Wednesday, March 24, 2010

புனித கும்பமேளாவில் கும்மாளம்! இளம்பெண்களை நித்யானந்தா வசியம் செய்த மர்மம்!



shockan.blogspot.com
கும்பமேளா!

இது உலகெங்கும் வாழும் இந்துக்களின் புனித விழா. இந்து மதத்தின் நம்பிக்கையின்படி, 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு முனிவருடைய அஸ்தி இன்னமும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த அஸ்தி கலசத்திலிருந்து ஒரு துளி சாம்பலை எடுத்து, இந்தியாவின் தண்ணீர் தெய்வமாக விளங்கும் கங்கை நதியில் கரைக்கும் நாளில், இந்துக்கள் அங்கே கூடி, கங்கையில் நீராடினால் பாவம் தொலை யும், ஞானம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.


இன்றைய இந்துக்கள் மட்டுமல்ல, பவுத்தம், சமணம், சீக்கியம் எனப் பிரிந்து சென்ற மதத் தினருக்கும்கூட இந்த புண்ணியம் உண்டு என்பதுதான் இந்துமத நம்பிக்கை. அதனால், உலகெங்கும் வாழும் இந்தியர்கள், கும்பமேளா வுக்காக ஹரித்வார், வாரணாசி போன்ற திருத் தலங்கள் அமைந்துள்ள ஊர்களில் கோடிக் கணக்கில் குவிகிறார்கள். 12 ஆண்டுகளுக்கொரு முறை மெகா வைபவமும், 4 ஆண்டுகளுக் கொருமுறை அதன் ஒரு பகுதியுமாக நடை பெறும் கும்பமேளாவிற்கு இந்து மதத்தின் அனைத்து சாமியார்களும் திரண்டு வருவார்கள். புனித நீராடும்போது தங்களின் ஞானமும் தவவலிமையும் கூடுகிறது என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால், விழா முடியும்வரை அங்கேயே தங்கியிருந்து தங்கள் ஆன்மீகக் கடமையை ஆற்றுவார்கள். சாமியார்களுக்கு சேவை செய்வது பெரும்புண்ணியம் என்று கருதி, பல அமைப்புகளும் அவர்களுக்கு இடவசதி, உணவு ஆகியவற்றை அளிக்கும்.

அதுபோல நித்யானந்தர் தன் சீடர்களுடன் 2007-ம் ஆண்டு வாரணாசியில் நடந்த கும்பமேளாவுக்கு சென்றிருந்தார். அவரும் சீடர்களும் தங்கு வதற்காக அரை ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்பட்டது. அதில் 20 டெண்ட்டுகள் போடப்பட்டிருந்தன. அவரவரும் அவர் களுக்கான டெண்ட்டுகளில் தங்கியிருந்த நிலையில், இரவு நேரத்தில் நித்யானந்தரின் டெண்ட்டுக்குள் ஒரு பெண் நுழைவதை மற்ற டெண்ட்டுகளில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். அரை மணி நேரம் கழித்து, அந்த உருவம், நித்யானந்தரின் டெண்ட்டிலிருந்து வெளியே வந்துள்ளது.

ஆசிரமத்தில்தான் அக்கிரமம் என்றால், ஹரித்வாரில் பாவங்களைக் கழுவி புண்ணியம் பெறுகின்ற கும்பமேளா விழாவிலும் இவருக்கு இதே வேலைதானா என்று சீடர்களும் மற்ற சாமியார்களும் அதிர்ச்சியடைந் துள்ளனர். கோடிக்கணக்கில் மக்கள் குவிந்தாலும், புனிதமான கும்பமேளாவில் இது போன்ற தவறுகள் எதுவும் நடப்பதில்லை. அடிதடி-சண்டை-சச்சரவு போன்றவற்றிற்கும் இடமிருக்காது. அங்கேயே தன் லீலைகளை நடத்தியிருக்கிறார் நித்யானந்தர்.

எந்த இடமாக இருந்தாலும், பெண்களைத் தன் கட்டிலில் வீழ்த்துவதை ஒரு கலையாகவே கையாண்ட நித்யானந்தாவின் ஆன் மீக ஆராய்ச்சி கள் குறித்து நம்மிடம் தொடர்ந்து விளக்கினார் ஸ்ரீநித்யதர்மானந்தா என்கிற லெனின்.



