Saturday, May 29, 2010

பெண்கள் தொடர்பு! ஆள் கடத்தல்!



திருச்சி ஐ.ஜி. வன்னியப் பெருமாளை சந்தித்து புகாரை நீட்டியபடி கலங்கிய கண்களோடு சொன்னார் கல்யாண சுந்தரம். ""சார்... உங்க டிபார்ட்மெண்ட் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் என் மனைவியைக் கடத்திச் சென்று மறைத்து வைத்துக் கொண்டு என்னையும் மிரட்டுகிறார் சார்!''.

அரியலூர் எஸ்.பி. நஜ்மல்கோடா தலைமை யில் போலீஸ் விசாரணை தொடங்குமுன் நமது விசாரணை தொடங்கியது.

இன்ஸ் கோவிந்தராஜை, காவல்துறை அதி காரிகளும், திருச்சி, புதுக்கோட்டை அரசியல்வாதி களும் "மாவட்டம் கோவிந்தராஜ்' என்றுதான் அழைக்கிறார்கள். போலீஸ் வேலைக்கு தேர்வாகு முன்பு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் புதுக் கோட்டை மா.செ.யாக இருந்தவர் கோவிந்தராஜ். எம்.ஜி.ஆர். இறந்தபோது, தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு அழுதவர்.

திருச்சி எம்.பி. குமாரின் அக்காவைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருச்சி காஜாமலை கிரசெண்ட் தெருவில் பிரமாண்டமான பங்களா கட்டியிருக்கிறார் இன்ஸ் கோவிந்தராஜ். அந் தப் பங்களா மாடியில்தான் எம்.பி. குடியிருக்கிறார்.

""திருச்சி மா.செ. பதவிக்கு குறிவச்சிருக் கிறார். கிடைத்தால் இன்ஸ்பெக்டர் வேலையை ராஜினாமா செய்துவிடுவார். ரெண்டு மூணு முறை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுரேஷ் குமார் முயற்சி செய்தும் கோவிந்தராஜ் எஸ்கேப் ஆகிவிட்டார்!'' என் கிறார் சக இன்ஸ் ஒருவர்.

பிரச்சினை என்று பெண்கள் புகார் கொடுக்கவந்தால்... தூண்டில் போட ஆரம்பித்து விடுவார் இவர் என்று சில சம்பவங்களை சொன்னார் கள் பாடாலூர் ஏரியா காக்கிகள் சிலரே. அந்தச் சம்பவங்களில் சில...

திருச்சி காவல்துறை அமைச்சுப் பணி யாளராக இருந்து ஓய்வு பெற்ற அசோக் சீனி வாசன் என்பவரின், மணமான மகள் பிரியா, புகார் கொடுப்பதற்காக இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிடம் வந்தார். மகளிர் காவல ரான இந்தப் பிரியாவிற்காக அக்கறை எடுத் துக் கொண்ட இன்ஸ்பெக்டர்... பிரியாவுக்கும் அவர் கணவருக்கும் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தி, அவர் கணவரை மனநோயாளி யாக்கி தெருவில் அலையவிட்டு விட்டு, பிரியா வுக்கு கே.கே.நகரில் ஒரு வீடு எடுத்துக் கொடுத் தார். இதைக் கேள்விப்பட்ட இன்ஸ்பெக்ட ரின் மனைவி, மகளிர் போலீஸ் பிரியாவின் வீட்டுக்குப் போய் கட்டிப் புரண்டார்.

ஐயப்பா நகரில் ஒரு ஹவுஸ் ஓனரான பெண்மணி தன்னிடம் கடையை கிரயம் வாங்கிய எஸ்.டி.டி.பூத் ராஜலட்சுமி என்ற பெண்மணி, பணம் தராமல் மோசடி செய்துவிட்டார் என்று புகார் கொடுத்தாராம். குற்றம் சாட்டப்பட்ட ராஜலட்சுமியும், இந்த ராஜலட்சுமி தங்கையும் இன்ஸ்பெக்டர் வாங்கிக் கொடுத்த தென்றல் நகர் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் ஏரியாவில் இவர் இன்ஸ்பெக்டராக இருந்தபோதுதான் பா.ஜ.க. சந்திரசேகர் மர்மமாக இறந்து போயிருக்கிறார். பா.ஜ.க. பிரமுகரின் அன்பிற்கினியவராக இருந்த மஞ்சுர வள்ளி மாமியின் பெய ரில்தான் தனது ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தியிருக்கிறார் இன்ஸ். இப்படி பல பல சம்பவங்களைத் தாராளமாக இன்ஸ்பெக்டர் மீது சுமத்து கிறார்கள், இதே காக்கி வட்டாரத்தினர். கடைசியாகத்தான், அரியலூர் மாவட்டம் செந்துறை கல்யாண சுந்தரத்தின் புகார்.

""கோவிந்தராஜ் பாடாலூர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது ஒரு புகார் கொடுப்பதற்காக நானும், என் மனைவி இளவரசியும் என் அக்காவும் போனோம். அந்தப் பிரச்சினையை முடித்துத் தரு கிறேன் என்று அடிக்கடி வீட்டுக்கு வந்தார் இன்ஸ்பெக்டர்.

நான் வேலைக்காக வெளிநாடு சென்றதும், என் வீட்டுக்கு அடிக்கடி வருவதும், என் மனைவியோடு செல் ஃபோனில் பேசுவதுமாக இருந்திருக்கிறார். திடீர் என எனக்கு போன் செய்த என் மனைவி, இன்ஸ்பெக்டர் டார்ச்சர் செய்கிறார் உடனே வாங்க என்று போன் செய்தவள், நான் வருவதற்குள் என் மனைவியையும் குழந்தையையும் கடத்திக் கொண்டு போய்விட்டார். என் மனைவிக்கு போன் செய்தேன். அம்மு என்கிற நந்தினிதான் என் மனைவியின் செல்ஃபோனில் என்னிடம் பேசினார். திருச்சி கருமண்டபத் தில் இருப்பதாகச் சொன்னார் நந்தினி. நான் இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு கெஞ்சி னேன். "நந்தினி வீட்டில் இருக்கிறாள் உன் மனைவி... போய் கூட்டிப் போ' என்றார். முக வரியை தெரிந்து கொண்டு அங்கே போனேன். அந்த வீட்டுக்குள் இருந்து வந்த என் காதல் மனைவி இளவரசி, எங்கள் குழந்தை அருந்ததியை என்னிடம் கொடுத்துவிட்டு, "என்னால் இப்போது உங்களோடு வரமுடியாது. என் சூழ்நிலை அப்படி' என்று அழுது கொண்டு சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள். பின்பக்கமாக எங்கேயோ அவளைக் கடத்தி விட்டார்கள். மீண்டும் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் என்னை மிரட்டுகிறார்!'' நடந்ததை எல்லாம் கோர்வையாக சொன்னார் கல்யாணசுந்தரம்.

கல்யாணசுந்தரம் புகார் கொடுத்தது தெரிந்ததும் ""என் வீட்டு வேலைக்காரி இளவரசி, கணவரிடம் செல்வதாகக் கூறி விட்டுப் போனாள். அங்கே வரவில்லை என்கிறார் கணவர். அவளை கண்டுபிடித்துக் கொடுக்கவும்!'' என்று கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் நந்தினி. மீண்டும் புகார் கொடுப்பதற்காக அரியலூர் எஸ்.பி.நஜ்மல்கோடா அலுவலகம் சென்ற கல்யாண சுந்தரத்தை ஒரு பகல் முழுக்க ஒரு அறையில் உட்கார வைத்திருந்தார்கள்.

இதற்கிடையில் 4 போலீசார், 6 வக்கீல்கள், ஒரு காரில், இளவரசியை எஸ்.பி.அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்கள். வேகமாக இறக்கப்பட்ட இளவரசி ""என் கணவர் என்னை சந்தேகப் பட்டு அடித்தார். அவரோடு வாழப்பிடிக்காமல் நான் போய்விட்டேன்'' என்று எஸ்.பி.யிடம் வாக்குமூலம் கொடுத்துவிட்டு வந்த காரில் ஏறிப் பறந்து விட்டார்- போலீஸ் + வக்கீல்களுடன்.

இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜை தொடர்பு கொண்டு, அவர் மீது கூறப்படும் சம்பவங்களையும், இளவரசி பிரச்சினையையும் கேட்டோம்.

""யாரோ திட்டமிட்டு பரப்புகிறார்கள். இளவரசி என்ற அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது அத்தனையும் அபாண்டம்!'' என்றார். மீண்டும் தொடர்பு கொண்டோம். ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அரியலூர் மாவட்டம் கீழ்பளூர் காவல் நிலையத்திற்கு போன் செய்தோம்.

""இன்ஸ்பெக்டர் 20 நாட்களாக விடுமுறையில் இருக்கிறார்!'' என்றார்கள்.

No comments:

Post a Comment