Saturday, March 27, 2010

மரண விளையாட்டு!


shockan.blogspot.com
ஆன்மீகம், மெடிடேஷன், ஹீலிங் என்று பல அம்சங்கள் இருந்தாலும், நித்யானந்தரின் தியானபீடத்தில் நடை பெறும் ஒவ்வொரு பயிற்சியிலும் பெண்களை வசியம் செய்வதற்கான டெக்னிக்குகளும் இருக்கும் என்கிறார் நம்மிடம் ஆசிரம உண்மைகளை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தும் லெனின் (எ) ஸ்ரீநித்ய தர்மானந்தா.
பல்வேறு பயிற்சிகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். இரண்டு பயிற்சிகள் பற்றி விளக்கினேன். அடுத்த பயிற்சியையும் சொல்கிறேன்.

3. நித்யானந்தாஸ்பூரணா புரோகிராம் NSP

சென்னை, சேலம் ஆகிய இடங்களில் இந்த புரோகிராம் நடக்கும். இது 4 நாள் புரோகிராம். இதை நித்யானந்தரே எடுப்பார். இந்த புரோகிராமில் கலந்து கொள்பவர்கள், அவர்கள் சாகும்போது ஞானமடைவார்கள் என்று நித்யானந்தாவின் சீடர்கள் சொல்வார்கள். இந்த NSP புரோகிராமில் கலந்துகொண்ட சிலர், ""செத்துப்போன பிறகு ஞானமடைந்தோமா, இல்லையான்னு எப்படி தெரியும்? சாமி தப்பிக்குது பாரு. கதை விடுது பாரு'' என்று கமெண்ட் அடித்தது என் காதில் விழுந்திருக்கிறது. அப்போதெல்லாம் நான் நித்யானந்தரை முழுமையாக நம்பியிருந்தேன்.
அதனால், அவர் சொல்வதையெல்லாம் ரொம்ப வும் கவனமாகக் கேட்பேன்.
ஆன்மீகப் பயிற்சி பெற்றவர்கள் சாகும் போது என்னவெல்லாம் நிகழும் என்பது பற்றி வகுப்பெடுப்பார் நித்யானந்தர். ஒரு சாம்பிள் மரண நிகழ்ச்சியையும் நடத்திக் காட்டுவார்.இன்னும் ஒரு வருடத்தில் நீங்கள் மரண மடைவீர்கள்- என்று பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களிடம் சொல்லி, கவுண்ட் டவுனை ஸ்டார்ட் செய்வார்.
"இன்னும் 9 மாதம்தான் இருக்கு. உங்க பொண்டாட்டி, புள்ளைகளுக்கு என்ன செய்யப் போறீங்க? இன்னும் 4 மாதம்தான் இருக்கு. உங்க குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என்ன செய்யப் போறீங்க?' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே வருவார். கடைசியில், மரண நாள் வரும். "நீங்கள் எல்லோரும் மரணமடைஞ் சிட்டீங்க' என்று சொல்வார். எல்லோரும் மரணமடைந்ததுபோல படுத்துவிடவேண்டும்.
"உங்கள் உயிர் உங்களைவிட்டுப் பிரிந்துவிட்டது. உடல் மட்டும்தான் கிடக்கிறது. இதுதான் மரணம். இப்போது, அசைவற்ற இந்த உடலுக்குள் புதிய உயிர் வந்து புகுந்துகொள்ளப்போகிறது. இதோ வருகிறது.. வருகிறது.. வந்துவிட்டது. உங்கள் உடலுக்குள் புகுந்துவிட்டது. இப்போது நீங்கள் புதுப்பிறவி பெற்றுவிட்டீர்கள்.
புதிய மனிதர்களாக எழுந்திருங்கள்' என்பார். அதுவரை படுத்துக் கிடந்தவர்கள் எழுந்து உட்கார்வார்கள். உண்மையிலேயே புதுப்பிறவி எடுத்துவிட்டதுபோல நினைத்துக்கொள்வார்கள்.
ஆசிரமத்தில் நான் எல்லோரிடமும் நன்றாகப் பழகுவேன். எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். நான் சொல்கிற காரியங்கள் நடப்பதாக அவர்களுக்கு நம்பிக்கை உண்டு. எனக்குள் விசேஷ சக்தி இருப்பதாக நித்யானந்தரே சொல்லியிருக்கிறார். ஏன் அதைச் சொன்னாரென்றால், ஒரு முறை புதுப்பயிற்சியாளர் கள் மட்டும் பங்கேற்ற வகுப்பு ஒன்று நடந்தது. அதில் நானும் இருந்தேன். நித்யானந்தர் அப்போது அமெரிக்காவில் இருந்தார். அந்தப் பயிற்சியில் நித்யா னந்தர் பாணியில் மரண விளையாட்டுதான் நடந்தது.
"நீ சாகப்போறே' என்று பயிற்சியாளர் சொன்ன தும், பயிற்சிக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் மரணம் ஏற்பட்டதுபோல படுத்துவிட்டார்கள். நானும் படுத்தேன். புதுப்பிறவி எடுத்து எழுந்திருக்கச் சொன்னபோது எல்லோரும் எழுந்துவிட்டார்கள்.
நான் மட்டும் அப்படியே கிடக்கிறேன். என் உடல் அசைவற்றுக் கிடப்பதை நான் உணர்கிறேன். பயிற்சி யாளரான பெண் ஒருவர், தர்மா..தர்மா.. என்று என் உடலை அசைத்து அசைத்து அழுகிறார். என் உடல் மீது தண்ணீர் ஊற்றுகிறார்கள். எல்லா வற்றையும் நான் பார்க்க முடிகிறது. ஆனால், என் உடலில் நான் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. பயிற்சி யாளர்கள் கலங்குவது, என்னை எழுப்ப முயற்சிப்பது எல்லாம் அங்குள்ளவர் களால் வீடியோவிலும் பதிவு செய்யப் படுகிறது.