மாங்கனி நகருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த ராசியான ஊர் அது. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் ஆசிரமத்தில் இருந்தார். அவரது தம்பியும் சந்நியாசம் வாங்கிக் கொண்டு ஆசிரமத்தில் இருந்தார். நித்யானந்தரின் கவனத் திற்குரியவராக இந்தப் பெண் மாறியதால், மெல்ல தன் வலையில் வீழ்த்தினார். பணிவிடைகள் என்ற பெயரில் தன்னுடைய அறைக்கு அழைத்து, கால் அமுக்கச் சொல்லி, தன் வேலைகளை ஆரம்பித்தார். நித்யானந்தரின் சேட்டைகளைப் பொறுக்க முடியாமல் அந்தப் பெண் தவித்தார். தம்பியிடம் இது பற்றி சொல்லியும் எதுவும் செய்ய முடியவில்லை. சக பெண்களிடம் சொன்னால், "இது கடவுளோட அனுக்ரகம்.. எல்லாருக்கும் கிடைக்காது.. அட்ஜஸ்ட் பண்ணிக்க..' என்ற பதிலே வந்தது. ஆனாலும் உண்மையான ஆன்மீகத் தேடலை எதிர்பார்த்து வந்த அந்தப் பெண்ணுக்கு நித்யானந்தரின் வேறுவித மான தேடல்கள் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கொஞ்சம் தயங்கித் தயங்கி எதிர்ப்பு தெரி வித்திருக்கிறார்.


தன் வலையில் சிக்கிய ஒரு பெண், எதிர்ப்புக் காட்டத் தொடங்கி, இந்த விஷயத்தை வெளியே சொல்லிவிட்டால் தன்னுடைய இமேஜ் மொத்தமும் அடிபட்டுவிடும் என்று யோசித்த நித்யானந்தர், அந்தப் பெண்ணுக்கு மனநோய் என்று தன் பர்சனல் செகரட்டரி உள்ளிட்டவர்களிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். நித்யா னந்தரின் வார்த்தைகள், ஆசிரமத்திலிருந்த எல்லோரது வாயிலிருந்தும் வெளிப்பட ஆரம்பித்தன. அந்தப் பெண்ணைப் பார்த்தால், "உனக்கு மனவியாதி. நல்ல ட்ரீட்மெண்ட் எடு..' என்று சொல்வார்கள். இந்தத் தொடர் டார்ச்சரால், அந்தப் பெண் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட மனநோயாளிபோலவே ஆகிவிட்டார். அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். தம்பி மட்டும் இன்னமும் ஆசி ரமத்தில்தான் இருக்கிறார்.


இதுபோலத்தான் குமரியைச் சேர்ந்த 2 சகோதரி கள். அவர்கள் இரட்டையர். இருவரும் பயிற்சி வகுப்புக்கு வந்தார்கள். நித்யானந்தரின் தேன் ஒழுகும் பேச்சில் மயங்கிவிட்டார்கள். ஆசிரமத்தில் சேரவேண்டும் என்று அவங்க பெற்றோரிடம் தகராறு செய்துவிட்டு இங்கே வந்து சேர்ந்தார்கள். அதில் ஒரு பெண்ணை நித்யானந்தர் தன் லிஸ்ட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார். சாமியாரின் லீலைகளுக்கு உடன்பட்ட அவர், அதையே அட்வான் டேஜாக எடுத்துக் கொண்டார். ஆசிரமத்தில் இருக்கும் சக பெண்களிடம், "சாமி.. எனக்கு ரொம்ப நெருக்கமானவர். அந்த கிருஷ்ணனுக்கு நான்தான் கோபிகை. அந்த சிவனுக்கு நான்தான் பார்வதி' என்றெல்லாம் சொல்ல ஆரம் பித்துவிட்டார். பாவம்.. அந்தப் பெண். நித்யானந்தர் என்கிற அந்த காமுகக் கண்ணனுக்கு ஆசிரமத்தில் பல கோபியர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆசிரமத்திற்குப் போன தங்கள் பெண்களின் நிலை பற்றி அறிந்து பதறிப்போன பெற்றோர், நேரில் வந்து, பயங்கரமாக சண்டை போட்டு அழைத்துச்சென்றார்கள்.


18 வயதிலிருந்து 30 வரையிலான பெண்கள்தான் பெரும்பாலும் நித்யா னந்தரின் கோபிகைகள். அதிலும் அழகான பெண்கள், பணக்கார வீட்டுப் பெண்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக உள்ள பெண்கள், சாஃப்ட்வேர் போன்ற நல்ல வருமானம் உள்ள துறைகளில் இருக்கும் பெண்கள் என்று எடைபோட்டுத்தான் தேர்வு செய் வார் நித்யானந்தர். கல்யாணமான வர்களாக இருந்தாலும், தனது பக்தைகளாக வரும் அழகான பெண்களை எப்பாடுபட்டாவது வலையில் வீழ்த்திவிடவேண்டும் என கணக்குப் போட்டு செயல்படுவார். அப்படி வீழ்த்தப்படும் பெண்கள், கொஞ்ச காலத்தில் தங்கள் கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு, சாமியாருடனேயே செட்டிலாகிவிடுவதும் உண்டு.


பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன் கணவர் சகிதமாக நித்யானந்தரின் பிரசங்கத்தைக் கேட்க வந்தார். கணவன்-மனைவி இருவருக்குமே அவரது பிரசங்கம் பிடித்துப் போய்விட்டது. நித்யானந்தருக்கோ அந்த பெண்மணியை மட்டும் பிடித்துப்போனது. தனது டெக்னிக்குகளையெல்லாம் பயன்படுத்தி , கட்டிலில் தள்ளிவிட்டார். சாமியாரைப் பார்த்தபிறகு, கணவரிடம் அந்தப் பெண்மணி இணக்கமாக இல்லை. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. இதுபற்றியும் நித்யானந்தரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் அந்தப் பெண்மணி. நித்யானந்தரோ... "நீயும் உன் கணவரும் பிரிந்துவிடுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். அவரது வார்த்தைகளை கடவுளின் வாக்காக கருதிய இருவரும், டைவர்சுக்கான நடவடிக்கைகளில் இறங்கினர். அந்த சமயத்தில்தான், தன்னைப் போலவே இன்னும் பல பெண்களையும் நித்யானந்தர் தன் கட்டிலில் வீழ்த்தியிருக்கிறார் என்பதும், அவரது ஆன்மீக ஆராய்ச்சியே இது சம்பந்தப்பட்டதுதான் என்பதையும் தெரிந்துகொண்ட அந்தப் பெண்மணி, அரசனை நம்பி புருசனைக் கைவிடக்கூடாது என்ற ஞானோதயம் பெற்று, டைவர்ஸ் நடவடிக்கையை கைவிட்டார். இப்போது கணவன்-மனைவி இருவரும் சேர்ந்திருக்கிறார்கள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் இங்கே நடந்திருக் கின்றன. உருக்காலை நகரத்தில், ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரியின் மகளும் நித்யானந்தரால் வீழ்த்தப்பட்ட வர்தான்.


இத்தனைப் பெண்களை, ஒருவ ருக்குத் தெரியாமல் ஒருவரை வீழ்த்தும் நித்யானந்தரின் டெக்னிக் ரொம்பவும் வித்தியாசமானது. எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் படிப்படியாக அவருடைய அணுகுமுறை இருக்கும். ஒவ்வொரு நிலையிலும், தன் எண்ணங்களுக்கேற்ப அந்தப் பெண் நடந்துகொள்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்வார். அடுத் தடுத்த நிலைகளில் அணுகுமுறையில் நெருக்கம் கூடிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நிலையையும் விளக்கினால்தான் உங்களுக்கு அது புரியும்'' என்ற லெனின் அது பற்றி விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.


1. கல்பதரு


இது முழு நாள் புரோகிராம். நித்யானந்தரின் சீடர்களான ஞானானந்தா, பிரணானந்தா இருவரும் இந்த வகுப்பை எடுப்பார்கள். இதில் 3 தியானங்கள் சொல்லித்தரப்படும். போதனைகளிலேயே பில்டப்பை ஆரம்பித்துவிடுவார்கள். நித்யானந்தரைப் பற்றிச் சொல்லும்போதெல் லாம் "இவர்தான் சாமி.. இவர்தான் கடவுளின் அவதாரம். அவர் உங்களை ஒரு விநாடி பார்த்தாலே அனுக்ரகம் கிடைத்து விடும். அவரிடம் உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் சொல்லலாம். உடனே நிவர்த்தி செய்துவிடுவார்' என்றெல்லாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை பில்டப் நடக்கும்.


இந்த நிகழ்ச்சிக்கு பெரிய புள்ளிகள் பலர் வருவார்கள். அவர்களிடம் பல எதிர்பார்ப்புகள் இருக்கும். குழந்தை வரம் வேண்டுமா, தொழில் விருத்தி அடைய வேண்டுமா எதுவாக இருந்தாலும் அதற்கு சுவாமிஜி வழி சொல்லுவார். இந்த கல்பதரு நிகழ்ச்சியின் இறுதியில் அவர் வருவார். அவர் பார்வையே உங்க ளுக்கு அருள் தரும் என்றெல்லாம் பில்டப் தொடரும். மாலை 5 மணி வாக்கில், "அருணாசலம்' படத்தின் பாட்டு மெட்டில், நித்யானந்தரைப் பாராட்டும் வரிகள் கொண்ட ரீ-மிக்ஸ் பாட்டு கேட்கும். அப்போதுதான் நித்யானந்தர் என்ட்ரி ஆவார். கையை உயர்த்தி காட்டியபடி, இடுப்பை வளைத்து நடந்தபடியே கூட்டத் துக்குள் வருவார்.


அவர் வரும்போது, பக்தர்கள் எல்லோரும் தங்கள் கண்களைக் கட்டிக்கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கருப்புத்துணியும் கொடுக்கப்படும். எல்லோரும் கண்களைக் கட்டிய நிலையில் இருப்பார்கள். சீடர்கள் சொல்லும்வரை கண்கள் கட்டப்பட்டிருக்கும். அவிழ்க்கலாம் என்ற உத்தரவு வந்ததும், பக்தர்கள் கண் திறந்து பார்த்தால், அவர்களுக்கு முன்பாக சினிமா செட் போல போடப்பட்டிருக்கும் செட்டப்பில் 24 கேரட் தங்கசிம்மாசனத்தில் சாமியார்- சாமியாரினிகள் சூழ உட்கார்ந்திருப்பார் நித்யானந்தர்.


அவரது காலுக்குப் பக்கத்தில் 2 பேர், பின்னால் 2 பேர், பக்கவாட்டில் 2 பேர் என சாமியாரினிகள் இருப்பார்கள். பக்தர்கள் வரிசையாக சென்று தங்களது குறைகளைச் சொல்லலாம் என்று அறிவிக்கப்படும். குழந்தைவரம் கேட்கும் தம்பதியர் என்றால், ஆப்பிள் பழத்தைக் கொடுத்துவிட்டு, நீங்க 2 பேரும் இதைச் சாப்பிடணும் என்பார். இன்னொரு ஆப்பிள் கொடுங்க சாமி என்று யாராவது கேட்டால், ஏன்... உங்களுக்கு ஒரே நேரத்தில் 2 குழந்தை வேணுமா? என்று கமெண்ட் அடித்துவிட்டு, ஒரு பழமே போதும். நல்லபடியா குழந்தை பிறக்கும். சுவாமி எது சொன்னாலும் நடக்கும் என தன்னைப் பற்றி அவரே பில்டப் கொடுப்பார். இந்தப் பழம்தான் பெண்களை வசியப்படுத்துவதற்கான அவரது முதல் படி.


2. ஆனந்தஸ்பூரணதியான முகாம் (ASP)


வண்டியை சர்வீஸ் செய்வதுபோல உடலையும் மனதையும் சர்வீஸ் செய்யும் தியானம் இது. 2 நாள் நடக்கும். உடலில் உள்ள 7 சக்கரங்களையும் இது சுத்தப் படுத்தும். இந்த புரோகிராமிலும் நித்யானந் தரின் இமேஜை பில்டப் செய்யும் போதனை களுக்குப் பஞ்சமிருக்காது.


2004-ம் ஆண்டுவரை நித்யானந்தரே இந்த தியான வகுப்பை எடுத்து வந்தார். அதன்பிறகு, அவரது சீடர் ஞானானந்தா எடுத்து வருகிறார். இவர், ட்ரெய்னிங் கொடுக்கும் பெண்களை கண்ட்ரோலில் வைத்திருப்பார். எல்லோரும் இவரைப் பார்த்தால் பயப்படவேண்டும். ஞானானந்தாவை மகா ஆச்சார்யானுதான் கூப்பிடுவோம். இவருக்கு ஒரு பிரம்மச்சாரினி அசிஸ்டெண்ட் உண்டு. பயிற்சி நேரம் போக, மற்ற நேரங்களில் இந்த அசிஸ்டெண்ட்டிடம் போனில் கடலை போட்டுக் கொண்டிருப்பார்.


நித்யானந்தர் மட்டுமின்றி, அவரோட விஷயங்களைத் தெரிந்த அவரது சிஷ்யர் களும் இதே வேலையாகத்தான் ஆசிரமத் தில் இருந்தார்கள் என்பதை ஞானானந்தா விஷயம் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.""இதெல்லாம் தொடக்கக் கட்ட பயிற்சி முகாம்கள்தான்.


இதிலிருந்து மெல்ல மெல்ல தன் ஆசைக் கான பயிற்சிகளை தீவிரமாக கற்றுத்தந்து, பெண்களை மெஸ் மரிசம் செய்துவிடுவார்'' என்ற லெனின், நித்யானந்தா தியானபீடம் கற்றுத்தரும் மற்ற பயிற்சிகள் பற்றியும் சொல்வதற்குத் தயாராகி விட்டார்.


No comments:

Post a Comment