Thursday, May 27, 2010
குஷ்பு வழியில் வடிவேலு
""ஹலோ தலை வரே... இரண்டாம் முறையாக பதவி யேற்ற ஐக்கிய முற் போக்கு அரசின் முதலாமாண்டு நிறைவடைந்ததை யொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் கொடுத்த பேட்டியை டி.வி.யில் பார்த்தீங்களா?''
""பார்த்தேம்ப்பா... நிருபர்கள் கேட்ட கேள்விகளையெல்லாம் கூர்ந்து-மவுனமாக கேட்டதையும், இடையில் எந்தக் குறுக்கீடும் செய் யாமல், கேள்வி முடிந்ததும் ஒவ் வொன்றுக்கும் தெளிவா பதில் சொன்னதையும் பார்த்தேன். சமீபத் தில் ஒளிபரப்பான ஒரு முக்கியமான பேட்டின்னு பிரதமரோட பேட்டியைச் சொல்லலாம்.''
""இரண்டு கேள்வி ரொம்ப முக்கியமானதா இருந்தது. ராகுல்காந்தி பிரதமராக வழிவிடுவீங்களான்னு கேட்டதுக்கு, பாசிட்டிவ்வா பதில் சொன்ன பிரதமர், ராகுல் அமைச்சரவை யில் இடம்பெறணும்ங்கிறதை ஏற் கனவே வலியுறுத்தியிருப்பதையும் குறிப் பிட்டார். அதுபோல, ஸ்பெக்ட்ரம் பற்றிய கேள்விகளுக்குப் பதில்சொல்லும்போது, மத்திய அமைச்சர் ஆ.ராசா மேலே எந்தத் தவறும் இல்லைன்னும் என்னிடம் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுதான்னு திரும்பவும் உறுதிப்படுத்தினார் பிரதமர். அவரோட இந்த பிரஸ்மீட் எதிர்க்கட்சியினராலும் பாராட்டப் படுது.''
""டெல்லி ஏரியா நியூஸ்னதும் ராஜ்யசபா தேர்தல் நெருங்கிக்கிட்டிருப்பதுதான் ஞாபகத் துக்கு வருது. காங்கிரசில் யாருக்கு ராஜ்யசபா சீட்டாம்?''
""சோனியாவை சந்தித்து விட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சந்தோஷ மாகவும் நம்பிக்கையாகவும் இருக்காரு. அவருக்கு எம்.பி. பதவிதர சோனியா சம்மதிச் சிட்டாராம். வாசன் தரப்பும் இளங்கோவனுக்கு கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுதாம். தங்க பாலுவும் எம்.பி. சீட்டை எதிர்பார்த்திருந்தார். காங்கிரஸ் கோட்டாவில் கிடைக்காதுங் கிறதால, தி.மு.க கோட்டாவில் ஒரு சீட் கேட்கலாமான்னு மூவ் பண்ண ஆரம்பிச்சிருக்கிறார்.''
""அப்படின்னா பா.ம.க. வுக்கு போட்டியாவா?''
""பா.ம.க தொடர்ந்து சீட் கேட்டு வலியுறுத்துவது பற்றி தி.மு.க தரப்பில் சோனியாவிடம் பேசப்பட்டிருக்குது. ராஜ்யசபா சீட் தராவிட்டால் அ.தி.மு.க பக்கம் போயிடுவாங்கன்னும் சொல்லி, அவங்களுக்கு சீட் தருவது பற்றி உங்க கருத்து என்னன்னு கேட்கப் பட்டி ருப்பதா சோனியா வட்டாரத் திலிருந்து சொல்றாங்கப்பா.''
""அ.தி.மு.க செயற்குழு விலும் ராஜ்யசபா எலெக்ஷன் பற்றித்தான் டிஸ்கஷன் நடக் குமா?''
""அங்கே சட்டமன்றத் தேர்தல் பற்றி டிஸ்கஷன் நடக்கும்னு கார்டன் வட்டாரத் திலிருந்து தகவல் வருது. டிசம்பரில் நிச்சயமா சட்ட மன்றத் தேர்தல் வரும்னு தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஜெ உறுதியா இருக்காராம். தேர் தலை எப்படி சந்திப்பதுங்கிறது பற்றி விவாதிக்கத்தான் இந்த செயற்குழு கூட்டமாம். ராஜ்யசபா சீட்டைப் பொறுத்தவரை டாக்டர் வெங்கடேச னுக்கு ஒரு சீட் உறுதி. இன்னொரு சீட்டுக்கு நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுது. ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்கும்படி சி.பி.எம்.முக்கும் சி.பி.ஐ.க்கும் ஜெ லெட்டர் எழுதியிருக்கிறார். அதோடு வாய்மொழியா, இப்ப எங்களை ஆதரிச்சா, தமிழக மேல்சபையில் உங்களுக்கு அதிக சீட் தர்றேன்னும் சொல்லியிருக்காராம்.''
""தோழர்கள் ஏத்துக்கிட்டாங்களா?''
""இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கமிட்டி இது பற்றி மத்திய கமிட்டியிடம் தெரிவித்து, தா.பாண்டியனுக்கு ராஜ்யசபா சீட் தரப்படணும். இதைப்பற்றி நீங்க ஜெ.கிட்டே பேசணும்னு சொல்லியிருக்குதாம். மத்திய கமிட்டியில் உள்ளவங்களும் ஜெ.கிட்டே பேசுறதா சொல்லியிருக்காங்களாம்.''
""இலங்கையில் நடக்குற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகர்கள் கலந்துகொள்வது தொடர்பான சர்ச்சையில் கமலுக்கு எதிரா போராட்டம் நடத்தப் பட்டிருக்குதே!''
""தலைவரே... கமலோட நிலைப்பாடு பற்றி முதன் முதலில் சொன்னது நம்ம நக்கீரன்தான். ஃபிக்கிங்கிற தொழில் வர்த்தக அமைப்பின் தலைவரா கமல் இருக்கிறார். அந்த அமைப்பின் சார்பில் கமலும் அதில் உள்ளவங்களும் கலந்துக்குறாங்கங்கிறதால மே 17 இயக்கத்தினர் கமல் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. ஃபிக்கி தலைவர் பதவியை ராஜினாமா செய்யணும்னும், மத்திய அரசு கொடுத்த பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பிக்கொடுக்கணும்னும் கோரிக்கை வைக்கப்பட்டது.''
""அதற்குத்தான் கமல்கிட்டேயிருந்து பதில் வந்திருக்குதே... தனக்கும் தமிழுணர்வு இருப்பதைக் குறிப்பிட்டு, தானும் ஃபிக்கி அமைப்பினரும் இலங்கைக்கு போகப்போவதில் லைன்னு சொல்லி யிருக்கிறார். அதே நேரத்தில், காந்தி தலைவரா இருந்த ஃபிக்கி அமைப்பி லிருந்து விலகப் போவ தில்லைன்னும், தன் தாய்நாடு தனக்கு கொடுத்த பத்மஸ்ரீங்கிற கௌரவத்தை திருப்பிக் கொடுப்பதால் சாதிக் கப்போவது எதுவுமில்லைன்னும் சொல்லி யிருக்காரே!''
""நடிகர்கள் ஏரியா பற்றி பேசியதும் வடிவேலு பற்றிய ஒரு செய்தி ஞாபகத்துக்கு வருதுங்க தலைவரே... வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் நடந்த விவகாரத்தில் தி.மு.க கவுன்சிலர் கே.கே.நகர் தனசேகரன்தான் பஞ்சாயத்து பண்ணினார். தனசேகரனின் சொந்த ஊரான மாடக்கோட்டையில் முனீஸ்வரர் கோயில் திருவிழா வருசா வருசம் நடக்கும். சினிமா நடிகர்களை அழைச்சிக்கிட்டுப் போய் அந்த விழாவை சிறப்பா நடத்துவார் தனசேகரன். இந்த வருசம் நடிகர் வடிவேலுவை விழாவுக்கு அழைச்சிட்டுப் போயிருந்தார். அதனால, குஷ்பு வழியில் வடிவேலுவும் கூடிய சீக்கிரம் தி.மு.க.வில் சேரப்போறாருன்னு சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பேச்சா இருக்குது.''
""வடிவேலு என்ன சொல்றாரு?''
""அதை நானே அவர்கிட்டே கேட்டேன். வடிவேலு என்ன சொல்றாருன்னா, கலைஞரே என் கிட்ட உனக்கு அரசியல் சரிப்படாது. பொதுவான ஆளா இருப்பதுதான் நல்லதுன்னு சொல்லியிருக்காரு. அதனால அரசியலில் சேர்ற ஐடியா இப்போதைக்கு இல்லைன்னு சொன்ன வடிவேலு, ஆனா சேரணும்னு முடிவெடுத்துவிட்டா யாரும் என்னை தடுக்க முடியாதுங்கிறாரு. சம்பந்தப்பட்ட ஏரியாவில் விசாரித்தேன். தனசேகரன் பேசியிருப்பதையடுத்து, விரைவில் வடிவேலு தி.மு.கவில் சேரலாம்னு பேச்சு அடிபடுது. வடிவேலு மனசில் என்ன முடிவு இருக் குங்கிறது சீக்கிரத்தில் தெரிஞ்சிடும்.''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment