Sunday, March 21, 2010

டிஸ்கோ கிளப்பில் நிர்வாண பெண்களுடன் நித்யானந்தா!


""ஆன்மீக ஆராய்ச்சியை ரஞ்சிதாவுடன் மட்டும் தான் நித்யானந்தர் நடத்தினாரான்னு நிறைய பேர் என்கிட்டே கேட்கிறாங்க என்று உரையாடலைத் தொடர்ந்த சாமியார் ஸ்ரீநித்ய தர்மானந்தா என்கிற லெனின், மற்ற பெண்களிடமும் அவர் இதேபோன்ற ஆராய்ச்சிகளை நடத்திப் பார்த்திருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.

மற்ற பெண்கள் என்றால்?

""ஆசிரமத்தில் உள்ள ரொம்பவும் அழகான சாமியாரினி கள், ஆசிரமத்திற்கு பக்தர்களாக வந்து செல்லும் படித்த அழகான இளம் பெண்கள், பிரபலமானவர்களின் வீட்டுப் பெண்கள் இப்படிப் பலர்'' என்ற லெனினிடம், "இதெல்லாம் எப்படி நடக்கும்' என அதிர்ச்சி விலகாமல் கேட்டோம். அவர் விவரிக்கத் தொடங்கினார்.

""சென்னை, சேலம் என்று பல இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கும். அதில் பங்கேற்கும் பெண்களில் அழகாக இருப்பவர்களை மனதில் தேர்வு செய்து, அவர்கள் தனக்குத் தேவை என்று நித்யானந்தர் முடிவு செய்துவிட்டால், அந்த டார்கெட்டை அடைய 6 மாத காலம்கூட பொறுமையாக காய் நகர்த்துவார். எந்தப் பெண்களை குறிவைக் கிறாரோ அவர்களுக்குப் பயிற்சியின் போது சிறப்பு கவனிப்பு இருக்கும். அவர்களிடம் கேள்வி கேட்பது, பதில் பெறுவது என்று முக்கியத்துவம் கொடுப்பது போல நடந்து கொள்வார். பல லட்சம் பக்தர்களும் கடவுள் என்று கொண்டாடும் நித்யானந்தர், தங்கள் மீது தனி கவனம் செலுத்துவதைக் கண்டு அந்த இளம்பெண்கள் நெகிழ்வார்கள். அதை அவர் பயன்படுத்த ஆரம்பிப்பார்.

தன் அறைக்கு தண்ணீர் கொண்டு வரச் சொல்வது, அறையை சுத்தம் செய்யச் சொல்வது என்றுதான் பணிவிடைகள் தொடங்கும். இளம்பெண்களும் பக்தி யுடன் அதைச் செய்வார்கள். கொஞ்ச நாட்களுக்கு இது தொடரும். அதன் பிறகு, "அய்யாவுக்கு கால் அமுக்கு' என்பார் நித்யானந்தர். அதாவது, அவர் இவர் களுக்கு அய்யாவாம். கால் அமுக்கிவிடும் பெண்களை மெல்ல மெல்ல ரெடி பண்ணுவார்.

தமிழகத்தில் பயிற்சி வகுப்புகளுக்காக டூர் போகும் போது நான்தான் வண்டி ஓட்டிக் கிட்டுப்போவேன். நித்யானந்தரும் அவரோட செகரட்டரி ஸ்ரீசதானந்தா வும் காரில் வருவார்கள். எந்த ஊருக்குச் சென்றாலும் எங்களுடன் 5, 6 கார்கள் வரும். இந்த கான்வாயில் ஒரு பைலட் காரும் உண்டு. அந்த காரில் தான் பர்சனல் செகரட்டரி கோபிகா அம்மா இருப்பார். கூடவே நித்யானந்தருக்காக சமையல் செய்யும் பெண்களும் இருப்பார்கள். அவர்களோடு, நித்யானந்தர் டிக் செய்த பெண்களையும் கோபிகாம்மா அழைத்து வந்திருப்பார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நித்யானந்தரின் காரில் எந்தப் பெண்களும் இல்லை என்பதுபோலத் தெரியும். ஆனால் கான்வாயில் பெண்கள் இருப்பார்கள். நித்யானந்த ருடன் சுமார் 1 லட்சம் கிலோமீட்டருக்கு காரில் சுற்றியிருப்பேன். எனக்கே, இந்தப் பெண்கள் விவரம் ரொம்ப லேட்டாகத்தான் தெரியும்.

பயிற்சி முடிந்த பின் இரவில், நித்யானந்தர் தங்கியிருக்கும் அறையில் அந்த இளம்பெண்களைத்தான் கால் அமுக்கிவிட அனுப்புவார் கோபிகாம்மா. ஒரு பெண் ணுடனான நெருக்கம், இன்னொரு பெண்ணுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நித்யானந்தருக்கு ஏற்றார்போல, இன்று ஒரு பெண்ணை கால் அமுக்கிவிட அனுப்பும் கோபிகாம்மா, நாளை இன்னொரு பெண்ணை அனுப்பி வைப்பார். பயிற்சி நடந்துகொண்டிருக்கும் பகல் பொழுதுகளிலும்கூட, நித்யானந்தர் மட்டும் பிரேக் எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்வார். அந்த நேரத்திலும் அவரது அறையில் கால் அமுக்கல்கள் தொடரும்.எனக்கு சந்தேகம் ஏற்பட்ட கடந்த நவம்பர் மாதத்தில், இதுபற்றி விசாரித்த போதுதான், நித்யானந்தரின் ஆன்மீக ஆராய்ச்சியும் அதில் இந்த பெண்களெல் லாம் சிக்கியிருப்பதும் தெரியவந்தது.

வெளியூர் பயணங்களில் இதைவிட மோசமான அசிங்கங்களும் ஆராய்ச்சி களும் நடந்துள்ளன. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். ஒரு வீட்டில் நித்யானந்தர் தங்கியிருக்க, அந்த வீட்டு பெண்மணியிடம் அவர் கணவர், "கடவுளோடு நீ இரு' என்று சொல்லிவிட்டு, வெளியில் போய் நின்றுகொண்ட கொடுமை யும்கூட நடந்திருக்கிறது. ஆசிரமத்தில் சந்நியாசிகளையும், வெளியூர்களில் தங்கும் இடத்தில் உள்ள குடும்பப் பெண்களையும் இந்தப்பாடு படுத்தியவர், நடன நிகழ்ச்சி களிலும் சும்மா இருக்கமாட்டார்.

ஆசிரமத்திலும் பயிற்சி நடக்கும் இடங்களிலும் நடன வகுப்புகள் உண்டு. அதில் தன்கூட ஆடப்போகிறவர்கள் யாரென் பதை முன்கூட்டியே யோசித்து வைத்துவிடு வார் நித்யானந்தர். கோபிகாம்மா மூலமாக குறிப்பும் கொடுத்துவிடுவார். அந்தப் பெண் களை கூட்டி வந்து நித்யானந்தருக்குப் பக்கத் தில் ஆடவைப்பார் கோபிகாம்மா. இசையின் வேகம் கூடும்போது, நடன அசைவுகளும் மாறும். அது கூடிக்கொண்டே போகும் நேரத் தில், தான் விரும்பிய பெண்களைக் கட்டிப் பிடித்து ஆடத்தொடங்குவார் நித்யானந்தா. அவரது 6 மாத ப்ளானின் மிக முக்கிய கட்டம் இது. தன்னுடைய தொடுதல் அவர் களிடம் என்னவித உணர்வை ஏற்படுத்து கிறது என்பதை இந்தக் கட்டத்தில் புரிந்துகொள்வார் நித்யானந்தர்.

நித்யானந்தரால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னிடம் சொன்ன விஷயங்களைக் கேட்டபோது ரொம்பவும் ஆத்திரமாக இருந்தது. தனது இச்சைகளை அந்தப் பெண்களே தீர்த்துவைக்கும்படிதான் செய்வாராம். ஒரு சில பெண்களிடம் மட்டும், நித் யானந்தர் தன் இஷ்டத்திற்கு விளையாடியுள்ளார். சாமியாரான நானும் முழு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன். யோக நிலையை அடைந்தவன். அதனால் ஒரு கட் டத்திற்கு மேல் என்னால் இதுபற்றி சொல்லமுடியவில்லை.

வருடத்தில் 6 மாதம் ஆசிரமத்தில் இருப்பார் நித்யானந்தர். மீதி 6 மாதம் சுற்றிக்கொண்டிருப்பார். அவரது தியானபீடத்தின் மேற்கத்திய தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வகுப்புகள் எடுப்பார். அந்த நகரில் நிறைய டிஸ்கோ கிளப்புகள் உண்டு. அங்கே நிர்வாணமாக பெண்கள் நடனமாடுவார்கள். வாரத்திற்கு 3 நாட்களாவது அந்த கிளப்புகளுக்கு நித்யானந்தர் போவார். அப்போது காவி உடை கட்டியிருக்கமாட்டார். ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் அணிந்துகொண்டு, ஆசிரமத்து சாமியாரினிகளை யும் வகுப்புக்கு வரும் பெண்களிலிருந்து செலக்ட் செய்யப் பட்டவர்களையும் டிஸ்கோவுக்கு கூட்டிக்கொண்டு போவார். அங்கே நிர்வாணமாக ஆடும் பெண்களை இழுத்து, தன் மடியில் உட்கார வைத்துக்கொள்வார். இதை தன்னுடன் வந்த பெண்கள் வெட்கத்துடனும் சந்தேகத்துடனும் பார்த் தால் அவர்களிடம், "இதெல்லாம் ஒரு அனுபவம். இதைப் பார்த்துவிட்டால் உங்களுக்குள் ஏற்படும் ஆசைகள், உணர்வு களெல்லாம் போய்விடும். ஆன்மிகத்தில் இது ஒரு விளை யாட்டான ஆராய்ச்சி' என்று கன்வின்ஸ் செய்துவிடுவார்.

ஒரு முறை டிஸ்கோ கிளப் நிர்வாணப் பெண்களுடன் ஆட்டம் போட்டபடி கிறங்கிப்போன நித்யானந்தர், தான் அழைத்துவந்த பெண்களையும் அதுபோல உடைகளை கழட்டி விட்டு ஆடச்சொன்னார். அவர்கள் கழற்றத் தொடங்கிய போது, டிஸ்கோ கிளப் நிர்வாகத்தினர் குறுக்கிட்டு, ""இங்கே வருபவர்கள் முழுநிர்வாணமாக நடனம் ஆட அனுமதிக்க முடியாது. போங்கள்'' என விரட்டியிருக்கிறார்கள். இந்த விஷயங்களையெல்லாம் அந்தப் பெண்கள் மூலமாகவே கேட்க நேர்ந்தபோது, "இந்த ஆளையா கடவுள் என்று நினைத்தோம்.. த்தூ...' என துப்பத் தோன்றியது. ஒரு முறை ரஞ்சிதாவுடன் அமெரிக்காவுக்குச் சென்று இந்த டிஸ்கோ கிளப்பில் ஆட்டம் போட்டிருக்கிறார் நித்யானந்தர்.

நித்யானந்தரால் எனக்குத் தெரிந்தவரையில் சுமார் 35 பெண்கள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். "எந்தப் பெண்ணும் எதிர்ப்பு காட்டலையா? இது தப்பு என உணரவில்லையா?' என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றும். நியாயமான கேள்விதான். தப்பு என்கிற உணர்வோ, எதிர்ப்பின் அடையாளமோ வெளிப்படாதபடி நித்யானந்தர் மேற்கொள்ளும் பிராசஸ் இருக்கிறதே அது தனிக்கலை. ஆயகலைகள் 64 கலைகளுக்கும் அப்பாற்பட்ட நித்யானந் தரின் கலை பற்றி சொல்லப்போகிறேன்.

No comments:

Post a Comment