Saturday, May 1, 2010

இருபது லட்சம் செலவில் மது பாட்டில் செட்.. மயக்கிய மேக்னாநாயுடு!


shockan.blogspot.com

ஆர்.கே வேர்ல்ட் தயாரிக்க, ஆர்.கே, சதா, திவ்யா விஸ்வநாத், மன்சூர் அலிகான், இளவரசு, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க, பி வாசு இயக்கும் 'புலிவேஷம்' படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது.


'புலிவேஷம்' படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நவரச நாயகன் கார்த்திக்கும், சிறிய இடைவெளிக்குப் பிறகு சதாவும் நடிக்கிறார்கள் என்ற சிறப்போடு.. மேலும் இன்னொரு சிறப்பாக இணைந்திருக்கிறார் மேக்னா நாயுடு...

'வீராசாமி', 'வைத்தீஸ்வரன்' படங்களில் நடித்தவர்.... பாலிவுட் கவர்ச்சிப் புயல் மேக்னா நாயுடு. பாலிவுட்டிலும், தெலுங்கிலும் ரவுண்ட் வரும் மேக்னா சமீபத்தில் "குட்டி" படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு கலங்கடித்தவர்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், கவிஞர் அண்ணாமலையின் போதையூட்டும் வரிகளில் உருவாகியுள்ள

''டாஸ்மார்க் சரக்குடா என்னை
பக்குவமா கலக்குடா...
கண்ணு ரெண்டும் போதைடா...
மது விலக்கு அரசு போடுமா..''

என்ற பாடலுக்கு ஆடி கிறங்கடித்தார் மேக்னா நாயுடு..

மேக்னாவின் ஆட்டத்துக்காக ஏவிஎம்மில் இருபது லட்ச ரூபாயில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. தமிழ் சினிமாவில் இவ்வளவு காலி பாட்டில்களை கொண்டு மட்டுமே செட் போட்டது இதுவே முதல் முறையாக இருக்கலாம்... அவ்வளவு பாட்டில்கள்..

‘’கதைப்படி, ஹீரோ வில்லன்களை தேடி வரும் ஒரு நடன பார் வேண்டும். இதை வித்தியாசமாக கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் பார் ஐ வெறும் பாட்டில்களை மட்டுமே கொண்டு உருவாக்குவது என்று முடிவு செய்தோம்.. ஆனால் வெறும் பாட்டில்களைக் கொண்டு உருவாக்குவதில் நிறைய சிக்கல் உண்டு. பாட்டில்களை அவ்வளவு சீக்கிரம் அடுக்கி செட் போட முடியாது. வழுக்கும். மேலும் அவ்வளவு பாட்டில்கள் எங்கு வாங்குவது? கிட்டத்தட்ட ஒரு வாரம் அலைந்து திரிந்து பாட்டில்கள் கலெக்ட் பண்ணி, சின்ன சின்ன கயிறுகளால் கட்டி அதன் மேல் பேஸ்ட்டினால் ஒட்டி இந்த செட்டை உருவாக்கினோம்’’... என்றார் ஆர்ட் டைரக்டர் ஜி.கே.

முழுக்க முழுக்க காலி மதுப் பாட்டில்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செட்டில், நடன இயக்குனர் ஸ்ரீதருடன் மேக்னா நாயுடு ஆட்டம் போட்டார்.

வேகமான பாடல் என்றால் கூப்பிடுங்கள் ஸ்ரீதர் மாஸ்டரை எனும் கோலிவுட்டில்... இது அவருக்கு இன்னொரு நாக்க மூக்க! இப்பாடல் வேகத்துக்கு ஆடி மேக்னா நாயுடு இரண்டு முறை மயங்கி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

பாடலின் வேகத்துக்கு ஆடி மயங்கி விழுந்தாலும், ôமேக்னா கிளாமரில் மயக்கி விட்டார். இந்தப் படத்துக்குப் பிறகு கவர்ச்சிக் குத்துப்பாடலா.. கூப்பிடுங்கள் மேக்னாவை என்ற நிலை உருவாகப் போகிறது என்றார் நடன இயக்குனர் ஸ்ரீதர்.!

1 comment:

  1. என்ன சாரு நீங்க உங்க வெப்சைட்டிலை புரா பொம்பிளை மேட்டராயே போடுறிங்களே நீங்க யாரு சார். உங்களுக்கும் இந்த சம்பவங்களுக்கும் ஏதாவது தொடா்புகள் உண்டா அல்லது நீங்களும் இப்படியான முயற்சிகளிலை இறங்கபோகிறீா்களா?

    ReplyDelete