Thursday, May 27, 2010

""போராட்டம் ஓயாது'' -கேணல் ராம்


shockan.blogspot.com
சுதந்திர தாகத்துடன் தமிழீழ பெரும் பரப்பின் மலைக்காடுகளில் ஆயுதப் போ ராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண் டிருக்கும் கேணல் ராம் தலைமையிலான விடுதலைப்புலிகள் பிரிவினர், தமிழகப் பத்திரிகையாளர் பாண்டியனின் தாகம் தணிக்கத் தண்ணீர் கொடுத்தனர். சுவை யான தண்ணீர் என்கிற பாண்டியன், அது சுனை நீர் என்று புலிகள் தெரிவித்ததை நம்மிடம் பகிர்ந்துகொண்டு, காட்டில் கேணல் ராமுடன் தொடர்ந்த உரை யாடலை விளக்க ஆரம்பித்தார்.

பெரிய நாட்டின் உளவுத்துறை தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாக ராம் தெரிவித்ததும் நான் அவரை உற்று நோக்கினேன். ""உங்கள் பார்வையின் அர்த் தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அது எந்த நாடு என்று இப்போது சொல்வது எந்தவகையிலும் நல்லதல்ல. போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில், புலிகளின் கப்பல்படைகளையும் எங்களுக்கு ஆயுதம் கொண்டு வந்த கப்பல்களையும் சிங்கள ராணுவத்துக்கு அடையாளம் காட்டிய நாடுகளில் ஒன்றுதான் இப்போது எங்களுக்கு உதவ முன்வருகிறது. இன்னும் சில நாடுகளும் உதவிக்கு வருகின்றன.

எங்கள் தலைவர் (பிரபாகரன்) சொல்வதுபோல எந்தவொரு வெளிநாடும் எங்கள் மண்ணின் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்த ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் நோக்கம், சிங்களப் படைகளைச் சிதறடிக்க வேண்டும் என்பதுதான். அதற்கேற்ற வகையில் வலிமையான புலிப்படையை மறுநிர்மாணம் செய்வதில்தான் கவனம் செலுத்துகிறோம்'' என்ற கேணல் ராம், தனது தலைவரின் பெருமைகளைப் பகிர்ந்து கொண்டார்.

""மலையகத் தமிழரான கேணல் பால்ராஜ் தலை மையில் சில ஆயிரம் புலிகளை மட்டும் வைத்துக்கொண்டு, 40ஆயிரம் பேரைக் கொண்ட சிங்கள ராணுவத்தைத் தலைவர் எதிர்கொண்டு வெற்றி பெற்ற வரலாற்றை, உலக சரித் திரத்தின் எந்தப் பக்கத் திலும் பார்க்க முடியாது. கட்டுக்காவல் அரண்கள் மிகுந்து காணப்பட்ட ஆனையிறவு முகாமை சிங்கள ராணுவத்திட மிருந்து கைப்பற்றி புலிக்கொடியைப் பறக்கவிடவேண்டும் என்று தலைவர் முடிவு செய்ததும், கேணல் பால்ராஜிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத் தார். பால்ராஜ் அண்ணனின் வீரமும் வியூகமும் அசாதாரணமானது.

தலைவரின் கட்டளையையும் விருப்பத்தை யும் நிறைவேற்றுவதை மட்டுமே புலிப்படையின ரின் இலக்காக மாற்றினார். 72 மணி தியாலத் தில் ஆனையிறவு முகாமிலிருந்த சிங்கள ராணு வம் சிதைக்கப்பட்டது. ஆயிரம் பேருக்கு மேல் சிங்கள ராணுவத்தினர் மாண்டனர். உயிர் பிழைத்தால் போதும் என்று ராணுவத்தை விட்டே ஓடிய சிங்களவர்கள் பலபேர். தலைவர் வகுத்து தந்த வியூகத்தின்படி ஆனையிறவு முகாமைக் கைப்பற்றி அங்கே புலிக்கொடியைப் பறக்க விட்டார் பால்ராஜ் அண்ணன். இப்படிப் பட்ட தலைவரைப் பெற்றதற்காக ஈழத் தமி ழினத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பெருமைப் படுகிறோம். உலகெங்கும் உள்ள தமிழர்களின் வீரமிக்க முகவரி அவர்தான்'' என்றார் உணர்ச்சிப்பூர்வமாக.

அவரருகில் நின்ற விடுதலைப்புலிகள், ""முள்ளிவாய்க்கால் கொடூரத்தினால் எங்களை முற்றிலுமாக அழித்துவிட்டதாக ராஜபக்சே அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையில்லை என்பதை நாங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் தலைவர் பிரபா கரன் ஒரு விஷயத்தை அடிக்கடிச் சொல்வார். ஒரு இடத்தில் அநியாயம் நடப்பதை உன்னால் தடுக்க முடியாவிட்டால் நீ உயிருடன் இருப்ப தற்கு அர்த்தமேயில்லை என்று சொல்வார். அதனை நாங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக் கிறோம். உணர்வும் வீரமுமிக்க தமிழ் இளைஞர் களைத் திரட்டி, சிங்கள ராணுவத்தைச் சிதறடிப் போம்'' என சூளுரைத்தனர்.

கேணல் ராம் அதை ஆமோதிப்பதுபோலத் தலை யாட்டினார். நான் அவரிடம், தமிழீழ விடுதலைக்கான ஆயு தப் போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து வரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான முயற்சிகளை உருத்திரகுமாரன் மேற்கொண் டிருப்பது பற்றி என்ன நினைக் கிறீர்கள்? என்றேன். சட்டென அவரிடமிருந்து பதில் வெளிப் பட்டது.

தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றனர். அதில் உருத்திரகுமாரன் மேற்கொண்டி ருக்கும் நாடு கடந்த தமிழீழம் என்பது மிகச் சிறந்த முன்முயற்சி. நீண்ட நெடுங்காலமாக எங்கள் தேசியத் தலைவருடன் தொடர்புடையவர். தலைவரின் விருப்பத்தின்படியே செயல்படுபவர். போர்க்காலத்தி லேயே புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் உள்ளிட்ட தமிழர்களை ஒருங்கிணைத்ததுடன், அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளிலும் ஈழத்தின்பால் உள்ள நியாயத்தை உணரச் செய்தவர். எமது அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தை புலம் பெயர்ந்துள்ள எம் மக்கள்தான் தாங்குகிறார்கள். அவர்களை ஒருங் கிணைத்து, நாடு கடந்த தமிழீழம் என்ற கோட் பாட்டை உருவாக்குவது விடுதலைப் போராட்டத் திற்கு வலு சேர்க்கும். காட்டுக்குள் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்துகிறோம் என்றால், உருத்திர குமாரன் நடத்துவது உலகளாவிய உரிமைப் போராட்டம்.

நாங்கள் ஆயுதத்தை எடுத்திருப்பதற்கு காரணம் சிங்கள அரசுதான் என்பதையும், நாங்கள் பயங்கர வாதிகள் அல்ல என்பதையும் உலக அரங்கில் எடுத் துரைக்க உருத்திரகுமாரனின் முயற்சி பலனளிக்கும். போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராஜபக்சே அரசை சர்வதேச சமுதாயத்தின் முன் குற்றம்சாட்டி நிறுத்துவதற்கு நாடு கடந்த தமிழீழம் என்ற கோட்பாடு உதவிகரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம்'' என்றார் கேணல் ராம்.

சந்திப்பு நேரம் நீண்டுகொண்டே இருந்தது. தொடர்ச்சியாக ஒரே இடத்தில் இருப்பது போ ராளிகளுக்கு உகந்ததல்ல என்பதால் மேலும் சில கேள்விகளுடன் நேர்காணலை நிறைவு செய்ய நினைத்தேன். கேணல் ராமிடம், உலகம் தழுவிய அளவில் தமிழீழத்தின் தேவையை உணர்த்தும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணத்தில் இப்போது அந்நிய கலாச்சாரம் மேலோங்கி தமிழர் பண்பாட்டைச் சீரழித்து வருகிறதே என்றேன். கேணல் ராமின் முகத்தில் கவலைச் சுருக்கங்கள் தெரிந்து மறைந்தன.

""திட்டமிட்டு பண்பாட்டுச் சீரழிவை மேற் கொள்கிறது இலங்கை அரசு. மதவழிபாடுகளைக் கூட தூய தமிழில் நடத்திவந்த யாழ் மண்ணில் பார், டிஸ்கோ உள்ளிட்டவற்றை சிங்கள அரசே திட்டமிட்டு நுழைத்து வருகிறது. இதனை எதிர்த்து, மே 1-ந் தேதியன்று யாழ் நகர மக்கள் குழு நடத்தவிருந்த பேரணிக்கான முயற்சிகளை இலங்கை அரசு முறியடித்துவிட்டது. இந்தக் கலாச்சார சீரழிவுகளை முறியடிக்க வேண்டும் என்றால் புலிகள் இயக்கம் பலம் பெற்றால்தான் முடியும். அதற்கு வடக்கு-கிழக்கு என இரு பகுதியிலும் உள்ள மக்களின் ஆதரவை நாங்கள் வேண்டி நிற்கிறோம்'' என்றார்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் அடையாளங்களே இருக்கக்கூடாது என்ற வெறி யுடன் இலங்கை அரசு நடத்தி வரும் சிங்களக் குடியேற்றம் பற்றியும் அவரிடம் கேட்டேன். ""இரு மாகாணங்களிலும் தமிழர்களின் குடியேற்றத்தைத் தடுத்து, அவர்களை சுத்தமாகத் துடைத்தெறிந்து விடவேண்டும் என இலங்கை அரசு நினைக்கிறது. இதுதான் இனப்பிரச்சினையின் மூல சதியே. இதுபோன்ற அரசாங்க அக்கிரமங்களால் எமது இயக்கம் வீழ்ந்துவிடாது. எம்மை வீழ்த்திவிடலாம் என நினைத்து, சிங்களக் குடியேற்றத்தை மறுபடி யும் நிகழ்த்துகிறது. இந்தக் கொடுமையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சிங்கள அரசின் செயல்பாடுகள் புலிகளின் மறு எழுச்சிக்கு வழிவகை செய்யும். இலங்கையில் பாரிய போர் அனர்த்தம் ஏற்படும். எங்கள் இயக்கம் வலுப் பெற்று சிங்கள ராணுவத்தை எதிர்கொள்கின்ற வகையில் அனைத்து தரப்பு தமிழீழ மக்களின் உதவியை எதிர்பார்க்கிறோம். புலிகளின் தாகமும் தணியாது. விடுதலை கிடைக்கும்வரை எங்கள் போராட்டமும் ஓயாது'' என்ற கேணல் ராம், ""உங்களைச் சந்திப்பதற்காகத்தான் நாங்கள் 20 கி.மீ. தூரம் பயணித்து வந்தோம். இது ஒரு முக்கியமான சந்திப்பு. தாய்த்தமிழக உறவுகளை என்றும் நாங்கள் மறக்கமாட்டோம். எங்கள் போராட்டம் தொடர் கிறது என்பதை தாய்த்தமிழக உறவுகளிடம் சொல்லுங்கள்'' என்று நமக்கு விடைகொடுத்தார்.

""அவருடன் இருந்த புலிகளில் ஒரு சிலர் மட்டும் என்னுடன் பயணித்தனர். 4 கி.மீ. தூரம் நடந்ததும் காட்டுக்கு வெளியே வந்தோம். ஆயுதம் தாங்கியிருந்த அந்த விடுதலைப்புலிகள், "சாலையை அடைந்துவிட்டோம். இனி எங்களால் உங்களுடன் பயணிக்க முடியாது. உங்களை அழைத்துச் செல்ல ஒரு வேன் வரும். பத்திரமாகச் செல்லுங்கள்' என்று அன்புடன் வழியனுப்பினர். சாலையில் காத்திருந்த வேளையில், ஒரு வேன் வருவது தெரிந்தது. அதில் ஏறுவதற்கு நான் ஆயத்தமானேன்.

அருகில் அந்த வேன் வந்தபோதுதான், அது இலங்கை ராணுவத்தின் உளவுப்பிரிவு வேன் என்பது தெரிந்தது. அவர்கள் கையில் சிக்கினால், அருகில் இருக்கும் ராணுவ முகாமுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். அருகில்தான் புலிகள் இருக் கிறார்கள் என்பதையறிந்து கடும் தாக்குதலைத் தொடங்கிவிடுவார்கள். என்னை சந்தித்ததன் மூலம் கேணல் ராம் தலைமையிலான படையினருக்கு எந்த ஆபத்தும் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக, காட்டுப்பகுதியைச் சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பும் சுற்றுலா பயணி போல சாலையோரமாய் நடக்க ஆரம்பித்தேன். ராணுவ வேன் என்னைக் கடந்து சென்றது.

அதன்பிறகு, 10 நிமிடங்கள் கழித்து இன்னொரு வேன் வந்தது. என்னருகில் நிறுத்தி, கதவைத் திறந்து, ஏறிக்கோங்க என்றதும் அதில் ஏறிக்கொண்டேன். பாதுகாப்பாகவும் வெற்றிகர மாகவும் என்னுடைய பயணம் நிறைவடைந்தது'' என்றார் பத்திரிகையாளர் பாண்டியன்.

உணர்வுமிக்க போராட்டம் ஈழத்தில் இன்னும் ஓயவில்லை... ஓயாது என்பதைக் காட்டுகிறது அவரது அனுபவம்.

No comments:

Post a Comment