Wednesday, March 17, 2010

"யாரும் யாரோடவும்' நித்யானந்தா அருளுரை! பிரபல நடிகரின் நேரடி அனுபவம்!

நித்யானந்தா நடத்தும் தியான முகாம்களில் பங்கேற்ற பிரபல நடிகர் விக்னேஷ் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்மிடம் சொன்னார்.

""நித்யானந்தாவை சந்திச்சிட்டு வந்த பிறகு... புது எனர்ஜி எனக்கு கிடைச்சிருக்கு. அது என்னா எனர்ஜிங்கிறதை கடைசியில சொல்றேன். பி.எஸ்.பி. எனப்படும் பக்தி ஸ்புரண தியான முகாம், என்.எஸ்.பி. எனப்படும் நித்யானந்த ஸ்புரண தியான முகாம்... இப்படி ரெண்டு வகை முகாம்களை நித்யானந்தா நடத்துறாராம். என்னோட "ஈசா' படம் வெளிவந்து சரியா போகாத மன வருத்தத்தில் இருந் தப்போ.... நடிகையும், இப்போ சாமியாரினியாவும் இருக்க ராக சுதா எனக்கு போன் பண் ணினார். ‘"தாம்பரத்தில் நித்யானந்தரோட என்.எஸ்.பி. முகாம் நடக்குது. நாலு நாள் பயிற்சி முகாம். இதில் சினிமாக்காரங்க நிறைய பேர் கலந்துக்கிறாங்க. நீங்களும் கலந்துக் கிட்டா உங்க வாழ்க்கையில திருப்புமுனை ஏற்படும்'னு சொன்னார். "எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. ஆனா சாமியாரை சந்திக்கிற வழக்கம் இல்லை'னு சொன்னேன். ரொம்ப கம்ப்பல் பண்ணவும்.... ராகசுதா எனக்கு நல்ல பரிச்சயம் என்பதால் அவருக்காக போனேன். நாலாயிரம் ரூபாய் என்ட்ரன்ஸ் பீஸ் கட்டிட்டு போனேன். அங்கே சமூகத்தில் பெரியபெரிய வி.ஐ.பி. வீட்டு பெண்கள் வந்திருந்தாங்க. சினிமா உலகத்திலிருந்து கோவை சரளா, சுவாதி, அஞ்சு, ரோஹிணி, ரஞ்சிதா, ரேவதி, குட்டிபத்மினி, எஸ்.ஏ. சந்திரசேகரன், அவரோட மனைவி ஷோபா, யுவராணி, ஷ்யாம் கணேஷ், வினு சக்கர வர்த்தி ஆகியோரும் வந்திருந்தாங்க.

பயிற்சி தொடங்கியது.

"இப்போது நீங்கள் மரணத்தை தழுவப் போகிறீர்கள். இதோ... உங்கள் மூளை செயல் படவில்லை, உங்கள் கால் முட்டிகள் இயங்க வில்லை, உங்கள் இதயம் இதோ... கடைசி மூச்சை விடப் போகிறது. உங்கள் கண்கள் பார்வையை இழந்துவிட்டது.... உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் செயல் இழந்து கொண்டே வருகிறது. இதோ... இன்னும் சில நொடிகளில் நீங்கள் மரணத்தை எட்டப் போகிறீர்கள். ஆமாம்... இப்போது நீங்கள் இறந்தே போய்விட்டீர்கள்...' என பிரசங்கத்தை ஆரம்பித்த நித்யானந்தா... சிறிது நேரம் மௌனமாக இருக்கிறார். நாங்களும் அமைதியாக இருக்கிறோம். திரும்பவும் பேச ஆரம்பிக்கிறார் நித்யானந்தா.

"இதோ... நீங்கள் புதிதாக பிறந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் புதிதாக இருக்கிறது. கள்ளம் கபடமற்ற குழந்தைகளாக இருக்கிறீர்கள். உங்களின் எல்லா பிரச்சினைகளும் உங்களை விட்டு போய்விட்டது' என சாமி சொல்கிறார். அதன் பிறகு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை சாமியை சந்தித்த அனுபவத்தையும் அவரவர் பிரச்சினையையும் எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். அதில் சாமியை புகழ்ந்து எழுதினால் அதை மேடையில் சொல்கிறார் சாமி. அவர் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுப்பினால் அதை வாசிப்பதில்லை. ‘"நீங்க ஒரு சந்நியாசி. ஆனா சுகபோகமா இருக்கீங்களே? உங்களை கடவுள்னு சொல்றீங்க. கடவுளா இருந்தா எங்க கஷ்டத்தை நீங்களே புரிஞ்சிக்க முடியுமே? ஏன் எங்களையே எங்க பிரச்சினை என்னனு எழுதச் சொல்றீங்க?'னு நான் எழுதிக் கொடுத்தேன். அதை சாமி படிக்கவில்லை. ராகசுதாவிடம் கொடுத்தார். அதை படிச்சுப்பாத்த ராகசுதா "சாமியைப் பத்தி இப்படி சந்தேகமெல்லாம் எழுப்பக்கூடாது'னு என்கிட்ட சொன்னார்.


மதிய இடைவேளை விட்டதும் "என்னய்யா இந்த சாமியாரு... செத்துப் போயிட்ட, உடல் உறுப்பெல்லாம் செயல் இழக்குதுனு சொல்றாரு. நானே ஹார்ட் வீக்கா இருக்கேன். இந்த ஆள் பய முறுத்துறானே?' எனச் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிப் போய்விட்டார் வினு சக்கரவர்த்தி. அப்போது ஒவ்வொரு நடிகையாக சாமியை தனியறையில் சந்திச்சிட்டு வந்தாங்க. நானும் சாமியை பாக்கலாம்னு போனேன். அறை வாசலில் இருந்த உதவியாளர் ‘"சாமி ரொம்ப பிஸி'னு சொன்னார். "என் சின்ன மாமியார் உடம்பு முடியாம இருக்காங்க. நிறைய்ய ட்ரீட்மென்ட் எடுத்தும் சரியாகல. அது சம்பந்தமா சாமிகிட்ட பேசணும்'னு சொன்னேன். ‘ரெண்டு லட்ச ரூபா செக் குடுங்க. இப்ப பணம் இல்லேன்னாலும் "ரெண்டு மாசம் கழிச்சுக்கூட செக்கை பாஸ்பண்ணுங்க. உடனே செக் போட்டு கொடுங்க'னு சொன்னார். அங்கே வந்திருந்த சினிமா நட்சத்திரங்கள் பலரும் செக் கொடுத்ததை நான் பார்த்தேன்னாலும் கூட எனக்கு செக் கொடுக்க விருப்பமில்ல. பக்தியை இந்த அளவுக்கு பிரிலியண்ட்டா பண்ற பக்கா பிசினஸ்மேனாகத்தான் நித்யானந் தத்தைப் பார்த்தேன்.


சாப்பாடு வேளை முடிஞ்ச பிறகு.... திரும்பவும் பயிற்சி ஆரம்பமாச்சு. அப்போ ஒரு அழகான குடும்பத்துப் பெண் எழுந்து ‘"சாமி! என் புருஷன் முகாமுக்கு வர்றதுக்கு அனுமதிக்கல. ‘உன்னை டைவர்ஸ் பண்ணீடுவேன்'னு மிரட்டின பின்னாடி போக அனுமதிச்சார். உங்கள பாத்தாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு'னு அந்தப் பெண் சொல்ல... சாமி அந்தப் பெண்ணை கட்டி அணைச்சு ஆசீர்வதிச்சார். இதேபோல ஒரு நட்சத்திர தம்பதி வந்தாங்க. அதில் மனைவியை சாமி கட்டிப்பிடிச்சு ஆசீர்வதிக்க... அவங்க சங்கடத்தில் நெளிஞ் சாங்க. உடனே அருகில் இருந்த கணவர்... "சங்கடப்படாத... இந்த சாமியும் ஒரு சீஸஸ் மாதிரி'னு சொன்னார். அந்த தம்பதி ஒரு பெருந்தொகைக்கு செக் போட்டு கொடுத் திட்டுப் போனாங்க.


மறுநாள் பயிற்சியின் போது ‘பிரச்சினைகளை எழுதித்தரச் சொன்னாங்க. நான் என்னோட சின்ன மாமியாருக்கு 45 வயது ஆவதையும், எந்த சிகிச்சையும் பலன் அளிக்காத தையும் எழுதிக் கொடுத்தேன். அதை பார்த்த சாமி ‘"இன்னும் முப்பது வருஷத் துக்கு அவங்க சுகமா வாழ்வாங்க. என்னோட ஆசீர்வாதம் அவங்களை காப்பாத்தும்'னு சொன்னார்.


கடைசிநாள் பயிற்சியின் போது எல்லாருக்கும் ஒரு துண்டுத்துணி குடுத்து கண்ணை கட்டிக்கச் சொன் னாங்க. அதன்படி எல்லாரும் கட்டினோம். அரை மணிநேரம் கழிச்சு கண்கட்டை அவிழ்க்கச் சொன்னாங்க. அவிழ்த்தால்... பிரமாண்டமான அலங் கார மேடை. அதில் மிகப்பெரிய சிம்மா சனம். அதில் தலைமுதல், பாதம் வரை தங்கநகைகளை அணிந்து கொண்டு ‘"தகதகவென' மின்னுகிறார் சாமி. பக்தர்கள் சிலிர்த்து ஆர்ப்பரிக்கிறார்கள்.


சாமி அருளாசி வழங்குகிறார்.... "நீங்கள் உங்கள் கணவனை மறந்துவிடுங்கள். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் பயப்படத் தேவையில்லை. கட்டுப்படத் தேவையில்லை. ஆண்களே.. நீங்கள் உங்கள் மனைவியை மறந்து விடுங்கள். யாரும் யாரோடும் இருக்கலாம்' என சாமியார் சொல்லச் சொல்ல... எனக்கு பயங்கர அதிர்ச்சி. "சாமியார் பேசுற பேச்சா இது'னு அதிர்ச்சியா இருந்திச்சு. அந்த முகாமில் கலந்து கொண்ட ஒரு எழுத்தாளர்... அவர் பேரு தெரியல... அவர் சாமிகிட்ட "யாரும் யாரோடயும் இருக்கலாம்னா... அந்த உறவுல பிறக்கிற குழந்தைக்கு யாரு அப்பாவாக இருக்கமுடியும்?'னு கேட்டார். அதுக்கு அந்த சாமியார் என்ன சொன்னார் தெரியுமா?

"அந்த கவலை உங்களுக்கு எதுக்கு? எந்த குழந்தையும் பூமியில் பிறக்கிற வரைக்கும் தான் பெறுகிறவர்களுக்கு கவலை. பூமிக்கு வந்த பிறகு அது தானாகவே வளரும், ஆளாகும்'னு சொன்னார். அதைவிட கொடுமை என்னன்னா... முகாமின் கடைசி நிகழ்ச்சியான ‘"ஆனந்த தாண்டவம்' நிகழ்ச்சிதான். மெஸ்மரிசம் பண்ணப்பட்ட ஆண்களும், பெண்களும் ‘"யாரும் யாரோடும்' என்கிற சாமி சொன்னபடி ஆபாசமாக நடனமாடு கிறார்கள். இந்த கூத்தின் போது பிரபல சினிமா பாடல்களின் மெட்டில் சாமியாரை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களை போடுகிறார்கள். பக்த கோடிகள் போடும் குத்தாட்டத்தோடு பயிற்சி முகாம் முடிவடைகிறது.

என்னோட சின்ன மாமியாரை மருத்துவமே காப்பாத்த முடியாதபோது.... சாமியாரின் மந்திரம் காப்பாத்தி விடாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் ராகசுதாவின் நட்புக்காக சாமியாரை பார்க்கப் போனேன். ‘"இன்னும் 30 வருஷம் வாழ் வார்' என சாமி ஆசீர்வதித்த என் சின்ன மாமியார், முகாமிலிருந்து நான் திரும்பிய மூணாம் நாளே.... இறந்து போய்விட்டார்.

நித்யானந்தாவை சந்திச்சிட்டு வந்த பிறகு ஒரு புது எனர்ஜி கிடைச்சிருக்குனு சொன்னேனில்லையா... அந்த எனர்ஜி என்னன்னா... ‘"நீ உன்னையும், உன் உழைப்பையும் மட்டுமே நம்பு' என்பதுதான். காஞ்சிபுரம் செக்ஸ் குருக்கள் பத்தி ‘"கௌ ரவர்கள்' படப்பிடிப்பின் போது சத்யராஜ் என்கிட்ட சொன்னார்.... ‘"உண்மையான நாத்திகன் அந்த குருக்கள்தான். சாமிங்கிற ஒண்ணு இல்லேன்னு அவனுக்கு தெரிஞ்சதுனாலதான் கோயில் கருவறையிலேயே அஜால்குஜால் பண்ணீருக்கான்' என்றார். நித்யானந்தத்தின் செயல்களும் அப்படித்தான் இருக்கு. ஆனா சாமியார்களை அங்கீகரிக்கிற இந்த மக்கள் மேலதான் முதல் தவறு. போலிச் சாமியார்களை நம்ப வேண்டாம் என்கிற எண்ணத்தில்தான் என்னோட இந்த "நித்யானந்த அனுபவத்தை' உங்ககிட்ட சொல்றேன்!'' என விளக்கி முடித்தார் விக்னேஷ்.

No comments:

Post a Comment