Tuesday, June 1, 2010
ப.சிதம்பரம் உண்மை பேசியதால் மம்தா பானர்ஜி கோபம்!
shockan.blogspot.com
ரயில் கவிழ்ப்புக்கு இடதுசாரிகள் காரணம் அல்ல, நக்ஸலைட்டுகளே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உண்மையைச் சொன்னதால் கோபமான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
ஆனால் கூட்டத்தை மம்தா புறக்கணித்தார். அவரது கோபம்.. சமீபத்தில் மேற்கு வங்க மாநிலம் மித்னாபூரில் நடந்த ரயில் கவிழ்ப்பு சம்பவத்துக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தான் காரணம் என்று மறைமுகமாகக் கூறினார் மம்தா.
ஆனால், ரயில் கவிழ்ப்பு சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகளும், அவர்களைச் சார்ந்த பயங்கரவாத அமைப்புகளுமே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். சிதம்பரம் இவ்வாறு கூறிய மறுநாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தை மம்தா புறக்கணித்துள்ளார்.
ஏதாவது காரணத்துக்காக மத்திய அரசுடன் மோதி அடிக்கடி மத்திய அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணித்து வருகிறார் மம்தா. இது குறித்து மம்தாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
எனக்கு முக்கியமான வேலை எனக்கு இருந்ததால் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டம் எவ்வளவு முக்கியம் என்பதன் அடிப்படையிலேயே அதில் பங்கேற்க முடியும். சில நேரங்களில் பங்கேற்க முடியும். முக்கியமான வேலை இருக்கும்போது பங்கேற்க முடியாது. இது சாதாரண விஷயம்தான். நீங்கள் தான் இதை பெரிதுபடுத்துகிறீர்கள்.. போங்கள் இங்கிருந்து என்று கோபமாக விரட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment