Wednesday, April 28, 2010

"பலேபாண்டியா' பயங்கரம்!


shockan.blogspot.com
நடிகர் திலகம் நடித்து, ஓகோ என்று ஓடிய "பலே பாண்டியா' தலைப்பில் இப்போது ஒரு படம் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் சித்தார்த். இவர் பிரபல இயக்குநர்களான சஞ்சய் பன்சாலி, ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், கே.எஸ். ரவிகுமார், எஸ்.பி. ஜனநாதன் ஆகியவர்களின் படங்களுக்கு விளம்பர டிசைனர்.

இந்தப் படத்தின் ஹீரோ விஷ்ணு. இவர் "வெண்ணிலா கபடிக்குழு' ஹீரோவாக நடித்தவர். நாயகி பியா "கோவா', "பொய் சொல்லப் போறோம்' படங்களில் நடித்தவர். அமர், ஜிப்ரான் என்ற இரு வில்லன்கள் அறிமுகமாகின்றனர்.

இயக்குநர் சித்தார்த் ஆர்.எஸ். மணியின் பேரன். மணி யார்?

எடிட்டராக வாழ்க்கையைத் தொடங்கி பின் இயக்குநராகி, தயாரிப்பாளராகவும் விஸ்வரூபம் எடுத்தவர். சிவாஜி- பத்மினி நடித்த "புனர்ஜென்மம்', ஜெமினி- சாவித்திரி நடித்த "மாமன் மகள்', கண்ணம்மா நடித்த "கண்ணகி' படங்களை இயக்கியவர். கர்நாடக சங்கீத மேதை டி.கே. பட்டம்மாள் இவர் பாட்டி. இத்தகைய திரைப்பட பின்னணி கொண்ட சித்தார்த் இயக்கும் "பலே பாண்டியா' கதையைக் கேட்டதும் தயாரிக்க முன் வந்து விட்டார்கள் கல்பாத்தி அகோரம் நிறுவனத்தார்.

வாலி, தாமரை இவர் களோடு டாக்டர் பர்ன் என்ற மலேஷியாக்காரர் "இவன் தேடல் வேட்டை' என்ற பாடலை எழுதி, பாடியும் இருக்கிறார்.

போகவர எட்டு மணி நேரமாகும் கடல் மத்தியில் படமாக்கி சாதனை படைத்திருக்கிறார் சித்தார்த்.

ஹீரோ விஷ்ணு முதல் பாதியில் அப்பாவியாகவும் பின்பாதியில் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்து அசத்தி இருக்கிறார்.

இசைக் குடும்ப ரத்தம் ஓடும் இயக்குநர் சித்தார்த், பின்னணிப் பாடகரான தேவன் ஏகாம்பரத்தை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்திருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்கா. ஆனால் தமிழ் சினிமாமீது மாளாத காதல் கொண்டு இசை கற்று பின்னணிப் பாடகராக கடந்த பத்தாண்டுகளாகப் பாடி வருகிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்' படத்தில் "ஓ மரியா...' பாடலை பாடி புகழ் பெற்றவர்!

எப்படியோ "பலே பாண்டியா' மெகாஹிட்டானால் சரி!

No comments:

Post a Comment