Monday, May 31, 2010
"காமிராமேன்கள் இயக்குநராகக் கூடாது!''
shockan.blogspot.com
இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் "ரெட்டசுழி' படத்தைத் தொடர்ந்து வெளியிடத் தயாராக இருக்கும் படம்- "ஆனந்தபுரத்து வீடு'.
இந்தப் படத்தை கதை எழுதி இயக்கி இருப்பவர் நாகா.
திரைக்கதை- வசனம் எழுத நாகா நாடி இருப்பது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், சரத் ஹரிதாசன்.
நாகா பெரிய திரைக்கு வருவதற்கு முன் "மர்மதேசம்', "விடாது கருப்பு', "சிதம்பர ரகசியம்' உள்பட பல சின்னத்திரை தொடர்களை பாலசந்தர் நிறுவனத்துக்காக இயக்கி யவர். அந்தக் கதைகளெல் லாம் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனால் எழுதப் பட்டவை. அதனால் "ஆனந்த புரத்து வீடு' படத்தின் வசனத்தை வார்ப்பதில் இந்திரா சௌந்தர்ராஜனை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
கதை த்ரில் லரா?
""ஆமாம்; த்ரில் லர்தான். ஆனால் சஸ்பென்ஸ் இல்லாத த்ரில்லர். 90 சதவிகித படத்தை ஒரு வீட்டுக்குள்ளேயே முடித்து விட்டோம். ஏன்னா அந்த வீடும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரம்'' என்கிறார் இயக்குநர் நாகா.
இது பேய்க் கதையா?
ஆமாம்; நல்ல பேய்களின் கதை.''
தயாரிப்பாளர் (இயக்குநர்) ஷங்கர் படம் பார்த்தாரா?
""பார்த்தார்; பாராட்டினார். இன்னும் டெக்னிகல் பெர்பெக் ஷன் முடிந்தபின் யார் பார்த் தாலும் பாராட்டுவார்கள்'' என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் நாகா.
இனி பெரிய திரைதானா? சின்னத் திரைக்கு டாட்டாவா?
""இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லா விஷயங்களிலும் டீப்பான ஆய்வு மனப்பான்மை வந்துவிட்டது. அப்படி செய்த ஆய்வில், மணிமேகலை காவியத் தில் வரும் "அட்சய பாத்திரம்' என்கிற சிந்தனை கற்பனையா- இல்லையா என்பதை வைத்து சின் னத் திரைக்கு "அமுதசுரபி' என்ற மெகா தொடர் இயக்குகிறேன்.''
இந்தப் படத்தில் வியக்க வைத்த விஷயம்?
""சிறுவன் ஆர்யா. விசாகப்பட் டினத்திலிருக்கும் இந்தப் பையன் இந்தப் படத்தின் சூப்பர்மேன். பட ரிலீஸுக்குப்பின் பெரிய பெயரெ டுப்பான். அவ்வளவு ப்ரில்லியண்ட்!'' என்று குழந்தையைப் போல் குதூகலித்துச் சொல்கிறார் நாகா.
அடிப்படையில் காமிரா மேனான நாகா, ""படம் இயக்குவது என்றால் காமிராவைத் தொடக் கூடாது. கேமராவிற்குப் பின்னால் வந்துவிட்டால் ஆர்டிஸ்டுகளின் உணர்ச்சிகளைக் கவனிக்க முடியாது. அது படத்தைக் கெடுத்து விடும்'' என்று புது தத்துவம் சொல்கிறார்.
ஆனால் பலர் லைட்பாய் வேலையைத் தவிர எல்லா வேலை களையும் தானே செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவஸ்தைப் படுகிறார்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment