Saturday, March 13, 2010

நித்யானந்தரின் இன்னொரு முகம்! காவி உடை பெண் சாமியாருடன் சல்லாசம்! புதிய படங்கள்!


""அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்குள்கூட ஒருவர் உள்ளே போய்விட்டு திரும்பி விடலாம். ஆனால், பெங்களூரு அருகே பிடதியில்செயல்பட்டு வந்த நித்யானந்தர் ஆசிரமத்தில் அவரது படுக்கையறையில் நுழைவதுஎன்பது மாயாஜாலக் கதைகளில் சொல்லப் படுவதைப்போல 7 மலை தாண்டி, 7 கடல்தாண்டி, 7 பாதாள லோகம் தாண்டி உள்ளே இருக்கும் குகைக்குள் நுழைவதற்குசமம். லேட்டஸ்ட் உதாரணம் என்றால், செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்'படத்தில் சோழ மன்னரும் அவருடைய ஆட்களும் தங்கியிருக்கும் தீவுக்குள்நுழைவது போல படாதபாடு படவேண்டி யிருக்கும்'' என்று நம்மிடம் சொல்லத்தொடங்கிய நித்யானந்தரின் சீடரான நித்ய தர்மானந்தா என்கிற லெனின், இத்தனை கட்டுப்பாடுகளையும் தாண்டி, ஆசிரமத்துக்குள் ரகசிய கேமரா பதிவு நடந்ததுஎப்படி என்பதை நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.
""ஒரு ஏக்கர் சுற்றளவுக்கு பரந்து விரிந்திருக்கும் நித்யானந்தரின்இருப்பிடப் பகுதிக்குள் புது ஆட்கள் யாரும் அனுமதியின்றிபுகுந்துவிடமுடியாது. தனது இருப்பிடத்தில் நித்யானந்தர் தங்கியிருக்கும்ரூமுக்குப் பக்கத்தில் ஒரு டைனிங் ஹால் உண்டு. அப்புறம் டிரெட்மில்பயிற்சி இடம், அப்புறம் ஒரு பெட்ரூம். அதையொட்டி ஒரு பாத்ரூம் என 1200சதுர அடியில் அவர் தங்குவதற்காக கச்சிதமாகக் கட்டப் பட்டுள்ளது.நித்யானந்தர் தங்கியிருக்கும் இடத்திலிருந்து 300 அடி தூரத்தில்இருக்கிறது அவருடைய பர்சனல் செகரட்டரி கோபிகாவின் அறை. அந்த அறையில்தான்நித்யானந்தரின் பக்தையான நடிகை ரஞ்சிதாவும் தங்கியிருந்தார்.

கோபிகாவுக்குத் தெரியாமல் எந்த ஒரு பொருளும் நித்யானந்தரின்இருப்பிடத்திற்குள் நுழைந்து விடமுடியாது. அப்படிப்பட்ட நிலைமையில்தான்,கோபிகாவின் அனுமதி யோடு உள்ளே கொண்டு செல்லப்பட்ட ஒரு பொருளுக்குள் அந்தகேமரா இருந்தது. அது ஆபரேட் ஆன டிசம்பர் 23-ல் தொடங்கி டிசம்பர் 25வரையிலான அந்த 48 மணிநேரம் ஆசிரமத்தில் மிக முக்கியமான திருவிழாநடைபெற்றுக் கொண்டி ருந்த நேரம்.
நித்யானந்தரின் உண்மையான பிறந்ததேதி 1.3.78. இதுதான் அவரது பாஸ்போர்ட்டில்உள்ளது. ஆனால், அவர் தன்னுடைய பிறந்ததேதி 1.1.1978 என்றும், புத்தாயிரம்பிறந்த 1.1.2000 அன்று தனக்கு ஞானம் பிறந்ததாகவும்சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனால் ஒவ்வொரு புத்தாண்டிலும் அவருக்குப்பிறந்தநாள் கொண்டாடப்படும். இந்த டூப்ளிகேட் பிறந்தநாளுக்காக 1 வாரகாலத்திற்கு ஆசிரமத்தில் திருவிழா நடக்கும். மேளதாள இசை அமர்க் களப்படும்.பூக்களின் அலங்காரம் கண்ணைப் பறிக்கும். பக்தர்கள் குவிந்துகொண்டேஇருப்பார்கள். நாட்டுக்கு தேசியக் கொடி இருப்பதுபோல, ஆசிரமத்திற்கென்றுதனியாக கொடி உண்டு. அதுபோல ஆசிரமத்திற்கென்று தனியாக இசையும் உண்டு. போனடிசம்பர் 22-ந் தேதியன்று ஆசிரமத்தில் கொடி யேற்றப்பட்டது. அதுதான் விழாதொடக்கத்திற்கான அடையாளம். 23-ந் தேதியிலிருந்து 31-ந் தேதி வரை தினமும்10ஆயிரம் பக்தர்களுக்குக் குறையாமல் ஆசிரமத்திற்கு வருவார்கள். 1-ந்தேதியன்று 1 லட்சம் பேர் திரள்வார்கள். அதற்கான ஏற்பாடுகள் அமோகமாக நடந்துகொண்டிருந்தது.
டிசம்பர் 23-ந் தேதியன்று, உள்ளுணர்வை விழிப்படையச் செய்யும் inner awakening என்ற புரோகிராம் நடந்துகொண்டிருந்தது. இந்த புரோகிராமில் கலந்துகொள்வதற்கு 3 லட்ச ரூபாய் ஃபீஸ். அவ்வளவு பணம் கட்டித்தான் அத்தனை பக்தர்கள் வந்திருந்தார்கள். நித்யானந்தர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சாற்றல் மெஸ்மரிசம் செய்வதுபோல இருக்கும்.அவர், கண்களை மூடச்சொன்னால் மொத்த பேரும் கண்களை மூடிக்கொள் வார்கள். அவர்எப்போது திறக்கச் சொல்வாரோ அப்போதுதான் திறப்பார் கள். அன்றைக்கும்அப்படித்தான் கண்களை மூடி தியானத்தில் மூழ்கச் சொன்னார் நித்யானந்தர்.ஆயிரக்கணக்கான பக்தர்களும் அதை ஃபாலோ செய்து, கண்களை மூடியிருந்தநேரத்தில், நித்யானந்தர் அந்த மேடையிலிருந்து எழுந் தார்.
அங்கிருந்து அவ ரது இருப்பிடம் அமைந்துள்ள இடம், 1 கி.மீ. தூரத்தில்இருக்கும். காரில் ஏறி அவசரமாக தன் இருப்பிடம் சென்ற வர் தன் அறைக்குள்நுழைந்தார். அங்குதான் ரகசிய கேமரா வைக் கப்பட்டிருந்தது. அசைவுகள்தெரிந்தால், ஆட்டோமேட்டிக்காக படப்பதிவு செய்யத் தொடங்கிவிடும். அந்தகேமரா இயங்கத் தொடங்கியிருந்த நேரத்தில், நாங்கள் இன்னர் அவேக்கனிங்நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் பதட்டத் துடன் இருந்தோம். கேமராவை செட்டப்செய்தவர்கள் என்பதால்தான் அந்த பதட்டம். நித்யானந்தரின் செய்கைகள் எப்படிபதிவாகப் போகிறது, அதை எப்படி வெளியே எடுப்பது, மாட்டிக் கொள்ளக் கூடியசூழ்நிலை வந்தால் எப்படித் தப்பிப்பது என்றெல்லாம் யோசித்து அதற் கேற்பவாகனங் களையும் ரெடி பண்ணிவைத்து விட்டு, படபடப் போடு இருந்தோம். அந்தபதட்டமான நேரத்திலும் எனக்கொரு யோசனை. நித்யானந்தர் தன்னுடைய அறைக்குவந்துவிட்டாலும் அவருடைய பேச்சு, விஷுவலாக திரையில் ஒளிபரப் பாகிக்கொண்டிருந்தது. ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருக்கும் பக்தர்கள் அதைப்பார்க்காமல் இருக்க முடியாது. அந்த விஷுவலுக்குப் பதிலாக, ரகசிய கேமராவிலிருந்து டைரக்ட் லைவ்வாக ஒளிபரப் பினால் அத்தனை பேரும் பார்க்கமுடியும் என்பதால், அது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கானடி.வி. டீம் எங்கள் தரப்பில் ரெடியாக இல்லை. அத்துடன், லைவ்வாக ஒளிபரப்புவதற்கான உபகரணங்களும் இல்லை. அதேநாளில், இன்னொரு பெண்ணுக்கு அவர் கொடுத்தடார்ச்சர் ரொம்ப கொடுமையானது. அதை உங்ககிட்டே சொல்லும் நேரம் வரும்.

முதல் நாள் பதிவு களை எடுத்துப் பார்க்க ஆசை. ஆனால் முடிய வில்லை. கண்காணிப்புகள் பலமாக இருந்தன. 10 மணி நேரம் ஓடிவிட்டது. 15 மணி நேரம்ஓடிவிட்டது. ஒரு நாள் கழிந் தும், பதிவுகளை எடுக்க முடியவில்லை. கடைசிநாள் (டிச.25) எல்லாம் முடிந்து, கேமராவை எடுத்து அதில் என்னபதிவாகியிருக்கிறது என்பதைப் பார்த்தபோது, பயங்கர ஷாக். நடிகைரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் காட்சிகளைப் பார்த்ததும் ஆச்சரியமும்அதிர்ச்சியுமடைந்தோம். இதை எப்படி வெளியே கொண்டுபோவது, ரகசிய வீடியோஎடுக்கத் துணை நின்றவர்களை எப்படி வெளியேற்றுவது என்பதையெல்லாம் திட்டமிட்டோம். ஏனென்றால், நித்யானந்தர் தரப்பிடம் மாட்டிக்கொண்டால் என்னநடக்கும் என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான். எங்கள் திட்டமிடல் சரியாகஇருந்ததால், அந்த வீடியோ கேசட்டை வெளியே கொண்டு வந்தோம்.

அந்த வீடியோவில் ரஞ்சிதாவோடு கோபிகாம்மாவைப் பார்த்ததும் எங்களுக்குபயங்கர ஷாக். இவரா இப்படி என்று ஷாக் ஆக வில்லை. அம்மாவும் வீடியோவில்மாட்டிக்கிட்டாரே என்ற ஷாக்தான். அவங்க நித்யானந்தரோடு நெருக்கமா இருக்கிறவிஷயம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆசிரமத்தில் உள்ள எல்லோருமே பர்சனல்செகரட்டரி கோபிகாவை அம்மான் னோ, அக்கான்னோதான் கூப்பிடு வோம்.நித்யானந்தரேகூட சில நேரங்களில் அம்மான்னுதான் சொல்லுவார். கோபிகாம்மாஎங்க எல்லார்கிட்டேயும் ரொம்ப அன்பா அரவணைப்பா இருப்பாங்க. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தரையும் அவரைப்போல ஒரு சிலரையும் தவிர, மற்ற எல்லாரும்நல்லவங்க தான். அவங்களில் கோபிகாம்மா ரொம்ப நல்லவங்க. அம்மா என்றசொல்லுக்குத் தகுந்தபடி மதர் குவாலிட்டி உள்ளவங்க.
2005-ம் வருஷம் ஜனவரியில், நித்யானந் தரின் டூப்ளிகேட் பிறந்தநாளை யொட்டி,நித்யானந்தம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் டிவோட்டியாக கலந்துகொண்டபல்லாயிரக்கணக் கானவர்களில் ஒருவர்தான் கோபி காம்மா. கேரளாவைச் சேர்ந்தபெண்மணியான இவர், அமெரிக்காவில் தன் கணவருடன் சாஃபட்வேர் துறையில் வேலைபார்த்து வந்தார். லட்சக் கணக்கான ரூபாய் சம்பளம். அவங்க 2 பேருமே நித்யானந்தம் நிகழ்ச்சியில் 15 நாட்கள் கலந்துக்கிட்டாங்க. அப்ப அந்தநிகழ்ச்சியெல்லாம் இலவசமாகத்தான் நடந்தது. நானும் அந்த க்ளாசுக்குப் போயிருந்தேன். ரொம்ப அருமையா நித்யானந்தர் க்ளாஸ் எடுத்தார். அந்தக் க்ளாசில்எங்களைப் போலவே கோபிகாம்மாவும் அவங்க கணவரும் நித்யானந்தர் மேல் ரொம்பஅபிமானம் ஆயிட்டாங்க. அந்த க்ளாசில் கலந்துக்கிட்டவங்கதான் இப்பஆசிரமத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிற வங்க. நீங்க அப்ப க்ளாசுக்குவந்திருந்தாலும் நித்யானந்தரின் மெஸ்மரிசத்துக்கு கட்டுப் பட்டிருப்பீங்க.ஆசிரமத் திலேயே தங்கியிருப்பீங்க. அந்தளவுக்கு அவ ருடையே பேச்சும்செயல்பாடுகளும் இருக்கும்.

