Tuesday, April 6, 2010

மாணவியை கற்பழித்த வாத்தியார்!




கல்பாடி கிராமத்தில் இருந்து செல்போன் வழியாக வந்தது இந்தத் தகவல்.

""பத்தாம் வகுப்பு மாணவியை பள்ளி வகுப்பறையில் கற்பழித்த ஆசிரியர் மைனர் முத்துக்குமரன் மீது காவல் துறையோ, கல்வித்துறையோ நடவடிக்கை எடுக்க வில்லை. இன்று சாயங்காலம், கிராமத்து முக்கியஸ் தர்களே விசாரித்து தீர்ப்பளித்துவிட்டார்கள். தீர்ப்பளித்த பஞ்சாயத்தார்களுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்த ஊராருக்கும் 10 ஆயிரம் ரூபாய்க்கு டாஸ்மாக் சரக்கு வாங்கி பார்ட்டி வைத்தார் கற்பழித்த மைனர் வாத்தியார். சந்தேகம் இருந்தால் வந்து விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்'' என்றார் நக்கீரன் மக்கள் செய்தியாளர்.

பெரம்பலூரில் இருந்து 13-வது கி.மீ. தொலைவில் உள்ள கல்பாடியில் நாம் இறங்கியபோதுதான்... அந்த ஊர் பள்ளியில் படித்த மாணவிகள் பலர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பெரம்பலூர் பஸ்ஸில் ஏறி னார்கள்.

பஸ் ஸ்டாப்பை ஒட்டிய தேநீர்க்கடையில், முதல்நாள் நடந்த கற்பழிப்பு பஞ்சாயத்து பற்றியும், டாஸ்மாக் பார்ட்டி பற்றியும்தான் காரசார விவாதம் நடந்துகொண் டிருந்தது.

""மைனர் வாத்தியார்ப்பயலை கட்டி வச்சுப் பின்னி எடுத்துட் டாங்களாம்ல?''

""எவன் சொன்னான்... நடந்த கூத்தையெல்லாம் நாங்களும் நின்னு பாக்கத்தான் செஞ்சோம். எறையூர் பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரன், ஸ்கூல் கட்டிட சங்கத் தலைவர் ராமலிங்கம் தûமையில் தான் பஞ்சாயத்து நடந்தது. ஒருகட்டத்தில, பாதிக்கப் பட்ட அந்த மாணவியோட அண்ணன்காரன், அந்த வாத்தி யார் மைனர் முத்துக் குமரனை சப்புனு ஓங்கி ஒரு அறை அறைஞ்சான். இன்னும் ரெண்டு, மூணு பேரு வாத்தியாரை அடிக்க வந்தாங்க. எல்லாரையும் சமாதானப்படுத்திவிட்டு, தலைவர் ராமலிங்கம் வீட்டுக் குள்ள வாத்தியாரை அடைச்சு பூட்டி வச்சுட்டு பஞ்சாயத்தை நடத்துனாங்க. தீர்ப்பு சொன் னாங்க'' -பெரியவர் ஒருவர் விவரித்தார்.

""என்ன தீர்ப்பு?''

""கற்பழிக்கப்பட்ட மாணவி குடும்பத்துக்கு ஒண்ணரை லட்ச ரூபாய் வாத்தியார் கொடுக்கணும். அப்புறம் போலீஸையும் கல்வித்துறை அதிகாரிகளையும் கொஞ்சம் கவனிக்கணும். அப் புறம்... கற்பழிச்ச வாத்தியாரும், காட்டிக் குடுத்த வாத்தியாரும் மெடிக்கல் லீவுல போயிடணும். ரெண்டு வாத்தியார்களும் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வெளியூர் போயிடணும். இதுதான்யா தீர்ப்பு'' -தலையில் அடித்துக்கொண்டார் பெரியவர்.

பெரியவரை தனியே அழைத்துச் சென்று, நடந்த சம்பவம் பற்றி விசாரித்தோம். ""நக்கீரனா நீங்க? அப்ப கட்டாயம் சொல்றேன். ஒரு சலவைத் தொழிலாளி மகள். பேரெல் லாம் வேண்டாம். இந்த ஊர் ஸ்கூல்ல படிச்சிட்டு, இப்ப பெரம்பலூருக்கு பரிட்சை எழுதப் போகுது. அந்தப் பொண்ணுக்கு இந்த இந்த கேள்விதான் வரும்னு தமிழ்ப் பாட வினாக்களையெல்லாம் எழுதிக் கொடுத்திருக்கான் இந்த ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கிற முத்துக்குமரன். நிலம், கரை, பண வசதியுள்ளவன் அந்த வாத்தியார். அவன் குறிச்சுக் கொடுத்த கேள்விகள்தான் வந்திருக்கு. நல்லா எழுதிட்டு வந்த அந்தப் பொண்ணு, மறுநாள் வந்து "சார் நீங்க சொன்ன கேள்விகள் வந்துச்சு, நல்லா எழுதிட்டேன். கணக்குப்பாட கேள்விகளையும் எழுதித் தாங்க சார்'னு கேட்டிருக்கு. "உள்ளே வா தர்றேன்'னு கூட்டிப்போய் கெடுத்துப்பிட்டான்.

