Saturday, May 29, 2010

செம்மொழி மாநாட்டுக்கு கைதிகள் எழுதிய...


உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான பணிகள் அனைத் தும் வேகமெடுத் துள்ள நிலையில், இம்மாநாட்டின் படைப்புகள் தேர்வுக் குழுவினரால் சிறைக் கைதிகளின் 6 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டி ருக்கின்றன. இந்த படைப்பு களின் சொந்தக்காரர்களான சிறைக்கைதிகளை செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்து கிறது சிறைத்துறை நிர்வாகம். இந்த சம்பவம், சிறைக்கைதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்... இதன் பின்னணிகளை விசாரித்தோம்.

செம்மொழி மாநாட்டின் பணிகளை கவனிக்க 24-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்தார் கலைஞர். இதில் ஆய்வரங்க கட்டுரைகள் தேர்வுக் குழுவும் ஒன்று. இத்தேர்வுக் குழுவிற்கு மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த தங்கள் படைப்பு களை யார் வேண்டுமானாலும் அனுப்ப லாம் என்று அறிவிப்பு செய்யப் பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழறி ஞர்கள் முதல் சாதாரணமானவர்கள் வரை எழுதிய ஆயிரக்கணக்கான படைப்புகள் குவிந்தன. இதில் தமிழக சிறைகளிலுள்ள கைதிகள் பலர் எழுதிய கட்டுரைகளும் அடக்கம்.

""பேராசிரியர் சிவத்தம்பி தலைமையிலான ஆய்வரங்க கட்டுரைகள் தேர்வுக்குழு, பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் ரமேசு (எண் 7230), ஐயங்கனி (எண் 8497), சூசைமரியான் (எண் 1175), கிருஷ்ணன் (எண் 8646), கல்கி மோகன் (எண் 1112), செல்வராசு (எண் 1000) ஆகிய 6 பேரின் படைப்புகளும் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்தது. இதனை பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், செம் மொழி மாநாட்டில் அறிவிப்பு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதுடன் படைப்புகளை எழுதியவர்களும் மாநாட்டில் அடையாளப் படுத்தப்படுவார்கள். அந்த வகையில், 6 ஆயுள் தண்டனை கைதிகளும் மாநாட்டில் கலந்து கொள்ள ஏதுவாக கோவை சிறைக்கு மாற்றவும் மாநாட்டில் கலந்து கொள்வதற்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும் அனுமதி கோரி சிறைத்துறைத் தலைவர் ஷியாம் சுந்தருக்கு கடிதம் எழுதினர் பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரிகள். ஆனால், இந்த அனுமதியை தராமல் நிராகரித்து விட்டார் ஏ.டி.ஜி.பி. ஷியாம் சுந்தர். இந்த சம்பவத்தை அறிந்து சிறைக்கைதிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்!'' என்கிறது சிறைத்துறை வட்டாரம்.

"பழந்தமிழர் அரசில் மக்கள் சுயாட்சி அமைப்பு' என்கிற தலைப்பில் ஆய்வு செய்துள்ள ரமேசு, "பழந்தமிழர் பண்பாட்டில் பெண்ணியம்' என்கிற தலைப்பில் எழுதிய ஐயங்கனி, "பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாறு' என்கிற தலைப்பில் எழுதிய சூசை மரியான், "இலக்கியம்' என்கிற தலைப்பில் ஆய்வு செய்துள்ள கிருஷ்ணன், "தமிழும் இந்திய மொழிகளும்' என்கிற தலைப்பில் எழுதிய கல்கி மோகன், "உலகின் முதல் மொழி தமிழ்' என்கிற தலைப்பில் எழுதிய செல்வராசு ஆகிய ஆறு ஆயுள் தண்டனை கைதிகளும் மொழி, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, அரசியல், கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றை பெரிய அளவில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

""தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் துவங்கி தற்கால இலக்கியங்கள் வரை தங்களது படைப்பு களில் ஆய்வு செய்துள்ளனர் ஆயுள் கைதிகள். தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பியல்புகளுக் கும் உலக இலக்கியங்களிலிருந்தும் உலகப் படைப்பாளிகளிடமிருந்தும் நிறைய ஆதாரங்களை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் இவர்கள். தமிழ் இலக்கியங்கள் மீது ஈர்ப்பும், நிறைய படித்தும் இருந்தால்தான் சிறந்த படைப்புகளை தர முடியும். அந்த தாக்கம் ஆயுள் கைதிகளின் கட்டுரைகளில் இருந்தது'' என்கின்றனர் தேர்வுக் குழுவினர்.

மொழியின் மீதும் இலக்கியத்தின் மீதும் பற்றுதல் கொண்ட ஆயுள் கைதிகளுக்கும் அவர்களது படைப்புகளுக்கும் ஏ.டி.ஜி.பி. ஷியாம் சுந்தரின் அனுமதி நிராகரிப்பால் சிக்கல் எழுந்துள்ள நிலையில், சிறைக் கைதிகளுக்காக பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ள அரசு சிறப்பு வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசிய போது, ""சிறைக் கைதிகளுக்குரிய ஆற்றலை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்துகிற வகையில் சிறைத்துறை நிர்வாகம் ஆரோக்கியமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான முடிவுகளும் உத்திரவுகளும்தான் நல்ல பலனைக் கொடுக்கும். தேர்வு செய்யப்பட்ட சிறைக் கைதிகளின் அறிவு சார்ந்த படைப்புகளை அங்கீகரிக்க விடாமல் மறுப்பது என்பது... சம்பந்தப்பட்ட சிறைக் கைதி களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதோடு குற்றங்கள் பெருகவே வழி வகுக்கும்.

"மெல்லத் தமிழ் இனி சாகும்' என்கிற சொற்றொடர் புழக்கத்தில் பயன்படுத்தப் படுகிற நிலையில், ஆயுள் தண்டனை கைதி களுக்குள்ளும் இலக்கியவாதிகள் இருப்பதை உலகறியச் செய்ய வைப்பதன் மூலம் தமிழை உயர்வுபடுத்த முடியும். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. தமிழக அரசு இதில் நேரடியாக தலையிட்டால்... ஆயுள் கைதிகள் செம்மொழி மாநாட்டில் மேடை ஏறும் வாய்ப்பு இருக்கிறது'' என்கின்றார்.

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து ஆய்வரங்க கட்டுரைகள் தேர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான ராஜேந்திரனிடம் கேட்ட போது, ""செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கு சிறைக்கைதிகள் யாரும் கட்டுரைகள் அனுப்பக்கூடாது என்கிற வரையறை ஏதும் இல்லை. யார் வேண்டு மானாலும் கட்டுரைகள் அனுப்பலாம். சிறைக்கைதிகள் எழுதிய கட்டுரைகள் சிறந்ததாக தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டிருந்தால், ஆய்வரங்கத்தில் அவர்கள் கலந்து கொள்ளும் வழி முறைகளை சிறைத்துறை நிர்வாகம்தான் மேற் கொள்ள வேண்டும்!'' என்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து சிறைத்துறை தலைவர் ஏ.டி.ஜி.பி. ஷியாம் சுந்தரிடம் கருத்துக் கேட்டபோது...

""சிறைக் கைதிகள் தொடர்பான எந்த அனுமதியையும் நான் நிராகரிக்க வில்லை. அனுமதி கேட்க வேண்டிய சம்மந்தப்பட்டவர்கள் (மாநாட்டு குழு வினர்) யாரும் என்னிடம் அனுமதி கோரவில்லை. அரசாங்கம் கேட்டுக் கொண்டால்... அப்போது பார்க்கலாம்!'' என்பதோடு முடித்துக் கொண்டார்.

இதுகுறித்து ஆய்வரங்க கட்டுரைகள் தேர்வுக் குழுவின் செயலாளர் கவிஞர் கனிமொழியிடம் கேட்டபோது, ""அப்படி சிறைக்கைதிகளின் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் அவர் களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கு முயற்சி செய்யப் படும்!'' என்றார்.

ஆனால், மேலும் இதுபற்றி விசாரித்தபோது சிறைக்கைதிகளின் கட்டுரை கள் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிய வருகிறது.

No comments:

Post a Comment