கோபிகாம்மாவுக்கும் அவங்க கணவருக்கும் மெடிட்டேஷன் சம்பந்த மான நல்லடெக்னிக்குகளை நித்யா னந்தா கற்றுக் கொடுத்தார். இரண்டு பேரும் தங்களைஆசிரமத்துக்கு அர்ப்பணிச்சிட்டாங்க. பிடதி ஆசி ரமத்தில் பர்சனல்செகரட்டரியாகி விட்டார் கோபிகாம்மா. அவரது கணவர், லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ளஆசிரமத்தில் இருக் கிறார். நித்யானந்தர் எங்கே டூர் போனாலும் அவர்கூட,கோபிகாம் மாவும் போவார். ரொம்ப நல்ல மனசு உள்ள அவங்க, இந்த ஃபிராடு கையில்சிக்கிக் கிட்டதுதான் பிரச் சினையே. இந்தம்மா மட்டுமில்லை. இவங் களைப்போலஇன்னும் பல பெண்கள் நித்யானந்தரின் பெட்ரூமில் சல்லாபத்துக்கு ஆளாகிசிக்கி சீரழிஞ்சிருக்காங்க.

இதிலும் நித்யானந்தருக்கென்று தனி டெக்னிக் உண்டு. ஆசிரமத்தில் உள்ளஇளம்பெண்களைக் கூப்பிட்டு, தனக்கு கால் அமுக்கிவிடச் சொல்வார்நித்யானந்தர். அவர் நடத்தும் என்.எஸ்.பி. சக்தி தரிசனம் புரோகிராம்களில்பெண்கள் அவருக்கு கால் அமுக்கிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு அவர் ஒருவிளக்கம் கொடுப்பார்.

"இந்த பிரபஞ்சத்திற்கே நான்தான் கடவுள். இப்ப உடம்புக்குள்ளே அடங்கியிருக்கேன். அதனால் எனக்கு எல்லை தெரியலை. கை, கால்கள் எங்கே இருக்கிறதுஎன்பதே தெரியவில்லை. அதனால் எனக்கு உணர்வு வரலை. அது வருவதற்காகத்தான்அழுத்தச் சொல்றேன்' என்பார். நாங்களும் இதை நம்பினோம். அவர்தான் கடவுள்என்று நம்புகின்ற பெண் பக்தர்கள், கை-கால் களை அமுக்கிவிடுவதற்கு இதுதான்காரணம். அவ்வப்போது சில ஆண் சந்நியாசிகளையும் கால் அமுக்கிவிடச் சொல்வார்இந்த பிரபஞ்சக் கடவுள். சில சமயங்களில் தன் உடலின் எல்லை எது என்றுதெரிந்துகொள்வதற்காக கைத்தடியையும் பயன்படுத்துவார்.

