Monday, May 31, 2010

குஷ்புக்குப் போதையூட்டிய நடிகை!


shockan.blogspot.com

எஸ்.ஏ. சந்திரசேகரன் ஸ்டார் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பாக "வெளுத்து கட்டு' என்ற படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரது உதவியாளர் சேனாதிபதி மகன் இயக்குகிறார்.

""என் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில், இளைஞர்களுக்கு நம்பிக்கை யூட்டும் 15 சம்பவங்களின் தொகுப்புதான் "வெளுத்து கட்டு' கதை.

கலாம் சொல்வதைப்போல கனவு காணுங்கள். அதை நிறைவேற்ற திட்டமிடுங் கள். திட்டத்தை நிறைவேற்ற கடுமையாகப் போராடுங்கள். வெற்றி நிச்சயம்.

நான் இளமையில் பண்ணாத பொறுக் கித்தனமில்லை. பண்ணாத சேட்டை இல்லை! அப்படி இருந்தபோதிலும் வாழ்க்கையில் பெரிய ஆளாகிக் காட்டணும் என்கிற வெறி இருந்தது. அது ஒரு நாள் தங்கச்சிமடத்தி லிருந்து மதுரைக்குத் தள்ளிவிட்டது. சென்னைக்குக் கிளம்ப திட்டமிட்டேன். கையில் காசில்லை! கனவுக்கு காசு தடையா? இல்லை; டிக்கெட் எடுக்காமலே ரயிலேறிவிட்டேன். திருச்சியில் டி.டி. இறக்கி விட்டு விட்டார். அடுத்தொரு ரயிலில் ஏறினேன். டி.டி. விழுப்புரத்தில் இறக்கி விட்டார். அடுத்த ரயிலில் ஏறினேன். செங்கல் பட்டில் பிடித்து இறக்கி விட்டார்கள். அங்கி ருந்து நடந்தே சென்னைக்கு வந்து போராடி, பட்டினி கிடந்து இயக்குநரானேன். இன்றைக்கு 68 படங்களை இயக்கியவ னாக- 26 படங்களைத் தயாரித்திருக்கிற வனாக உங்கள்முன் நிற்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் சீக்கிரமே விரக்தி அடைந்து சோர்ந்து போகிறார்கள். +2 தேர்வில் தோற்றால்கூட தற்கொலை செய்து கொள்கிறார்க்ள. கூடாது! மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அந்த நம்பிக்கைதான் "வெளுத்து கட்டு' ஆதார சுருதி.

எனக்கு ஓடுகிற குதிரைமேல் பந்தயம் கட்டி ஜெயிப்பது பிடிக்காது. புதுசா ஒரு குதிரையைத் தயார் செய்து சவாரி செய்யத்தான் பிடிக்கும். விஜயகாந்த், ரஹ்மான், சிம்ரன், விஜய் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள். இந்தப் படத்தின் ஹீரோ கதிர் பலமுறை வாய்ப்பு கேட்டு என்னிடம் வந்தார். ரொம்ப உயரமாக இருக் கிறார் என்று அவரை ஒதுக்கி விட்டு, அறிமுகமான ஒரு ஹீரோவை வைத்து ரெண்டு நாள் ஷூட்டிங் கும் போயிட்டேன். அப்பவும் கதிர் வந்தார். அவரது விடாமுயற்சி யைப் பார்த்து அவரை ஹீரோவாக்கினேன்.

இசையமைப்பாளர் பரணியை "பெரியண்ணா' படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். 24 படம் பண்ணிட்டார். ஆனாலும் அவருக்கு ஒரு தேக்கம். மீண்டும் வரும் திறமை உள்ளவர் பரணி என்று அவரை இசையமைப் பாளராக்கிட்டேன். படத்தின் நாயகி அருந்ததி தமிழ்ப் பொண்ணு. ஆனாலும் சரியா தமிழ் பேச வராது. அதனால கஷ்டப்பட்டு தமிழ் கத்துக்கச் சொல்லி டப்பிங் வரை பேச வெச்சேன்.'' இப்படி தன் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்கள் திரையில் பதிவாகிற மகிழ்ச்சியில் நீண்ட பிரசங்கமே செய்தார். (சுவாரஸ்யமாதான் இருந்தது!).

அருந்ததி அழகு எப்படி?

""ராதாவின் அழகும் சரிதாவின் நடிப்பும் கலந்த சாயலில் அருந்ததி எனக்குப் போதையூட்டினார். இவர் மாதிரி நிறைய தமிழ்ப் பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்'' என்று நாயகியைப் பற்றி சொன்னார் குஷ்பு.

எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி! ஆனா அருந்ததி தமிழ்ப் பொண்ணு இல்லை என்பது அவர் பேசும்போது வெளிச்சமாகி விட்டது!

ஆந்திராவில் பிறந்து, கர்நாடகாவில் வாழ்ந்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் குஷ்பு மாதிரி தமிழச்சிதான் அருந்ததி!

எப்படியோ... நடிப்புல வெளுத்துக்கட்டினா ஓ.கே.!

No comments:

Post a Comment