Saturday, May 29, 2010

பிஞ்சு மனதில் நஞ்சு!


சிவகாசியில் கல்லூரி மாணவியின் கண்ணில் கருப்புத் துணியைக் கட்டி காரில் கடத்திய வழக்கில், வயதுக்கு மீறிய செயலில் ஈடுபட்ட தாக, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறான் ஆறாவது வகுப்பு படிக்கும் சிவபாதமுத்து.

""சேர்க்கை சரியில்லைன்னா சின்னப் பசங்க எப்படி கெட்டுப் போவாங்கங்குறதுக்கு சிவபாதமுத்து சரியான உதாரணம். இந்தத் தெருவுல அவன் வயசுப் பசங்க யாருமே சிவபாதமுத்து கூட சேரமாட் டாங்க. ஏன்னா அவன் பழக்க மெல்லாம் இந்தத் தெரு வையே மிரட்டிக்கிட்டிருக் கிற விஷ்ணுபாண் டிங்குற ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் கூடத்தான். அந்த விஷ்ணு பாண்டி, செல்போன்ல ஆபாசப் படத்தக் காட்டுறதுலயிருந்து அத்தனை கெட்ட பழக்கத்தையும் சிவபாதமுத்துக்கு கத்துக் கொடுத்திட் டான். அதான், பொம்பளக் கடத்தல் வரைக்கும் இந்தச் சின்னப் பையனைக் கொண்டு போய் விட்ருக்கு'' என்றார் அவன் குடியிருக்கும் ஆவணி நாடார் தெருவில் வசிக்கும் மணிகண்டன். அதே தெருவில் உள்ளவர்கள் ""ஆமாங்க... போற வர்ற பொம்பள களயெல்லாம் அசிங்கமாப் பேசுவான் விஷ்ணுபாண்டி. அவன் மேல ஏற்கனவே ஒரு போலீஸ் கேஸ் இருக்கு. அவன் பண்ணுற தப்புக்கு பேரண்ட்ஸும் சப்போர்ட் பண்ணு றாங்க. அவன் பேச்ச கேட்டுக்கிட்டு இந்த சிவபாதமுத்து பெரிய பொம்பளைகளக்கூட பயமே இல் லாம "பின்னால' தட்டுவான். பிஞ்சுலயே பழுத்துட்டானேன்னு அவன் வீட்டுல சொன்னப்ப அவங்களும் கண்டுக்கல. இப்பப் பாருங்க இந்த ரெண்டுபேரும் போலீஸ்ல மாட்டிருக்கானுக...'' என்றார்கள்.

கல்லூரி மாணவியை ஏன் கடத்தினார்கள்?

"என் லவ்வர்கிட்ட ஏதேதோ சொல்லி அவள என்கிட்டயிருந்து பிரிச்சிட்டா சபீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவளுக்கு சரியான பாடம் கற்பிக்கணும். என் கூட வாங்க...' என்று நண்பன் பிரவீன் சொன்ன மாத்திரத்தில், அவன் ஓட்டி வந்த காரில் ஏறி சபீதாவைக் கடத்த துணை போயிருக்கிறார்கள் விஷ்ணுபாண்டி, மதன், முத்துப்பாண்டி ஆகிய மூவரும். "பொடி யன் பொருத்தமானவன்' என சிவ பாதமுத்துவை விஷ்ணுபாண்டி பரிந்துரைக்க... சிவபாத முத்து பேச்சுக் கொ டுத்து சபீதாவை அழைத்து வர, வாயைப் பொத்தி காருக்குள் இழுத்துப் போட்டிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் 4 பேர், ஒரு பள்ளிச் சிறுவன் என இந்த ஐவரிடமும் 8 மணி நேரம் மாட்டிக் கொண்டு பரிதவித்த சபீதாவை, சிறுவன் சிவபாத முத்து படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கடத்தலின் போது நிகழ்ந் ததை அப்ப டியே சொல் லாமல், அம் மாணவி மற்றும் சிறுவனின் எதிர்காலத்தைக் கருத் தில் கொண்டு, "மாணவியின் பெற்றோரிடம் 5 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினார்கள்' என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

பட்டிமன்ற பேச்சாளர், ஆன் மிக சொற்பொழிவாளர், ஜோதிடர் என சதா பிஸியாக இருக்கும் விஷ்ணுபாண்டி யின் அம்மா அனுசுயாவை கைபேசியில் தொடர்பு கொண்டோம். ""வேலை வேலைன்னு நானும் என் வீட்டுக்கார ரும் அடிக்கடி வெளியூரு போவோம். அதான் புள்ளய சரியா கண்காணிக்க முடியல. அதன் பலனைத்தான் இப்ப அனுபவிக்கிறோம். இந்தத் தெருக் காரங்க சாதிவெறி பிடிச்சவங்க. நாங்க கலப்பு மணம் பண்ணிக்கிட்டவங்க. அதனால, என் மகன் விஷ்ணு பாண்டிகிட்ட "உன் அப்பன் யாரு தெரியுமா? இப்ப நீ போடுற இனிஷி யல் சரிதானா?'ன்னு அசிங்க அசிங்கமாக் கேட்டு அவன இப்படி முரடனா ஆக்கிட்டாங்க. "ஜோசியம் பார்க்கிறேன்னு சொல்லிக்கிட்டு உன் அம்மா எவன் எவன்கூடவோ படுக்குறான்'னு அவன் காதுபடவே சொன்னா அவன் எப்படி நல்லவனா வளருவான்?'' என்று தன் மகன் சிறைபட்டது குறித்து கவலைப்பட்டார். சிவபாதமுத்து வின் அம்மா சகுந்தலாவோ ""அவன் சின்னப்பய. அவனப் போயி தப்பா நடந்துகிட்டதாக சொல்றாங்க. எப்படி நம்புறது? இனிமே பெரிய பசங்க கூட சகவாசம் வச்சுக்கவே விடமாட்டேன்'' என்றார் பரிதாபமாக.

சிறுவன் சிவபாதமுத்து இனியாவது நல்வழிக்குத் திரும்ப வேண்டும்.


இன்னொரு சிறுவன்! வேறொரு வழக்கு!



ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஏதேனும் ஒரு கூலி வேலை செய்து, சேர்த்த பணத்தை படிப்புச் செலவுக்கு பயன் படுத்துவது வழக்கம். ராஜபாளையம்- சங்கர பாண்டியபுரத்தைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவன் சதீஷ்குமார் இந்த ரகமல்ல. விடுமுறை நாட்களை குஷியுடன் கொண்டாட, பணத் தேவைக் காக வீடு புகுந்து திருடுவான். அதுவும் தனக்குத் தெரிந்த வீடுகளில் யார் யார் வீட்டுச் சாவியை கதவு நிலைகளிலும், சன்னலிலும் வைத்துவிட்டுப் போகிறார்கள் என்பதை நோட்ட மிட்டு, அவர்கள் கதவைப் பூட்டிவிட்டு வெளியே சென்றபிறகு, வீட்டுக்குள் நுழைந்து திருடி விடுவான். இந்த விடுமுறையில் அவன் அப்படி திருடிய நகைகளின் மதிப்பு ரூ.2,82,000 என காவல்துறை சொல்கிறது. இப்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான் சதீஷ்குமார்.

No comments:

Post a Comment