறே அவளைத்தான் அனுபவிக்க முடியலை கிழவி உன்னையாச்சும்னு சொல்லிட்டே என் நைட்டியை... அப்புறம் காப்பாத்துங்க... காப்பாத்துங்க... கெடுக்கிறான் இந்தப் பாவினு அலறுனேன். வெளில எல்லாரும் கதவைப் படபடனு தட்டுனாங்க. அப்பவும் பயப்பிடாம என்னென்னமோ செய்றான்... கடைசியில... கதவை உடைச்சிக்கிட்டு வந்து... டாக்டரை கீழே புடிச்சுத் தள்ளி... எல்லாரும் செருப்பாலயே அடிச்சாங்க. அப்புறம்தான் அவன் போதை இறங்குச்சு போல... திமுதிமுனு பக்கத்து அறைக்கு ஓடி கதவை தாழ்ப்பாள் போட்டுக்கிட்டான். 100-க்கு போன் போட்டு சொன்னமா... போலீஸ் வந்து புடுச்சுக்கினு போச்சு... இப்பத்தான் சொல்றாங்க இந்த சீஃப் டாக்டர் ஆசீர்வாதமும் மோசமானவர்னு...'' நடுக்கத்தோடு குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார் பூசுத்தி கிராம முனியாண்டியின் மனைவி ஜெயலட்சுமி.

No comments:

Post a Comment