shockan.blogspot.com
"இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற ஒரே கடவுள் நான்தான். நீங்கள் கடவுளாக நினைத்து வழிபடுவதெல்லாம்... உங்கள் அறியாமை. அதெல்லாம் வெறும் உருவ வழிபாடு. நானே கடவுள். என்னை மட்டுமே வழிபடுங்கள். உங்களையெல்லாம் ஆனந்தப்படுத்த வந்த இறைவன். உங்களை வழி நடத்த வந்த குரு நான். உண்மையான குருபக்தி என்பது என்னை நீங்கள் துதிப்பதுதான்'
எனச் சொல்வது நித்யானந்தரின் வழக்கம்.
""வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நான் பிடதி ஆசிரமத்தில் சாமியாரினியாக இருக்கும் என் தோழியின் மூலம் சாமியார் மீது மதிப்பு ஏற்பட்டு... தியான பயிற்சிக்காக பிடதிக்கு போனேன்.
படிக்காதவர்களை விட படித்தவர்கள்தான் பல சமயம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கு அதிகம் படித்த நானே உதாரணம். 21 வயதின் தொடக்கத்தில் பிடதிக்கு போனேன். தியான பயிற்சி முடிந்ததும் ரிஸப்ஷனுக்கு அருகில் இருக்கும் ஸ்டார் ஓட்டலுக்கு இணையான ரூமில் தான் பயிற்சிக்கு வந்தவர்களை தங்க வைத்தார்கள். நானும் அங்குதான் தங்கினேன். அப்போதெல்லாம் அடிக்கடி சாமியார் என்கூட பேசுவார். தியான வகுப்பு கோர்ஸ் முடிந்து நான் வீட்டிற்கு வந்தாலும் என்னை செல்போனில் தொடர்புகொண்டு ‘"ஒன்னோட ஞாபகமாவே இருந்திச்சு. அதான் உனக்கு போன் செய்றேன்' என்பார் நித்யானந்தா. இதை என் சாமியாரினி தோழியிடம் சொன்னபோது... ‘"கடவுளே உன்கிட்ட பேசுறார்னா... நீ ரொம்ப புண்ணியம் செய்தவள்' எனச் சொன்னாள். மீண்டும் ஆசிரமம் போனேன்.
அன்று குருபூஜை நடந்தது.
தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த சாமியார் குருபூஜையின் மகிமையை சொன்னார்.
""குரு சக்தியை நினைந்து, வார்த்தைகளின் மூலமாகவும், சாந்தியத்தின் மூலமாகவும், செய்கையின் மூலமாகவும் அல்லது வேறுபல சூட்சுமமான வழி முறைகளின் மூலமாகவும், பற்றுகளிலிருந்து நம்மை விடுவிக்கின்ற சத்குரு நாதரை நினைத்து குருவின் பாதத்தில் அர்ப்பணம் செய்து, குரு பூஜையுடன், நாம் நாளைத் துவங்கும் போது பிரபஞ்ச சக்திக்கே, நன்றி செலுத்துகிறோம். இதுதான் குருபூஜை யின் சாரம்''
.... இப்படி சாமியார் சொன்னதும் அவருக்கு பாத பூஜை நடக்கிறது. அவர் முன் ஹோமம் ஜோதியாக எரிகிறது. கடவுளுக்கு கோயில்களில் காட்டுவது போல தீப ஆராதனை காட்டப்படுது. இப்படி அவரை கடவுளாகவே பாவித்து பூஜைகள் செய்தோம். அந்த பூஜையின் போது தெய்வீக மணத்தோடு மனதை உருக்கும் 21 நிமிட பாடல் ஒலிபரப்பப்படும். அந்தப் பாடல் எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கு.
ஓம் ஜெய் நித்யானந்தா
சுவாமி ஜெய் ஜெய் நித்யானந்தா
தீனதயாளா சாந்த சொரூபா!
பரமஹம்ச நித்யானந்தா!
ஓம் ஜெய் ஜெய் நித்யானந்தா!
-இப்படிப் போகும் பாட்டு.
அப்போது எல்லோருமே பாட்டுப்பாடி மெய் மறந்து சாமியாரை கடவுளாகவே காண்போம்.
அவசர வேலையாக திரும்ப நான் வீட்டிற்கு வந்த போதும் சாமியார் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
"எவ்வளவோ பேர் என் பக்தைகளாக இருக்கும் போது உன்னை மட்டும் இந்த ஆன்மா அடிக்கடி நினைப்பது எனக்கே வியப்பாக இருக்கு' என சாமியார் சொன்ன போது எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
திரும்ப ஆசிரமத்திற்கு சென்றேன்.
யோகா வகுப்பை ஆரம்பித்து விட்டு சாமியார் தன்னுடைய வீட்டிற்கு போய்விட்டார். என்னை அழைப்பதாக தகவல் வரவும் அங்கு போனேன். அது "ரஞ்சிதா புகழ்' அறை.
நான் உள்ளே நுழைந்ததும் கால் பிடித்து விடச் சொன்னார். அப்படியே எழுந்து என் இடுப்பைப் பிடித்து தன்னுடன் இறுக அணைத்தார். நான் திகைத்துப் போய் நிற்க... குருபூஜையின் போது ஒலிபரப்பப்படும் பாடலை ஒலிக்கவிட்டார் சாமியார். என்னால் எந்த எதிர்ப்பையும் காட்ட முடிய வில்லை. என்னை தன் இச்சைக்கு ஆட்படுத்தி விட்டார்.
நடந்தது கனவா? நிஜமா? என நான் குழம்பியபடி நிற்க... "சாமி இன்னிக்கு ஃபுல் சாப்பாடு சாப்பிட்டிருச்சு. ஏன்னா நீ... ரொம்ப அழகான விருந்து' என்றார்.
நான் அதிர்ச்சி விலகாமல் வெளியே வந்தேன்.
நடந்ததை என் சாமியாரினி தோழி யிடம் சொன்னபோது அவள் நம்பவே இல்லை.
"அடி போடீ... ஒருநாள் இந்த சாமியாரைப் பார்த்து உலகமே காறித்துப்பும்' என சொல்லிவிட்டு வந்தேன்!'' என தன் சோக கதையைச் சொல்லி முடித்தார்.
இன்னொரு பெண். கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் சொல்லத் தொடங்கினார்.
""நித்யானந்தாவை நான் ரொம்பவும் நம்பினேன். என்னைப்போல அவரை நம்பிய எத்தனையோ பிரம்மச்சாரினிகளை அவர் மோசம் செய்துவிட்டார். நீங்க ஒரு ரஞ்சி தாவைத்தான் வீடியோவில் பார்த்தீங்க. அடையாளம் தெரியாத எத்தனையோ ரஞ்சிதாக்கள் ஆசிரமத்தில் சிக்கிக்கிட் டிருந்தாங்க.
கால் அமுக்குவதற்காக என்னைக் கூப்பிட்டனுப்பியவர், கட்டிலில் சாய்த்து விட்டார். இதை நான் கொஞ்சமும் எதிர் பார்க்கலை. எல்லோருக்கும் சந்நியாசத்தைப் போதித்தவர். நான் உள்பட பலரையும் சந்நியாசினியாக்கியவர். காவி உடையில் உலகம் முழுவதும் பெயர் பெற்றவர் இப்படி நடந்துகொள்கிறாரே என்று பதறி, அவரிடமிருந்து விலக நினைத்தேன். அவரது பிடி தளரவில்லை. இறுக்கியபடியே பேச ஆரம்பித்தார். "நான்தான் சிவன். என்னுடன் நீ இணைவதால் நீதான் சக்தி. சிவன் என்ன செய்தான்? அமுதத்திற்காக தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை எடுத்து சாப்பிட்டான். அப்போது அவன் தொண்டையை அழுத்திப்பிடித்ததால் அந்த விஷம் அங்கேயே தங்கிவிட்டது. சிவனும் பிழைத்தான். தேவர்களும் பிழைத்தனர். உலகம் பிழைத்தது.
சிவன் செய்ததை தந்த்ரா என்று சொல்வார்கள். உலகம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட தந்த்ராக்களை கையாளுவதில் எந்தத் தப்பும் இல்லை. எனக்கு முன் இருந்த பல குருஜிக்கள் இதுபோன்ற தந்த் ராக்களை செய்திருக்கிறார்கள். நான் கடவுளின் வடிவம். நான் செய்வது எதுவும் தவறு கிடையாது. என்னை அடைந்து சக்தி பெறும் நீ, இதை பெரிய பாக்கியமாக நினைக்க ணும்' என்றார் நித்யானந்தர். அவர் சொல்வதுதான் வேதம் என்று நினைத்து அவர் இஷ்டத்திற்குக் கட்டுப் பட்டேன்.
அப்புறம்தான் எனக்கு தந்த்ராக்கள் பற்றிய உண்மையே தெரிந்தது. சந்நியாச பரம்பரையில் தந்த்ராவுக்கு இடமேயில்லை. அகோரிகள் போல நரமாமிசம் சாப்பிடக் கூடியவர்களுக்குத்தான் அதெல்லாம். சந்நியாசிகளோ பிரம்மச்சாரிகளோ இத்தகைய தந்த்ராக்களில் ஈடுபடுவது குற்றம். 64 தந்த்ராக்களில் ஒன்று மட்டும்தான் செக்ஸ் பற்றி குறிப்பிடு கிறது. சிவபெருமான் சொல்லிக் கொடுத்த 112 சூத் திரங்களில் 6 மட்டுமே செக்ஸ் சம்பந்தப்பட்டது. அதுவும் கூட, கிரகஸ்தர்களுக்குத் தான். அதாவது, கல்யாணமாகி குடும்பம் நடத்துகிறவர்களுக்குத்தான். சந்நியாசிகளுக்குக் கிடையாது. அப்படியிருந்தும், தந்த்ரா என்ற பெயரில் என் னை இப்படி நாசப்படுத்தி விட்டானே இந்த நித்யானந்தன் என்ற கோபத்துடன் இருந்தேன்.
அடுத்த முறை கால் அமுக்கி விட அழைப்பு வந்தபோது போனேன். என்னிடம் தன்னுடைய தந்த்ராக் களை ஆரம்பித்தார் நித்யானந்தர். நான் தயங்கி நின்றபோது, "என்ன ஒதுங்குறே... நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்குத் தெரியும். இந்த ஆசிரமத்தில் நீ சாமியாரினி ஆகும்போதே ஒரு க்ஷர்ய்க்-ல் கையெழுத்து போட்டிருக்கே, ஞாபகமிருக்குதா? அதிலே ஒரு பாயிண்ட் என்ன தெரியுமா? இங்கே நடக்கும் தந்த்ராக்களுக்கு உடன்படுவேன்ங்கிறதுதான் ஒப்பந்தம்'னு சொன்னார். நான் மிரண்டு போயிட்டேன். சாமியாரினி ஆவதற்குத்தான் கையெழுத்து வாங்குறார்னு நினைச்சு என்னைப் போல பல பெண்களும் படிச்சு பார்க்காம, அவர் மேலே இருந்த பக்தியிலே கையெழுத்துப் போட் டோம். அதிலே எங்களோட செக்ஸ் வச்சுக்க எங்க கிட்டேயே ஒப்பந்தம் போட்டிருக்காருங்கிறது அப்பதான் தெரிஞ்சுது. நித்யானந்தரால் பாதிக் கப்பட்ட பெண்கள் இப்பவும் புகார் கொடுக்கவோ, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவோ தயங்குவது இந்த ஒப்பந்தத் தாலதான்'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடியே.
""நித்யானந்தா மட்டுமல்ல... அவருடன் இருக்கும் மத்த ஆனந்தாக்களும் செய்யாத சேட்டையில்லை. இதற்கு அவர்கள் "சிசுபாலன்- கிருஷ்ணன்' கதையைச் சொல்வார்கள். இப் படித்தான் நான் ஏமாந் தேன்''’என பாதிக் கப்பட்ட இன்னொரு ஆசிரமப்பெண் அழுதபடி சொல்ல ஆரம்பித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment