Wednesday, March 17, 2010

நானும் ரஞ்சிதாவும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம்! இதிலே... நித்யானந்தா ஆடியோ! -காமராஜ்


நித்யானந்தாவின் வீடியோ காட்சிகள் மார்ச் 3-ந் தேதி, நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியாகி, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியபோது, அவரது ஆன்மீக ஆதரவாளர்களும், ஆசிரமத்தைச் சேர்ந்த சாமியார்களும் இது நித்யானந்தாவே அல்ல... வேறு யாரையோ வைத்து எடுத் திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அன்றைய தேதியில் நித்யானந்தரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

மார்ச் 7-ந் தேதியன்று முதன் முதலில், டி.வி. சேனல்களுக்கு தன்னுடைய வீடியோ விளக்கத்தைக் கொடுத்த நித்யானந்தா, சட்டப்படி இதில் எந்த தப்பும் இல்லை என்று சொன்னார். இரண்டாவது வீடியோ விளக் கத்தில், உண்மையைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மார்ச் 13-ந் தேதி அவரது மூன்றாவது வீடியோ விளக்கம் வெளியானது.

அதில், "நடிகை ரஞ்சிதா தனக்கு பணிவிடைதான் செய் தார் என்றும், மற்ற காட்சி களெல்லாம் மார்ஃபிங் முறையில் சித்தரிக்கப்பட்டவை என்றும் இதுபற்றி விசாரித்துக் கொண்டி ருப்பதாகவும், சதிவேலையை அம்பலப்படுத்துவோம்' என்றும் சொல்லியிருக்கிறார். மாறி, மாறி பொய் சொல்லிக் கொண்டி ருக்கும் நித்யானந்தர், "நானும் ரஞ்சிதாவும் செக்ஸ் வைத்துக் கொண்டதில் என்ன தவறு?' என்று இந்த விவகாரத்தை அம் பலப்படுத்திய ஸ்ரீநித்ய தர்மா னந்தா (எ) லெனினிடம் சமா தானத்திற்காக செல்போனில் தொடர்புகொண்டு பேசியவை அனைத்தும் முழுமையாக டேப் செய்யப்பட்டுள்ளது.

பல முறை நடந்த உரை யாடல்களில், அவற்றை கவன மாக டேப் செய்த லெனின், நித்யானந்தரின் பேச்சுகளுக்கு பெரும் பாலும் "ம்... ம்..' என்றே பதிலளித்துள்ளார். அந்த ஆடியோ ஆதாரம் இங்கே வெளியிடப்படுகிறது. நித்யானந்தர் ஆசிரம மர்மங்களின் மற்றொரு பகுதியை வழக்கம்போல் உங்கள் நக்கீரனே முதன்மை யாக வெளியிடுகிறது.

""லீகலா என்ன பண்ண முடியும்? ரெண்டு பேரும் அடல்ட்டுங்கும்போது லீகலா ஒண்ணும் பண்ண முடியாது.''

""ம்...ம்''

""லீகலா இதுல என்ன பிராப்ளம் வர முடியும்னு நினைக்கிறே..'

'""ம்..ம்..''

""ரஞ்சிதாவும் நானும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம். இதிலே என்னடா தப்பு? புரிஞ்சுக்கடா தர்மா.. தயவு செஞ்சு புரிஞ்சுக்கடா தர்மா.''

""இல்ல.. ஒரு பக்கம் பார்த்தாடா... நாங்க ரெண்டு பேரும் அடல்ட். நாங்க ஒத்துக்கிட்டா இதிலே என்ன இருக்கு? நான் ஸ்ட்ரெய்ட்டா பப்ளிக்கில் வந்து... இரண்டு அடல்ட்டுங்க நாங்க... எங்களுக்கு என்ன வேணுமோ... எங்க லைஃப்! இதை சொன்னேன்னாலே முடிஞ்சு போச்சு. இதை அப்ரிஷியேட் பண்ணமாட்டாங்களா?'' -(ஏக்கத்தோடும் பயத்தோடும் கேட்கிறது நித்யானந்தரின் குரல்)

"" ம்..''

""அதொரு பக்கம்... இன்னொரு பக்கம் பார்த்தா.. நான் சந்நியாசி இல்லை.. ம்.. நான் ஒரு ஞானிங்கிறதால மக்கள் வந்தாங்களே தவிர, நான் ஒரு சந்நி யாசிங்கிறதால யாரும் என்கிட்டே வரலைடா.'' (இதுவரை 7000 மணிநேரப் பிரசங்கத்திலோ, வீடியோ-ஆடியோவிலோ, புத்தகங்களிலோ நான் சந்நியாசி இல்லை என்று நித்யானந்தர் சொன்னதேயில்லை. முதன்முதலாக இந்த செல்போன் உரையாடலில்தான் சொல்கிறார்)

""ம்..ம்..''

