Monday, May 31, 2010

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்


shockan.blogspot.com

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவரது பாதுகாவலர் காயமடைந்தார்.

பெங்களூர் புறநகர் பகுதியில் கனகபுரா சாலையில் தலகட்டபுரா என்ற இடத்தில் ரவிசங்கரின் வாழும் கலை ஆசிரமம் உள்ளது. நேற்று மாலை ஆசிரமத்தில் சத்சங் சொற்பொழிவு நடந்தது.

ரவிசங்கர் உரையாற்றிய இந்தக் கூட்டத்தில் சுமார் 8,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும், மாலை 6.30 மணி அளவில் ரவிசங்கர் அங்கிருந்து, காரில் புறப்பட்டார். காரை சுற்றி ஏராளமான பக்தர்கள் கூட்டமாக நின்றனர்.

அப்போது, பக்தர்கள் கூட்டத்தில் இருந்த மர்ம மனிதன் ஒருவன் திடீரென்று ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினான். அதற்குள் கார் நகர ஆரம்பித்துவிட்டதால் ரவிசங்கர் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார்.

இந்த குண்டு அவரது பாதுகாவலரான வினய் என்பவரின் தொடையில் பாய்ந்தது. காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ரவிசங்கரை சுட முயன்றது யார் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும், ஆசிரமத்தில் நிலவிய 'பசிட்டிவ் எனர்ஜி' காரணமாகத் தான், துப்பாக்கியால் சுட்டும் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை, பக்தர்கள் அமைதியாக இருக்குமாறும் ரவிசங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆசிரம செய்தித் தொடர்பாளர் சாரு கூறுகையில், சத்சங் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ரவிசங்கர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது அப்போதுதான் அந்த மர்ம மனிதர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தால் ரவிசங்கர் பதற்றமடையவில்லை. இதையடுத்தும் வழக்கம் போல அவர் சீடர்களிடையே உரையாற்றினார் என்றார்.

ஆசிரமத்துக்கு கூடுதல் பாதுகாப்பு-கண்காணிப்பு கேமரா:

இந் நிலையில் ரவிசங்கரின் ஆசிரமத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் ரவிசங்கருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Read: In English
துப்பாக்சி சூடு சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. சுடப்பட்ட தோட்டாவை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஆசிரமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களை சோதனை செய்து அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment