Friday, April 30, 2010

நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை

shockan.blogspot.com
புதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

நித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.

வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.

சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.

ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.

எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

மேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்

No comments:

Post a Comment