Friday, April 9, 2010

ப.சிதம்பரம் ராஜினிமா

டெல்லி: சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய வெறித் தாக்குதலுக்கு தானே முழுப் பொறுப்பை ஏற்பதாக கூறி, ராஜானாமா செய்ய விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பிய கடித்த்தை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்து விட்டார்.

தான்டேவாடா சம்பவத்தில் பலியான டெல்லியைச் சேர்ந்த சிஆர்பிஎப் ஜவான்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

அதில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், சிஆர்.பிஎப்புக்கு நான் சல்யூட் செய்கிறேன். அரசு எப்போதும் உங்களுக்குத் துணை நிற்கும். தான்டேவாடா சம்பவத்திற்கு நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். தான்டேவாடாவில் என்ன நடந்ததோ அதற்கு நானே பொறுப்பு.

இதை நான் பிரதமருக்கும் தெளிவாகத் தெரிவித்து விட்டேன். எழுத்து மூலமாகவும் கொடுத்து விட்டன்.

சிஆர்பிஎப் படை என்பது ஒரு ரிசர்வ் படை என்பதற்கும் மேலான வலிமையுடன் கூடியது. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது. தேர்தல், கலவரம், நக்சலைட் ஊடுறுவல், தீவிரவாத ஊடுறுவல் என அனைத்துப் பணிகளிலும் சிஆர்பிஎப் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில நாட்களில் அந்தப் படையினர் சந்தித்த சோகமும், சேதமும் என்னைப் பெரும் வேதனையில் ஆழ்த்தி விட்டது.

இன்று தான்டேவாடாவின் நிழலில் நின்று கொண்டிருக்கிறோம் நாம். இந்த வீரத்தையும், தியாகத்தையும் ஒரு போதும் நாம் மறக்க்க் கூடாது என்றார் ப.சிதம்பரம்.

இங்கு வருவதற்கு முன்பே ப.சிதம்பரம், பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதங்களை அனுப்பி விட்டுத்தான் வந்ததாக தெரிகிறது. அந்தக் கடித்ததில் தான்டேவாடா சம்பவத்திற்கு தார்மீக ரீதியில் பொறுப்பேற்பதகாவும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாகவும் கூறியிருந்தாராம் ப.சிதம்பரம்.

ஆனால் இந்தக் கடித்ததை பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டிஸ்கர் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக வெளியான தகவலால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

No comments:

Post a Comment