""அதை ஏன் யாரும் ஒத்துக்க மாட்டேங்குறீங்க? ம்.. ஊகும்.. நான் என்ன சொல்றது?'' (நம்பிக்கை இழந்து முனகுகிறார் நித்யானந்தர்)

""விவேகானந்தர் இருந்தப்பவும் நிவேதிதாகூட இருந்ததுக்கு இதே மாதிரி தான் பிராப்ளம் பண்ணு னாங்க. அதனாலதான் அவர் உடம்பை விட்டுட்டார். இராமகிருஷ்ணருக்கு அதே மாதிரி சாரதாதேவிகூட இருந்ததா ப்ராப்ளம் பண்ணுனாங்க. ம்.. அதை என்ன சொல்றது?''

""ம்..ம்..''

""ரமண மகரிஷிக்குக்கூட கூடவே... பாட்டிம்மா ஒண்ணு இருந்தது.

''""ம்.. ம்..''"

"ஓஷோவுக்கும் இதே மாதிரிதான்.. அதை என்ன சொல்றது?

''""ம்..''""

மனித இனமே இப்படித்தான் போல இருக்குடா?

நான் மட்டும் என்ன பண்ணுறது?''

""அதான் வேற ஒண்ணுமில்லடா.. ஒரு.. ஒரு.. ஒரு.. (தொண்டை அடைக்கிறது) அதைப் பார்த்தா என்ன இருக்கு? பப்ளிக்கா நான் எந்திரிச்சி நின்னு, இது என்னோட லைஃப்னு சொன்னா, முடிஞ்சு போச்சுடா.

ஓஷோ இல்லாம இல்லை... ராமகிருஷ்ணர் இல்லாம இல்லை.. .. விவேகானந்தர் இல்லாம இல்லை..

அது மாதிரி ஞானிகள் எல்லாம் ஆவுறதுதான்.நான் மட்டும் என்ன பண்ண முடியும்?''

""ம்... ம்...''"

"என்ன புரியுதா?''

""ம்..''""இந்த நிலைல மக்கள், பக்தர்கள் என்னை விட்டுட்டுப் போவாங்கன்னா நினைக்கிறே?''""ம்.. ம்..''

""அப்படியெல்லாம் ஆக வேண்டாம். பெரிய பிராப்ளம் எல்லாம் ஆகாம சைலன்ட்டா இருக்கணும்போல தோணு துடா. அதுக்காகவேதாண்டா சைலன்ட்டா எல்லாத்தையும் பண்ணனும்னு நெனைக்கிறேன். அதையும் நாமதான் பார்க்க ணும்டா.''

""ம்.. ம்..''

""நம்ம மக்கள் எமோஷனா ஆனா அதுக்கு அப்புறம் அதுக்கும் நாமதாண்டா பொறுப்பாக வேண்டியதாப் போகுது.''

""ஆமாமா..''

""அதனால எப்பவும் சைலன்ட்டா ஆகணுமேங்கிறதுக்காகத்தான் இவ்ளோ தூரத்துக்கு ஒர்க் பண்றேண்டா''

""டேய் தர்மா... நல்லாருக்கியாடா கண்ணா?.'' (நித்யானந்தரின் குரலில் பாசமும் பரிவும் கலந்திருக்கிறது)

""நல்லாருக்கேன் சொல்லுங்க சாமி...''. (தர்மானந்தா லெனின் குரல் இயல் பாக உள்ளது)

""டேய் தர்மா.. சத்தியமா... டேய் சத்தியமா உனக்கு நான் ஹார்ம் (தொந்தரவு) பண்ண மாட்டேன்டா. (கெஞ்சல்) சத்தியமாடா. பார்டா தர்மா... நீ எனக்குப் பாதுகாப்பாகவும், நான் உனக்குப் பாதுகாப்பாகவும் இருந் தோம்டா..''

""ம்... ம்..''

""இப்ப நீ என்னைப் பார்த்து பயப்படுற மாதிரியும், நான் உன்னைப் பார்த்து பயப்படுற மாதிரியும் ஆகலாமாடா கண்ணா? (பெருமூச்சு விடுகிறார்) மன் னிச்சுருடா..''

""ம்.. ம்..''

""வேணாண்டா கண்ணா.... தர்மா..

மன்னிச்சிருடா!''""அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.''"

"தயவு செய்து மன்னிச்சிடுறா..

.''(ஏதோ சொல்ல முயற்சிக் கிறார் தர்மா)

""இருடா.. ஒரே ஒரு நிமிஷம்டா.. என்னை ஆஸ் பிடலுக்கு தூக்கிட்டு போயிட்டி ருக்காங்கடா.. ஒரே நிமிஷண்டா.. வண்டியை ஓரங்கட்டிட்டுப் பேசறேண்டா.''

""நான் யாருக்கும் தொந்தரவு தரலையேடா... நான் இந்த விஷயத்தில் எல்லோரையும் நம்பிட்டேன்டா. இந்த மாதிரி பிரச் சினை வரும்னு நான் எதிர்பார்க் கலை. தயவு செய்து மன்னிச் சிடுடா.''

""ம்.. ம்..''

""மன்னிச் சிருடா தர்மா.. உன்கிட்டே மன் னிப்பு கேக் கிறண்டா.. தர்மா.. (குரல் உடைந்து தேம்புகிறார்) நடந்தது எதுவா இருந்தாலும் மறந்திரலாம் தர்மா.. சத்தியமா நான்... (மீண்டும் தேம்பு கிறார். மூக்கை உறிஞ்சுகிறார்) டேய்... நீயே லாயர்டா.. இல்லைன்னா பெரிய சீனியர் லாயர்கிட்டே கேட்டு நீயே எழுதியனுப்பு. நான் உனக்கு எந்த விதத்திலும் ஹார்ம் பண்ண மாட்டேன். நானோ, தியானபீடமோ, தியான பீடம் சம்பந்தப்பட்டவங்களோ ஹார்ம் பண்ணமாட்டோம்னு எழுதிக் குடுத்திடுறோம்டா தர்மா.''

""ம்.. ம்..''

""வேற ஒண்ணும் எனக்கு வேணாம்டா தர்மா..

'' (பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்)"

"ரிட்டனா எழுதித் தர் றேண்டா தர்மா..

சீனியர் லாயர்கிட்டே கேட்டு எழுதி அனுப்பு.''

""ம்..ம்...'' (நித்யானந்தர் எழுதிக் கொடுத்த கடிதம் வரும் இதழில்)

""தர்மா.. தர்மா.. இன்னொன்று தர்மா... நான் வேற யாரையாவது ஹார்ம் பண்ணி, அவங்க உன்கிட்டே வந்து அழுதிருந்தாங்கனா.. (தேம்பு கிறார்) அவங்க காலிலே விழுந்து மன்னிப்பு கேக்கிறேன் தர்மா. (அவருடைய இன்னொரு செல் போனில் ரிங்டோன் கேட்கிறது) ஒரு நிமிஷம்டா தர்மா, இன்னொரு செல் போன் அடிக்குது. அது யார்னு பேசிட்டு உன்கிட்டே பேசு றேன்.''

""தர்மா.. இந்த ஒரு தடவை மன் னிச்சிடுடா... நீ நினைச்சா முடி யும்டா.. பணம் எவ் வளவு வேணும்னா லும் தர்றேண்டா..''

லெனினிட மிருந்து பதில் இல்லை)

""சாமி, பணம் செலவு பண்ண மாட் டேன்னு நினைக்கிறியா? எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்டா. உனக்கு பணம் தர்றேங்கிறேன். நீ ஒண்ணும் சொல்ல மாட்டேன்கிற.. உனக்கு நான் என்ன செய்யட்டும்? உன்னை ராஜா மாதிரி வச்சிருக் கேன்டா. வந்திடுடா. தனி ஆசிரமம் வச் சுத் தர்றேன். இல் லைன்னா இந்த ஆசிரமத்துல நம்பர் டூ நீதாண்டா.''

""சேலத்திலே என்னை கொலை பண்ண பார்த்தீங்க. உயிர் தப்பி வந்தேன்.''

""ரிட்டனா உன் உயிருக்கு யாராலயும், எதுவும் நடக்காதுன்னு எழுதித்தர்றேன் தர்மா.. '' (நித்யானந்தர் எழுதிக் கொடுத்த கடிதம் வரும் இதழில்)

லெனின் என்கிற தர்மானந்தாவுடன் பல முறை செல்போனில் பேசியிருக்கும் நித்யா னந்தா, தன்னுடைய செயலை ஒப்புக் கொள்வதையும், அது தவறில்லை என நிரூ பிப்பதற்காக எதை யும் செய்யத் தயா ராக இருப்பதை யுமே இந்த ஆடியோ ஆதாரம் அம்பலப்படுத்து கிறது.

நித்யானந் தாவின் பேச்சு குறித்து லெனின் இப்போது என்ன சொல்கிறார்?

""நித்யானந்தா என்னிடம் பேசி யதை கேட்கும் அனைவருக்கும் லெனினுக்கு ஏன் இத்தனை வீம்பு என்று எண்ணத் தோன்றும். நித்யா னந்தா என்னிடம் பேசும்போதெல்லாம் என் மனதுக்குள் ஓடியது என்ன தெரியுமா? நித்யா னந்தாவால் சீரழிக்கப்பட்ட பெண்கள் என்னி டம் சொன்ன விஷயங்கள்தான். அவர்கள் கதறி அழுத நினைவுகள்தான். இந்த அயோக்கியன் நடிக்கிறார். விடக்கூடாது என்பதே!''

3 comments:

  1. Thanks bossu. I waited for your update .

    ReplyDelete
  2. Please Check this blog for more articles on Nithyananda's Cult - A More Organized Fraud

    http://nithyananda-cult.blogspot.com/

    ReplyDelete
  3. Wonderful blog. Can you please do the articles on Paramahamsa Nithyananda's biography which is a complete lie.

    You can see the biography details in nithyananda-cult blog.

    ReplyDelete