Thursday, May 27, 2010

போலீஸ் ராஜ்யத்தில் தனிப்படை தர்பார்!


shockan.blogspot.com

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறைக்கு முதுகெலும்பாக இருப் பது... அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களின் தலைமையிலான தனிப்படைதான்.

இந்த தனிப்படைக்கு தளபதியாக இருப்பவர் ஒரு இன்ஸ்பெக்டர். இவருக் குக் கீழ் டிவிஷனுக்கு ஒரு எஸ்.ஐ.யும்... (டிவிஷன் என்பது 15 ஸ்டேஷன்களைக் கொண்டது) ஸ்டேஷனுக்கு ஒரு ஏட்டும் இருப்பார்கள். இவர்களுக்கு யூனிஃபார்ம் இல்லை. எப்போதும் மப்டிதான்.

இந்தப் படையிலேயே பவர்ஃபுல் லாக இருப்பவர்கள் தனிப்படையில் இருக்கும் ஏட்டுகள்தான். காரணம் ஒவ்வொரு ஸ்டேஷன் லிமிட்டின் ஜாத கத்தையும் அறிந்தவர்களான இவர் களோடு நேரடித் தொடர்பில் எஸ்.பி.யே இருப்பார். இவர்களிடம் கேட்டுத்தான் ஏரியாக்களின் தட்பவெப்ப நிலைகளை எஸ்.பி.க்கள் அறிகிறார்கள். எனவே தங்களுக்குக் கிடைத்த இந்த பவரை... இந்த தனிப்படை ஏட்டுக்கள் தமிழக அளவில் எப்படியெல்லாம் பயன்படுத் திக்கொண்டிருக்கிறார்கள் என்றால்... கிடைக்கிற பதில்கள் சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு உதாரண மாவட்டமாக கன்னியாகுமரி மாவட் டத்தைப் பார்ப்போம்.

நம்பர்-1 : மாவட்டத்தின் முக்கிய காவல்நிலையமான தக்கலையில் தனிப்பிரிவு ஏட்டாக இருப்பவர் சர்ச்சில். மீட்டர் வட்டித் தொழி லைப் பிரதானமாக செய்துவந்த இவர்... அதே தொழிலில் கொடி கட்டிப்பறக்கும் சாரதாவோடு கைகோர்த்து தொழிலை விரிவுபடுத்தினார். இடையில் இருவருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை எழ... மீட்டர் வட்டிக் குக் கொடுத்து ஏழைபாழைகளை மிரட்டுவதாக சாரதா மீதே வழக்கைப் பதிவுசெய்ய வைத்துவிட் டார் சர்ச்சில். இதேபோல் மாணவர் களின் செல்போனைப் பறித்துக் கொண்டு... தற்கொலையில் சம் பந்தப்பட்ட பெண்ணின் படம் செல்லில் இருக்கிறது என்றோ... தேடப்படும் குற்றவாளியின் படம் இருக்கிறது என்றோ ரீல் விட்டு... கணிசமாகக் கறந்துவிடுவாராம்.

நம்பர்-2 : கன்னியாகுமரி ஸ்டேஷனில் இருக்கும் ஏட்டு முருகனுக்கு அங்குள்ள எல்லா லாட்ஜுகளிலும் ஏ.ஸி. அறை யை ஒதுக்கிவிடுவார்கள். அதோடு தேவைப்படும் போதெல்லாம் மதுவும் "அது'வும் சப்ளை செய்வார் கள். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு லாட்ஜு களில் என்ன நடந்தாலும் அது ஸ்டேஷனுக்குப் போகாது. அங்கேயே பேசி முடித்து வைக்கப்படும். அதேபோல் கடைக் காரர்கள் தொடங்கி வடநாட்டு கஞ்சா வியாபாரி கள் வரை அனை வரும்... இவரது அரு ளைத்தான் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற்றாக வேண்டும்.

நம்பர்-3 : ஆரல்வாய்மொழி தனிப்பிரிவு ஏட்டு பால்விக்டர்... பெரும்பாலும் செக்போஸ்ட்டில் உட்கார்ந்து நேரடி வசூலில் இறங்கிவிடுகிறார். மணல் லோடு, செங்கல் லோடு தொடங்கி அத்தனை வாக னங்களிடமும் வசூல் பார்த்துவிடுகிறார் என்கிறார்கள்.

நம்பர்-4 : சகலவித ரவுடிகளின் லிஸ்டையும் கையில் வைத்திருக்கும் இரணியல் ஏட்டு விஜயகுமார்.... "எஸ்.பி. உன் னைக் கண்காணிக்கச் சொல்லி விட்டார்' என்ற ஒரே பல்லவியைப் பாடியே தலைக்குத் தக்கபடி லாபம் பார்த்துவருகிறார். டாஸ்மாக் பாரும் ஏகத்துக்கும் கைகொடுக்கிறது.

நம்பர்-5 : ஸ்டேஷனையே கட்டப் பஞ்சாயத்துக் கூடமாக்குவதில் கில்லாடிகளாக இருக்கும் ஏட்டுக்கள் என்றால்... மணவாளக்குறிச்சி அய்யாக்கண்ணு, புதுக்கடை பிரபா கரன், மண்டைகாடு ராமகிருஷ்ணன், பேச்சிப்பாறை மணிகண்டன் என நீளமான லிஸ்டை ஒப்பிக்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இவர்களில் புதுக்கடை பிரபாகரன், வில்லங்கமான சிவில் மேட்டர்களைத் தேடிப்பிடித்து... அரட்டல் உருட்டல் தர்பாரோடு லாபம் பார்ப்பாராம்.

நம்பர்-6 : சி.டி. கடைகளின் மீது கரிசனம் காட்டுகிற ஏட்டுக்கள் என்று குமரி மாவட்ட மக்களால் அடையாளம் காட்டப்படுகிறவர்கள் மார்த்தாண்டம் சோபனராஜும் குலசேகரம் எபினேசரும்தான். ரெய்டுக்கு போலீஸ் டீம் கிளம்பினால்... அதற்கு முன்பாகவே தகவல் கொடுத்து சி.டி.கடைகளுக்கு லீவுவிடச் சொல்லிவிடுவார்களாம். மணல், அரிசி கடத்துவோருக்கு இங்கே அன்பான அண்ணாச்சியாக இருப்பவர் ஏட்டு சோபனராஜாம்.

நம்பர்-7 : கீரிப்பாறை ஏட்டு தண்டேஸ்வரன் பரபரப்பாக இருக்கிறார். மலை ஏரியாவான இந்தப் பகுதியில் இவரது ஆதரவாளர்கள்தான் கண்ட இடங்களிலும் மதுபானங்களை விற்கிறார்கள். மரம் கடத்துவோருக்கும் மணல் கடத்துவோருக்கும் இவரே காட்ஃபாதர்.

-இப்படியாக குமரி மாவட்டத்தில் இருக்கும் தனிப்படை ஏட்டுக்கள் 42 பேரில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர எல்லோருமே.. சட்டம்-ஒழுங்கிற்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மிடம் மனம் குமுறிப் பேச ஆரம்பித்த மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் சிலர் “""இவங்களை மீறி எதையும் பண்ணமுடியலைங்க. குற்றவாளிகளைப் பிடிச்சிக் கொண்டுவந்து விசாரிக்கும் போதே.. இவங்க லைனில் வந்து... அவர் நமக்கு வேண் டப்பட்டவர்னு சொல்லு வாங்க. அப்படி சொன்னதுமே குற்றவாளிகளை நாங்க விட்டுடணும். இல்லைன்னா... எஸ்.பி.க்கிட்ட எங்களைப் பத்தி இல்லாதது பொல்லாத தையெல்லாம் போட்டுக் கொடுத்து தாலியை அறுத் துடுவாங்க. இந்தத் தனிப்பிரிவு ஏட்டுக்கள் சொல்றதைத்தான் எங்க எஸ்.பி. ராஜேந்திரனும் வேத மந்திரம் மாதிரி கேட்பார்.. எங்களால் சுதந்திரமாவே செயல்பட முடியலை. வெட்கத்தை விட்டுச் சொல்லணும்னா நாங்க... அவங்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டியிருக்கு. தமிழ்நாடு முழுக்க தனிப்படை ஏட்டுக்கள் ஆதிக்கம் இப்படித்தான் இருக்கு''’என்கிறார்கள் ஆதங்கம் மாறாமல்.

இதற்கெல்லாம் என்ன தீர்வு?

""தனிப்பிரிவு ஏட்டுக்களை எஸ்.பி.க்கள் கண்காணிப்பதோடு... ஆண்டுக்கொரு முறை அவங்களை இடம் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அப்பதான் அவங்க அங்கங்கே க்ரைம் நெட் ஒர்க்கை உருவாக்காமல் இருப்பாங்க. சட்டம்-ஒழுங்கும் காப்பாற்றப்படும்'' என்கிறார் கள் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள்.

No comments:

Post a Comment