
shockan.blogspot.com
தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சசிகுமார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் வைபவ். சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் திரையை பகிர்ந்து கொள்பவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்.
கிரீடம் இயக்குனர் விஜய்யின் தந்தையான இவர் சசிகுமாரின் படத்தில் மாநில அமைச்சராக நடிக்கிறார். நகரத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் அரசியல் நிகழ்வுகளை சசிகுமார் அளவுக்கதிகமாக தொட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
படத்தில் இன்னொரு மாநில அமைச்சராக நடிக்க தயாரிப்பாளர் ஞானவேலை கேட்டிருக்கிறார்களாம். போகிற போக்கைப் பார்த்தால் ராசு மதுரவனை சசிகுமார் பீட் பண்ணுவார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
No comments:
Post a Comment