Saturday, May 29, 2010

அன்புமணிக்கு ராஜ்யசபா! எதிர்க்கும் சோனியா!


""ஹலோ தலைவரே... .... உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் சந்தோஷ் குமார்ங்கிற சென்னைக்காரர் ஏறி, தமிழ் வாழ்கன்னு உரக்கச் சொல்லியிருக்காரு. எவரெஸ்ட்டில் ஏறிய முதல் தமிழர் இவர்தான். உச்சிக்குப்போனாலும் தாய்மொழியை மறக்காத அவரோட மன உணர்வு பாராட்டுக்குரியது.''

""சத்தமில்லாத சாதனைதான்... பரபரப்பான அரசியலுக்கு நடுவே இதையும் மறக்காம ஞாபகப் படுத்தினியே... நல்ல விஷயம். அ.தி.மு.க. செயற் குழுவில் என்ன நடந்தது?''





""முத்துசாமி விவகாரம் பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறார் ஜெ. சிங்கம் மாதிரி இருந்த நீங்க இப்படி தாழ்ந்த குரலில் பேசுறீங்களேன்னு கோகுல இந்திரா சொல்லியிருக்கிறார். மதுசூதனன் பேசுறப்ப, "பொளந்தா எவனும் போகமாட்டான்'னு சொன்னார். அதற்கு ஜெ, முன்னெல்லாம் கட்சிக்கட்டுப்பாடுங் கிற பேரில் அதிரடியா நடவடிக்கை எடுப்பேன். இப்ப எனக்கு 62 வயசாயிடிச்சி. பக்குவம் வந்திடிச்சி. அத னால ஒருவரையும் கட்சியிலிருந்து இழக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்னு தன்னோட வழக்க மான தொனியை மாற்றிப் பேச, கட்சி நிர்வாகிகளுக்கு பலத்த ஆச்சரியம்.''

""அ.தி.மு.க. அணிக்கு கிடைக்கும் 2 ராஜ்யசபா சீட்டில் ஒன்று, கூட் டணிக் கட்சிக்கு கிடைக் கும்னு எதிர்பார்க்கப் பட்டதால் வைகோவும் தா.பா.வும் ரொம்ப நம்பிக் கையோடு இருந்தாங்க... ஆனா, இரண்டுமே அ.தி.மு.க.வுக்குத்தான்னு சொல்லி, கூட்டணிக்கட்சி களின் ஆதரவையும் ஜெ. வாங்கிட்டாரே?''

""ராஜ்யசபாவில் ஒரு கட்சிக்கு, 5 எம்.பி.க்கள் இருந் தால்தான் அதை ஒரு குழுவா அங்கீகரிப்பாங்க. கட்சி சார்பில் பேச அதிக நேரமும் கிடைக்கும். தற்போதைய நிலையில் அ.தி. மு.க.வுக்கு 3 எம்.பிதான் மிஞ்சு வாங்க. கூட்டணிக்கு கிடைக்கக் கூடிய 2 சீட்டும் அ.தி.மு.க.வுக்கே கிடைத்தால்தான் ராஜ்யசபாவில் குழுவா செயல்படமுடியும். அதனாலதான், இப்ப விட்டுக்கொடுங்க, மேலவை எலெக்ஷனில் பார்த்துக்கலாம்னு கூட்டணித் தலைவர்களிடம் ஜெ. சொல்லியிருக்கிறார்.''

""அவங்களுக்கு மனப்பூர்வ சம்மதமா?''

""ஆதரவு கொடுத்தாலும் வருத்தம் இருக் கத்தான் செய்யுது. கார்டனுக்கு வரணும்னு வைகோவை ஜெ.வே தொடர்புகொண்டு அழைத்திருக்கிறார். சி.பி.எம். மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணனை செங்கோட்டை யன் நேரில் போய் அழைத்திருக் கிறார். ஆனா, சி.பி.ஐ.க்கு முறைப் படியான அழைப்பு எதுவும் வரலையாம். ராஜ்யசபா சீட் வரும்னு எதிர்பார்த்திருந்த தா.பா, அழைப்புகூட வரலையேங்கிற கோபத்தில், கார்டனுக்கு அவர் போகாமல் மகேந்திரனை அனுப்பி வச்சிட்டார்.''

""கூட்டணி கட்சி களின் ஆதரவுடன் 2 சீட்டும் அ.தி.மு.க. வுக்குத்தான்ங்கிற நிலையில், யார் யாரை ஜெ. அறிவிக்கப் போறாராம்?''