இதே ஸ்கூல்ல தியாகராஜன்னு ஒரு குடிகார வாத்தியார் இருக்கிறான். எப்ப பார்த்தாலும் குடிச்சிப்பிட்டு ஸ்கூல்ல எங்காவது கிடப்பான். அந்த வாத்தியார் இந்த கண்றாவிக் கொடுமையை பார்த்துப்பிட்டான். பார்த்துட்டு குடி போதையில "கெடுக்கிறான், கெடுக்கிறான்'னு கூப்பாடு போட்டுட்டான். அந்தப் பொண்ணும் அழுதுகிட்டே போய் வீட்ல சொல்லிவிட்டது... அதுக்குதான் பஞ்சாயத்து நடந்தது. தனக்கு சாதகமா, டிபார்ட்மெண்ட் என்கொயரி இல்லாம, போலீஸ் தலையிடாம பஞ்சாயத்தார் தீர்ப்பு சொன்னதுக்காக நைட்டே பார்ட்டி வச்சிருக்கான் அந்த மைனர் வாத்தியார். இனிமேல மத்த செட்டில்மென்ட் டெல்லாம் நடக்கும். போலீசும் கல்வித்துறையும் காதைப் பொத்திக்கிடும்'' என்றார் பெரியவர்.

தலைமை ஆசிரியரை சந்திப்பதற்காக பள்ளிக்குச் சென் றோம். அவர் இல்லை. ""அண்ணே... எங்க எச்.எம்.தான் பெரம்பலூர் மாவட்ட அரசு தேர்வு கட்டுப்பாட்டாளர். எல்லா ஸ்கூ லுக்கும் வினா கட்டுக்களை அனுப்புறது எங்க எச்.எம்.தான். அவர் இப்ப பெரம் பலூர்லதான் இருப் பார்'' என்றார்கள் 9-ம் வகுப்பு மாண வர்கள்.

மன்மத ஆசிரியர் மைனர் முத்துக்குமரன் பற்றியும் குடிகார ஆசிரியர் தியாக ராஜன் பற்றியும் அவர்களிடம் விசாரித்தோம்.

""முத்துக்குமரன் சார் பெரிய கோடீஸ்வரன். எப்ப பார்த்தாலும் டென்த் பொண்ணுங்க ளோடதான் உட்கார்ந்து கொஞ்சிக்கிட்டு இருப்பார். தியாகராஜன் சார் தோட்ட வாத்தியார். செடி, கொடி களுக்கு தண்ணி ஊத்துறதுதான் அவர் வேலை. எப்ப பார்த் தாலும் குடிச்சுட்டு மயங்கிக் கிடப்பாரு. அவரை யாரும் கண்டுக்கவே மாட்டாங்க'' என்றார்கள் மாணவர்கள்.

திரும்பும் வழியில் உள்ளூர்க்காரரான மனோ கரனை சந்தித்தோம்.

""இந்த கொடிய சம்பவத் துக்குப் பிறகுதான் அந்த முத்துக்குமரன் கேவலமான வன்ங்கிற விஷயம் எனக்குத் தெரிஞ்சது. என்னோட ரெண்டு பொண்ணுகளையும் இனிமே அந்த ஸ்கூலுக்குப் போக வேணாம்னு சொல்லிட்டேன். எவ்வளவு பெரிய தப்பு நடந் திருக்கு. கல்வித்துறையும் நட வடிக்கை எடுக்கலை. காவல் துறையும் நடவடிக்கை எடுக் கலை. ஸ்கூல் நிர்வாகமும் நட வடிக்கை எடுக்கலை. பணம் படுத்துற பாட்டைப் பாருங்க. எல்லாருடைய கைகளையும் கட்டிப் போட்ருச்சே பணம்... ஏழை மாணவி என்பதால் பணத் தால் சரிக்கட்டிவிட முடிகிறதே... சே!'' என்று குமுறினார் மனோகரன்.

No comments:

Post a Comment