Saturday, April 10, 2010

ஹீரோவாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி



விதி புரட்டிப் போட்ட ஒரு இளைஞன் புகலிடம் தேடி சென்னை வருகிறான். வந்த இடத்திலும் தாங்க முடியாத சோதனைகள். அந்த நேரத்தில்தான் அவனுக்கு ஒரு புதிய நட்பு கிடைக்கிறது. அந்த நட்ப்பின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையையும் வாழ முடியாத அளவுக்கு தொடர்ந்து போராட்டங்கள்.... அதில் எப்படி ஜெயிக்கிறான் என்ற அழுத்தமான கதைக் களத்தில் உருவாகும் படம் 'நான்'.

இந்தப் படம் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமாகிறார் நாக்க மூக்க புகழ் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

அவருக்கு ஜோடி, திரு திரு துறு துறு ரூபா மஞ்சரி. இன்னொரு நாயகனாக, ஆனந்தத் தாண்டவம் படத்தில் நடித்த சித்தார்த் நடிக்கிறார்.

மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவிடம் உதவியாளராக இருந்த ஜீவா ஷங்கர் இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவும் இவரே. விஜய் ஆன்டனியின் கல்லூரித் தோழராம் இவர்.

வெங்கட்ரமணியுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தின் இசையமைப்புப் பணிகளையும் விஜய் ஆன்டனியே கவனிக்கிறார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

ஹீரோவாக நடிப்பதால் இசை அமைப்புப் பணி பாதிக்காதா என்று விஜய் ஆன்டனியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தன்னம்பிக்கை டானிக்:

"ஒரு இசையமைப்பாளராக ஜெயிக்கணும் என்று சென்னை வந்தேன். ஆனால் அப்போது எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது. இன்று நானும் ஒரு இசையமைப்பாளன். அதே போலத்தான், நடிகனாகவும் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களுக்கு தொந்தரவில்லாத எந்த வேலையும் செய்து முன்னேறலாம்... தப்பே இல்லை" என்றார்.shockan

No comments:

Post a Comment