""காலியாகிற இடங்களில் மெஜாரிட்டி சமு தாயங்களைச் சேர்ந் தவங்க இருக்காங்க. இப்ப கட்சிக்குள்ளே முத்துசாமி விவகாரம் பெரிதாகியிருப்பதால, கவுண் டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கு சீட் கொடுத்து சரிபண்ணப் போறாங்களாம். இன்னொரு சீட் முக்குலத் தோரைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷுக்காம்.''

""காங்கிரசில் ஒற்றை சீட்டுக்கு நடக்கும் யுத்தம் இன்னும் ஓயலையாமே?''

""ரேஸில் ஒருத்தரை யொருத்தர் முந்துறாங்க. சோனியாவை சந்தித்து வந்ததிலிருந்து இளங் கோவன் ரொம்ப தெம்பா இருந்தார். காங்கிரசில் ராஜ்யசபா எம்.பி. பதவி நிறைவுபெறும் சுதர்சன நாச்சியப்பன், முக்குலத்தோர்ங்கிற தால அதே சமுதாயத்தைச் சேர்ந்த இன்னொ ருத்தருக்கு சீட் தரணும்ங்கிறது ப.சி.யோட வலியுறுத்தல். அவர், திருநாவுக்கரசரை சிபா ரிசு செய்றாராம். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், பதவி முடிவடையும் சுதர்சன நாச்சியப்பனும் எம்.பி. சீட்டைப் பெற்றுவிட ணும்னு முயற்சிக்கிறாங்க. இளங்கோவனும் தங்கபாலுவும் கட்சியின் முன்னாள்-இந்நாள் தலைவர்கள். திருநாவுக்கரசர் கட்சிக்குப் புதியவர். சுதர் சன நாச்சியப்பனுக்கே மறுபடியும் தரலாமான்னு காங்கிரஸ் மேலிடத்தில் டிஸ்கஷன் நடக்குதாம்.''

""தி.மு.க.வில் யார் யாருக்கு சான்ஸ்?''

""நாம போனமுறை சொன்ன மாதிரி ஸ்டாலின் சிபாரிசில் செல்வகணபதி, அழகிரி சிபாரிசில் கே.பி.ராமலிங்கம், சீனியர்ங்கிற முறையில் காஞ்சனா கமலநாதன் மூவரும்தான் ரேஸில் இருந்தவங்க. மூவருமே மேற்கு மாவட்டக்காரர்கள்ங்கிறதால, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருத்தரை எம்.பி. யாக்கணும்ங்கிற எண்ணம் கட்சிக்குள் வலுப்பட்டிருக்குது. அதோடு தி.மு.க.வில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ராஜ்யசபாவுக்கு அனுப்பி பல ஆண்டுகள் ஆகிவிட்ட தால், தென்மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்து தி.மு.க பிரமுகர் ஒருவரை எம்.பி.யாக்குவது பற்றியும் தலைமை ஆலோசித்துக் கொண்டிருக்குதுங்க தலைவரே..''

""அப்படின்னா பா.ம.க.வுக்கு?''

""தன் அன்புமகன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கணும்ங்கிறதுக்காக தி.மு.க மீதான கடும் விமர்சனங்களையெல்லாம் ராமதாஸ் குறைச்சிட்டார். தி.மு.க அரசை பாராட்டிப் பேசும் பா.ம.க.வின் இரண்டாம்மட்ட தலைவர்கள் அடிக்கடி கலைஞரையும் சந்திக்கி றாங்க. அ.தி.மு.க 2 இடத்திலுமே போட்டியிடும் நிலையில், தி.மு.க.வில் சான்ஸ் கிடைத்தால் மட்டுமே உண்டு என்கிற நிலைமையில் பா.ம.க இருக்குது. கலைஞர் எப்படியும் சீட் தருவார்ங்கிற நம்பிக்கை பா.ம.க.வுக்கு இருந்தாலும், காங்கிரஸ் தலைமையின் எண்ணத்தை தெரிந்துகொண்டு முடிவெடுக்கலாம்ங்கிறது தான் தி.மு.க.வோட நிலை.''

""போன முறையே நம்ம டெல்லி சோர்ஸ் மூலம் இது பற்றி பேசியிருந்தோமே.''