என் உடலைவிட்டுவிட்டு, நான் அங்கிருக்கும் ஒரு ஆலமரத்தடிக்குச் செல்கிறேன். அங்கு ஒரு ஒளி என் மீது பாய்ந்தது போன்ற உணர்வு. அந்த ஒளி அப்படியே என்னை இழுத்துச் செல் கிறது. உடலற்ற நான், சில நொடிகளில் இமயமலையில் உள்ள கைலாஷ் பகுதியில் சஞ்சரிக்கிறேன். அங்கே என் மீது ஒரு புதிய ஒளி படுகிறது. நான் ஞானம் பெற்றதாக உணர்ந்தேன்.

அதே நேரத்தில், ஆசிரமத்தில் இருந்தவர்கள் நான் இறந்துவிட்டதாக அமெரிக்காவில் உள்ள நித்யானந்தருக்கு போன் செய்கிறார்கள். அவரோ செல்போனை என் காதில் வைக்கச் சொல்கிறார். அசை வற்று கிடக்கும் என் உடலைச் சுற்றி நிற்பவர்கள் அந்த செல்போனை என் காதில் வைக்கிறார்கள்.

""தர்மா... தர்மா... எழுந்திருடா தர்மா. நீ இந்த உடலைப் பிடிக்காமல் வெளியேறிட்டே. நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்குது. அதனால், திரும்ப வும் உடலுக்குள் வா..'' என்று அழைக் கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த நான் திரும்பவும் என் உடலுக்குள் நுழை கிறேன். அசைவற்று கிடந்த உடல் எழு கிறது. தர்மா புதுப்பிறவி எடுத்துட்டான் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். பொதுவாக, இப்படி உடலைப் பிடிக் காமல் உயிரை வெளியேற்றிக் கொள் பவர்கள் ஞானிகள் வாழும் இமயமலை போன்ற பகுதிகளுக்குச் சென்றுவிடு வார்கள். திரும்ப மாட்டார்கள். நான் திரும்பி வந்ததற்கு, தான்தான் காரணம் என்று நித்யானந்தர் க்ளெய்ம் பண்ணிக் கொண்டார். நானே உணர்ந்துதான் உட லுக்குத் திரும்பினேன் என்பது எனக்குத் தான் தெரியும்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஒரு வாரம், கடுமையான உடல் வலி. ஆனால், அன்று நடந்தது என் ஆன் மீக வாழ்வில் மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. இதனை சாதாரண மனநிலை யில் உணரமுடியாது. ஆன் மீகப் பயிற்சி பெற்றவர்கள் தான் உணர்வார்கள்.

எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு, தர்மாவுக்கு ஒரு சக்தி இருக்குது என்று நித்யானந்தர் சொன்னார். அந்த சக்திதான், நித்யானந்தரின் அக்கிரமங்களை மக்கள் முன் கொண்டு வந்ததோ? என்று சொன்ன லெனின், ஆசிரமத்து பயிற்சிகள் பற்றித் தொடர்ந் தார்.

NSP புரோகிராம் பகலில் நடந்து முடிந்ததும் இரவில் டான்ஸ் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். கிருஷ்ணன் போல, சிவன் போல தன்னை காட்டிக்கொண்டு நித்யானந்தர் டான்ஸ் ஆடுவார். கிருஷ்ணன் என்றால் கோபியர் இல்லாமலா? சிவன் என்றால் சக்தி இல்லாமலா? கோபியராக, சக்தியாக எந்தெந்தப் பெண்கள் தன்னுடன் ஆடவேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவார். கோபிகாம்மா மூலமாகவும் மற்ற சீடர்கள் மூலமாகவும் அந்தப் பெண்களை மேடையேற்றி நித்யானந்தருடன் ஆடச்செய்வார்கள். ஆட்டம் என்பது கட்டிலுக்கு இழுத்துச் செல்லும் டெக்னிக்கின் முக்கிய கட்டங்களில் ஒன்று என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

4. BSP பயிற்சி

இந்த வகுப்பை ஞானானந்தர்தான் எடுப்பார். முழுக்க முழுக்க நித்யானந்தரின் பெருமைகளைச் சொல்வதற்காகவே இந்த வகுப்பு நடைபெறும். நித்யானந்தர்தான் கடவுளின் அவதாரம். கடவுளை 6 உருவத்தில் பார்க்கவேண்டும். அர்ஜுனன், கிருஷ்ணனை நண்பனாகப் பார்த்தான். அதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகக் கடவுளைப் பார்க்கவேண்டும். நண்பனாக, தாயாக, தந்தையாக, குருவாக, காதலனாக, எஜமானனாக பல வடிவங்களில் நமது கடவுள் நித்யானந்தரைப் பார்க்க வேண்டும் என்று ஞானானந்தா சொல்வார்.

காதலனாகப் பார்க்கவேண்டும் என்ற வார்த்தையைச் சொல்லும்போதே ஞானானந்தா வின் பார்வை, பயிற்சிக்கு வந்த பெண்கள் பக்கம் இருக்கும். அப்போதே ப்ரெய்ன் வாஷ் தொடங்கிவிடும். பயிற்சி வகுப்பு முடியும்போது மெஜாரிட்டி பேர், நித்யானந்தாவை கடவுளாகவே பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இந்தப் பயிற்சிக்கான ஒவ்வொரு ஸ்டெப்பையும் ரொம்ப கவனமாக ஞானானந்தாவிடம் சொல்லிக் கொடுத்திருப்பார் நித்யானந்தர். அதனை தன் பங்குக்கு மெருகேற்றி, பயிற்சி கொடுத்து, பெண்களை நித்யானந்தர் நோக்கித் திருப்புவார் ஞானானந்தா. நித்யானந்தரைக் கெடுத்ததில் முக்கிய பங்கு ஞானானந்தாவுக்கு இருக்கிறது.

இந்த BSP பயிற்சியின் மூன்றாவது நாள் சக்தி தரிசனம் என்ற பெயரில் ஆஜராவார் நித்யானந்தர், என்ற லெனின், அவர் எப்படிப் பட்ட தரிசனம் கொடுப்பார் என்பதையும் சொல்கிறேன் என்றார். எதிர்பார்ப்பு கூடியது.


லாக்கர் ரகசியம்!

பயிற்சிக்கும் ஆசிர்வாதம் வாங்கவும் வரும் பெண்களை இறுக்கி கட்டிப்பிடிப்பது, தான் விரும்பும் பெண்களுடன் நெருக்கமாக நடனமாடுவது இதையெல்லாம் நித்யானந்தர் சர்வசாதாரணமாக செய்தாலும், அது சம்பந்த மான படங்களை அத்தனை சாதாரணமாக எடுத்துவிடமுடியாதபடி பார்த்துக் கொள்வார். பக்தர்களின் செல்போன் உள்பட அனைத்துவிதமான கேமராக்களும் வகுப்பிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. நித்யானந்தரின் பர்சனல் போட்டோகிராபர் மட்டும்தான் படங்களை எடுப்பார். இந்த போட்டோக்களை பத்திரமாக வைப்பதற்காக, 1 கோடி ரூபாய் செலவில் ஒரு கட்டடத்தை ஆசிர மத்தில் கட்டியிருக்கிறார். 5 அடுக்கு பாதுகாப்பு கொண்ட இந்த கட்டடத்தில், பேங்க் லாக்கர் போன்ற பாதுகாப்பு வசதியுடன் படங்கள் பத்தி ரப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த லாக்கருக்கு பாஸ்வேர்டு உண்டு. 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா இயங்கிக்கொண்டே இருக்கும். கோபிகா, ஆத்மானந்தா இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்கள் கைரேகையைப் பதிவு செய்தால்தான், நித்யானந்தரின் உண்மை சொரூபத்தைக் காட்டும் அத்தனை படங்களையும் பாதுகாத்து வைத்திருக்கும் அந்த லாக்கர் திறக்கும். இனி, போலீஸ் நினைத்தால் அதனைத் திறந்து, நித்யானந்தரை அம்பலப்படுத்த முடியும்.

1 comment:

  1. More Trouble : American Files Complaints against Nithyananda

    Bangalore, March 29 (DHNS) : Almost a month after a former Nithyananda disciple in Tamil Nadu blew the whistle on him, a former American devotee has now filed criminal complaints in the US state of California against the self-styled godman.

    The complainant, who has identified himself as Douglas McKellor, formerly known as Swami Nithya Praba, is a resident of San Jose, California. In his complaint to California state Attorney General Jerry Brown on March 25, McKellor has brought serious charges of sex, fraud, financial irregularities and physical abuse of devotees in the US against Nithyananda.

    Like Lenin Karuppan, who exposed the sex videos featuring Nithyananda and a Tamil actress and also accused him of "raping" or having sex with other women in his Bidadi ashram, McKellor has claimed that at least on one occasion he "was placed as a guard in front of the door to make sure that no one, repeat no one, disturbed him and his lady guest".

    While McKellor has not disclosed the date when he was asked to guard Nithyananda's room, he does mention that it took place when the godman headed a two-day workshop in a Sanatan Dharma temple in Norwalk, California. McKellor, who is a Hindu, alleges that Nithyananda "ate his meals or rested alone with young attractive (women) followers" in his private quarters at the cult organisation's Norwalk and Montclair ashrams.

    On the lines of Karuppan's allegations, the American national, who claims to have begun exposing Nithyananda's "organised fraud" in his blogsite, alleges in his complaint to the California attorney general that the godman "abused" Hindu religious tenets, by which he would issue "fake enlightenment certificates", took away people's life savings, including $400,000 of his bank deposit and physically abused ashramites.

    Describing how he was "enlightened", McKellor says: "While living in the Los Angeles ashram in June 2007, I was one in the first batch of Nithyananda's instant enlightenment. During the week-long program, I felt unnaturally dizzy and light. It was as if some strange drug was causing me to lose my senses."

    He goes on to say that during the workshop Nithyananda performed fire rituals in which all initiates "had to cut off a strand of our own hair and this hair was added to the fire." Besides, he claims, "Nithyananda also added something that looked like marijuana seeds into the fire."

    ReplyDelete