பாடியிலிருந்து எனர்ஜி அதிகமா ரேடியேட் ஆகும். அதை சரிசெய்வதற் காகத்தான்அழுத்தணும் என்பார். அதற்காக பெண் சந்நியாசிகளை தன்னோட அறைக்குவரச்சொல்வார். எந்தெந்த பெண்களை அனுமதிப்பது என் பதை கோபிகாம்மாதான்முடிவு செய்வார். கால் அமுக்க வரும் பெண்களை அப்படி யே மெஸ்மரிசம் செய்து,சீரழித்து விடுவார். அவருக்கு கால் அமுக்கிவிட்ட ஒரு பெண்கூட இதிலிருந்துதப்பியதில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு நடந்த விஷயம் இன்னொரு பெண்ணுக்குத்தெரியாது. இந்த ரகசியத்தை அவர் ரொம்பவும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றுவார்.

"என்னுடன் இணைந்தால், கிருஷ்ண னுடன் கோபியர்கள் கூடியதற்கு சமம். என்னுடைய எனர்ஜி உங்களுக்கு கிடைத்துவிடும்' என்று சொல்வார். எந்தப் பெண்அவருடன் இருக்கிறாரோ, அந்தப் பெண் தனக்கு மட்டுமே எனர்ஜி கிடைத்ததாக நினைத்துக் கொள்வார். தன்னைப் போலவே பல பெண்களுக்கு சாமியார் எனர்ஜிகொடுத்திருக்கிறார் என்று தெரிந்துவிட்டால், பெண்களுக் கிடையே பொறாமை, கோபம், சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுவிடும் என்பது நித்யானந்தரின் கணிப்பு. அவர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகள் தன்னை அம்பலப்படுத்திவிடும் என்கிறபயத்திலேயே அவர் ஒரு பெண்ணுடனான உறவை இன்னொரு பெண் ணிடம் வெளிப்படுத்தமாட்டார்.

கால் அமுக்கி விடும் பெண்களில் கோபிகாம்மாவும் உண்டு. அவங்க மேலே எங்களுக்கு மதிப்பிருப்பதால், அது பற்றி சொல்ல முடியலை. பெண் சந்நியாசிகளிடம், கடவுளுக்கு எல்லாம் செய்ய இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்லித்தான் அனுப்புவார். அவங்களுக்கே ஒரு கட்டத்துக்குப் பிறகுதான், கால் அமுக்கச் சொல்வதன் ரகசியம் தெரிந்திருக்கிறது.

ஆசிரமத்திலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள் இன்னும் எவ்வளவோ இருக்குது. ரஞ்சிதாவும் நித்யானந்தரும் இருக்கும் வீடியோவின்உண்மைத்தன்மை பற்றி போன முறையே அக்குவேறு ஆணிவேறாக சொல்லிவிட்டேன்.அதன்பிறகும் நித்யானந்தர் தரப்பிலிருந்து உண்மைகளை மறைத்துவிடலாம் என்றுநினைத்துக்கொண்டு அந்த வீடியோ பற்றி சந்தேகம் கிளப்புவது,பொதுமக்கள்கிட்டே காமெடியாகத்தான் இருக்குது.

ரஞ்சிதாவோடு நித்யானந்தர் இருந்த நேரத்தில், ஒரு கட்டத்தில் அவருக்கு அந்த கேமரா இருக்கும் பக்கம் ஏதோ ஒரு சந்தேகம் வந்து, தன் கையை நீட்டுவதை வீடியோவில் பார்க்கலாம். கையை நீட்டிக்கொண்டே ரஞ்சிதாவிடம் நித்யானந்தர் ஏதோ சொல்ல, ரஞ்சிதா நெளிகிறார். அவர்கள் இருவரின் முகமும் நன்றாகப்பதிவாகியுள்ளது. நித்யானந்தர் கைகாட்டிய திசையில் ரஞ்சிதா பார்த்த அந்தநொடி...

நிறைய சொல்கிறேன்...... காத்திருங்கள்.''

No comments:

Post a Comment