""சோனியாவிடம் தி.மு.க. தரப்பு இந்த விஷயத்தைக் கொண்டு போனதும், டெல்லியில் காங்கிரஸ் "கோர்' கமிட்டி கூட்டப்பட்டிருக் குது. அதில் கலந்துகொண்ட காங் கிரஸ் தலைவர்கள், "2009 எம்.பி. தேர்தலில் 7 சீட் கேட்ட பா.ம.க.வுக்கு கலைஞர் 6 சீட் உறுதிசெய்தார். நேரில் வந்து 1 சீட் பற்றி பேசலாம்னு சொன்னப்ப, அறிவிச்சாதான் வரு வோம்னு பா.ம.க. சொல்லிடிச்சி. நம்ம கூட்டணியில் 5 வருசம் பா.ம.க. இருந்ததால, அதை இழக்க வேணாம்ங்கிற எண்ணத்தில், காங் கிரசுக்கு கலைஞர் ஒதுக்குற சீட்டில் ஒன்றைத் தர்றோம்னு சொல்லியும் அவங்க கடைசிநேரம் வரைக்கும் மந்திரிபதவியை அனுபவிச்சிட்டு கூட்டணிமாறி போயிட்டாங்க. இப்ப வேற வழியில்லாமல் வர்றாங்க. அதோடு, இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயுடன் சேர்ந்து ஊழல் வழக்கில் கைதான ஜிதேந்தர் சிங் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரிச்சிக்கிட்டிருக்குது. இந்த நேரத்தில் எதற்கு ராஜ்யசபா சீட். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வந்தால் கலைஞர் சீட் தரட்டும். அதற்காக இப்பவே ராஜ்யசபா தரணும்னு பா.ம.க. நிபந்தனை போட்டு அதை ஏற்றுக்கொண்டால், நம்ம கூட்டணி பலவீனமா இருக்கிறதா ஆயிடும்'னு சொல்லியிருக்காங்க. சோனியாவும் ஆமோதிச்சிருக்கிறார். இதை யடுத்து, பா.ம.க.வுக்கு சீட் தருவதை சோனியா விரும்பலைங் கிற தகவல் தி.மு.க. தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதா டெல்லி வட்டாரத்தினர் சொல்றாங்க.''

""செல்வகணபதிக்கு எம்.பி. சீட், முத்துசாமிக்கு தி.மு.க. வில் இடம்னு அ.தி.மு.க. பக்கம் இருப்பவங்களை ஈர்க்கும் வகையில் ஆளுங்கட்சி விரித்திருக்கும் வலை ஸ்ட்ராங்கா இருக்குதே?''

""தலைவரே.. .. முத்துசாமியை தி.மு.க பக்கம் கொண்டு வரும் அசைன்மென்ட்டை முனைப்பா செய்தவர் துணை முதல்வர் ஸ்டாலின்தான். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடி அ.தி.மு.க.வில் ஆக்டிவ்வா இருக்கும் பிரமுகர்களை மொத்த மா தி.மு.க. பக்கம் கொண்டு வந்திடணும்ங்கிறதுதான் அவ ரோட டார்கெட்டாம். கே.கே.எஸ்.எஸ்.ஆர், எ.வ.வேலு, கருப்ப சாமிபாண்டியன், செல்வகணபதின்னு அ.தி.மு.க.விலிருந்து வந்தவங்களெல்லாம் தன்னிடம் காட்டும் விசுவாசத்தைப் பார்த்துட்டுத்தான் ஸ்டாலின் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். முத்துசாமியைத் தொடர்ந்து கரூர் சின்னசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நெல்லை பாப்புலர் முத்தையான்னு அ.தி.மு.க. புள்ளிகள் பலரும் தி.மு.க.வோடு பேசிக்கிட்டிருக்காங்களாம்.''

""ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடகா ஹைகோர்ட்டில் மறுபடியும் தள்ளிப்போயிட்டதால நொந்து போன நித்யானந்தா ஜெயிலிலே புலம்பிக்கிட்டிருக்காராமே?''

""ஆசிரமத்திலிருப்பவங்களை ஜெயிலுக்கு வரச்சொல்லி சந்தித்து, "என்னதான் நடந்துக்கிட்டிருக்குது. என்னை உள்ளே வச்சி வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கீங்களா?'ன்னு அழுதுகிட்டே புலம்பியிருக்காரு நித்யானந்தா. எந்தக் குற்றச்சாட்டும் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்த நிலையில், கேஸை விசாரிக்கும் கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு இன்னும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதால அதையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய இருக்காங்களாம். நித்யானந்தாவுக்கு பெயில் கிடைக்குமா... கிடைக்காதாங்கிற சந்தேகம் தொடர்ந்துகிட்டேதான் இருக்குது. இதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.''

No comments:

Post a Comment