தானே கடவுள், தானே சக்தி என்று பக்தர்களை வசியப்படுத்தும் நித்யானந்தர், தன்னை சக்தி சொரூப மாய் காட்டிக்கொள்ளும் தருணங்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார் லெனின் என்கிற ஸ்ரீநித்ய தர்மானந்தா.
""பி.எஸ்.பி. பயிற்சி வகுப்பு 3 நாள் நடக்கும். மூன்றாம் நாள் மாலையில் பயிற்சி முடியும்போது , மாரியம்மன் போலவே சேலை உடுத்தி, நகை நட்டு போட்டுக்கொண்டு நித்யானந்தர் இருப்பார். அச்சு அசலாக பெண் வடிவத்தில் அவர் காட்சி தரும் நிகழ்வு இன்னொரு முறை கிடைக்காது என்று சொல்லி, பக்தர்களை வழிபடச் சொல் வார்கள் அவரது சீடர்கள். அதிலும், பெண் பக்தர்களை நெருங்கி வந்து வணங்கச் சொல்வார்கள். பெண் வடி வத்தில் இருப்பதை அட்வான் டேஜாக எடுத்துக்கொண்டு பெண் பக்தர்களைக் கட்டித்தழுவிக் கொள்வார். இது ஸ்பெ ஷல் தரிசனம், கிடைக் கவே கிடைக் காது என்று சீடர்கள் சொல்வார்கள்.
5. ஹீலிங் புரோகிராம்
எனர்ஜியை சரி செய்ய, நித்யானந்தர் நெருங்கி வந்து உடலில் உள்ள சக்கரங்களை அழுத்து வார். நித்யானந்தர் பாப்புலராக இந்த ஹீலிங்தான் காரணம். இவர் ராஜசேகரனாக இருந்தபோதே ஹைதராபாத்தில் நடந்த க்ளாஸில் கற்றுக் கொண்டார். இது ஒரு சயின்ஸ். ஆனால், நித்யானந்தர் அதை அபூர்வ சக்திபோல காட்டிக்கொண்டு பித்த லாட்டம் செய்தார். நானோ மற்ற சீடர்களோ பிறருக்கு ஹீலிங் செய்யும் போது, அதற்கு நித்யானந்தர் ஒரு விளக்கம் கொடுப்பார். "இப்போது நீங்கள் தொடுகிறீர்களே.. இதெல் லாம் உங்கள் கரங்கள் இல்லை. என் கரங்கள். உங்கள் சக்தி இல்லை. என் சக்தி' என்பார். "வகுப்பெடுக்கிற ஆச் சார்யார்கள் என் நாக்குகள். ஆர் கனைஸர்கள் என் தலை' என்பார்.
6. ஆத்மா பூர்னா புரோகிராம்
இது இரண்டு நாள் வகுப்பு. நித்யானந்தர்தான் எடுப்பார். மெடிடேஷ னும் தரிசனமும் இதில் முக்கியமானதாக இருக்கும்.
7. நித்யானந்தம்
உடலையும் உள்ளத்தையும் நியூட்ரல் செய்யும் புரோகிராம் இது. அன்கிளட்ச் நிலையில் இருந்தால் எளிதாக ஞானத்தை அடையலாம் என்று நித்யானந்தர் சொல் வார். இந்த புரோகிராம் பற்றித்தான் கடந்த இதழ் நக்கீரனில், நித்யானந்தரால் பாதிக்கப்பட்ட இளம் பெண் நிறைய விவரங்களைச் சொல்லியிருந்தார்.
8. இன்னர் அவேக்கனிங்
நித்யானந்தரின் ஆசிரமத்தில் மிக முக்கிய மான புரோகிராம் இது. 21 நாள், 76 புரோகிராம். 3 லட்சம் கட்டணம் . அத்தனை பேரையும் தன் பேச்சால் வசியம் செய்துவிடுவார் நித்யானந்தர்.
9. லைஃப் ப்ளெஸ் இன்ஜினியரிங்
இது 3 மாத பயிற்சி. இதற்கு கட்டணம் 4 லட்ச ரூபாய். இந்த பயிற்சிக்கு வருபவர்கள் பற்றி நித்யானந்தர் எங்களிடம் கமெண்ட் அடிப்பார். இதற்கு வந்தவனெல்லாம் சொத்தை எழுதி கொடுத்துட்டு இங்கேயே தங்கிடணும் என்பார். பயிற்சிக்கு வருகிறவர்களுக்கு கிடைப்பது ஒரு ருத்ராட்ச மாலை, காவி உடை என 100 ரூபாய் சமாச்சாரம்தான். ஆனால், நித்யானந்தருக்கு கிடைக்கப் போவது கோடிக்கணக்கான ரூபாய். இந்த புரோகிராமில் வெளிநாட்டு ஆட்கள், என்.ஆர்.ஐகள் நிறைய பேர் சேர்ந்திருப்பார்கள். அவர்களில் முக்கால்வாசி பேர், நித்யானந்தர் சொல்வதுபோல தங்கள் சொத்துகளை எழுதிக்கொடுத்துவிட்டு, ஆசிரமங்களிலேயே தங்கி விடுவார்கள். பல நாடுகளிலும் நித்யா னந்தருக்கு கிளைகள் உருவானதற்கு இவர்கள்தான் காரணம்'' என்று விளக்கிய லெனின் இந்தப் பயிற்சிகளைத் தாண்டி, நித்யானந்தர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக விளக்கினார்.
""வெளிநாடுகளில் உள்ள கிளைகளுக்கு அடிக்கடி செல்லும் நித்யானந்தர், தன்னை சந்திக்கும் பக்தர்களிடம், உங்கள் வீட்டிலேயே சாமி சிலைகளை வைத்து பூஜை செய்வது நல்லது என்று சொல்லி, சிலைகளையும் அவரே தந்து, அதற்கு டாலர்களில் ரேட் வைப்பார். இந்த சிலைகளெல்லாம் மகாபலிபுரத்தில் செய்யப் படுகின்றன. ஆசிரமத்தின் அமைப்பாளர் ஒருவரே செய்து, இதை எக்ஸ்போர்ட் செய்கிறார். இதற்காக நித்யானந்தா இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் என்ற கம்பெனி தொடங்கப்பட்டது. அந்த அலுவலகம், ஆசிரமத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதில் ஒரு போர்டு மட்டும்தான் இருக்கும். கோடிக் கணக்கில் டிரான்ஸாக்ஷன் நடக்கும் இந்த ஏற்றுமதி பிசினஸுக்கு எந்தவித கணக்கு வழக்கும் கிடையாது. எல்லாமே டூப்ளிகேட் பில்தான். இது ஒரு மிகப் பெரிய நிதி மோசடி.
இதுதவிர, பாண்டிச்சேரியில் ஒரு வருடத்துக்கு முன், வோடோஃபோன் முழு டிஸ்ட்ரி பியூஷன் எடுத்தது நித்யானந்தர் ஆசிரமம். பிசினஸ் சரியாப் போகலை என்றதும் விட்டுவிட்டார். புகழ்பெற்ற ஒரு சர்ட்ஸ் நிறுவனத்தில் இவர் பங்குதாரர். மைசூர், பெங்களூர் உள்பட பல இடங்களில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறது இந்த நிறுவனம்.
இப்படி பல வகைகளிலும் சேர்க்கப்படும் சொத்துகள் பற்றி நித்யானந்தர் தன் சீடர்களிடமும் பக்தர்களிடமும் பேசும்போது, உலகில் உள்ள சொத்துகளெல்லாம் இந்த அப்பாவோட சொத்து கள்தான் என்பார். அதாவது, இவர்தான் எங்கள் எல்லோருக்கும் அப்பாவாம். ஒவ்வொரு சொத்து சேரும்போதும், நம்ம சொத்து நமக்கே திரும்ப வந்திருக்குது என்பார். பக்தர்கள் வீட்டுக்குப் போய் தரிசனம் தந்தால் 1 லட்ச ரூபாய் கட்டணம் வாங்குவார். குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் இருக்கணும். 5 நிமிடம்தான் அவர் அந்த வீட்டில் இருப்பார். தன் கையை உயர்த்தி, நல்லா இருப் பீங்க.. செழிப்பா இருப்பீங்க. சாமி சக்தி கூடவே இருக்கும். கேட்ட வரமெல்லாம் கிடைக்கும்னு சொல்லிட்டு கிளம்பிவிடுவார். இவர் இருக்கும் இடத்தைத் தேடி வந்தால் 25 ஆயிரம் ரூபாய் கட்டி ஆசிர்வாதம் வாங்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வழங்குவார். இந்த பணத்துக்கெல்லாம் எந்த ரசீதும் கிடையாது. யாராவது கேட்டால், டூப்ளிகேட் ரசீதுதான் கொடுப்பார்கள். இதுபோல ஒரு முறை ஆசிர் வாத நிகழ்ச்சி முடித்து விட்டு கோவையி லிருந்து சேலத் துக்கு காரில் வந்துகொண்டி ருந்தோம். அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த ப்ரணானந்தா, ""அப்பா... நாம கல்பதரு வரம் தர்றோம். உலகத்தில் உள்ள எல்லா சாமியார்களும் ஏதாவது வரம் தர்றாங்க. அதெல்லாம் நடக்கணு மே?'' என்று கேட்க, அதற்கு நித்யானந்தர் சிரித்துக்கொண்டே, நாம சொல்வதில் பாதி நடக்கும். பாதி நடக்காது. எல்லாம் ச்ப்ன்ந்ங்தான் என்று பதில் சொன்னார்.
12-12-2012ல் உலக அழியும் என்ற பீதி பலருக்கும் இருக்கிறது. அது பற்றி நித்யானந்தரிடம் கேட்டபோது, பாதி பகுதி அழியும். மீதியை நம்முடைய சக்திதான் காப்பாற்றப்போகிறது. அதற்குள் ஒரு லட்சம் பேரை ஞானமடையச் செய்துவிட்டால் இந்த உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிடலாம். அதுதான் என் டார்கெட். 2000ஆம் ஆண்டில் நான் ஞானமடைந்தேன். 10 வருடத்துக்குள் உலகம் முழுவதும் என் ஆசிரமத்தை உருவாக்கிவிட்டேன். நான் நினைத்த டார்க்கெட்டை அடைந்ததும் உலகத்தை கண்ட்ரோல் செய்யும் சக்தியை பெற்றுவிடுவேன் என்றார்.
எத்தனையோ மோசடித்தனங்கள் இருந்தாலும் நித்யானந்தர் ஒரு நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர். எல்லா வேலைகளையும் தொடர்ந்து ஃபாலோ செய்து என்ன முன்னேற்றம் என்பதை தெரிந்துகொள்வார்.
அரசியல் பக்கமும் அவருக்கு ஆர்வம் உண்டு. சேலத்தில் வீரபாண்டி ராஜா தலைமையில் நடந்த விழாவில் கலந்துகொண்டு ஏழைகளுக்கு கடன் வழங்கினார். 5 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலுக்கு ப்ளான் பண்ணிவிட்டார். இதுபற்றி எங்ககிட்டே பேசும்போது, தமிழகத்தை மீட்டெடுத்தே தீருவோம். தி.க., தி.மு.க, அ.தி.மு.க இந்த 3 கட்சிகளால்தான் தமிழ்நாடே கெட்டுப்போச்சு. விரைவில் நாம் பவர்ஃபுல்லா வரணும். நாம சொல்ற ஆள்தான் சி.எம்மா வரணும். தமிழ்நாட்டை நம்ம கண்ட்ரோலில் கொண்டு வரணும் என்றார். இதற்காக நித்யானந்தா பக்தர்கள் அமைப்பு, நித்யானந்தா மகளிர் அமைப்பு இதையெல்லாம் தொடங்கத் திட்டமிட்டிருந்தார். இந்தியாவின் பிரதமரும் தன் ஆளாக இருக்கவேண்டும் என்கிற அளவுக்கு தன் பவர் வளரவேண்டும் என்பார்.
அவருடைய மெகா ப்ளான் என்னவென்றால், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான வாடிகன் போல தன் பீடம் வரணும் என்பதுதான். தன்னுடைய பீடத் திற்கென்று தனி நாடு, தனி கரன்சி, தனி விமானம் வேண்டும் என்று ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்க நினைத்தார். ஆனால், அத்தனையும் அவ ருடைய நடவடிக்கைகளாலேயே சரிந்துவிட்டது. நித்யானந்தர் என்றால் ரஞ்சிதாவுடனும் மற்ற பெண் களுடனானுமான உறவுகள்தான் மக்களுக்கு ஞாபகம் வருகிறது. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்து தானே ஆகணும்?'' என்று முடித்தார் லெனின்.
இந்த ஞானம் நித்யானந்தருக்கு வர வில்லையே!

No comments:
Post a Comment