Sunday, June 13, 2010
மாணவர்களுக்கு ஷகிலா படம் போட்ட
shockan.blogspot.com
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங் களிலும் இருக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களை அழைத்த தொடக்க கல்வி அலுவலர் மூர்த்தி...
""அனைவருக்கும் கல்வி திட்டத்தின்படி... ஒலி-ஒளி ஊடகம் வழியாக... எளிதாக ஆங்கிலத்தைக் கற்பிக்க... ’ஃபன் வித் இங்கிலீஷ்’ என்ற குறுந்தகடுகள் நமக்கு வந்திருக்கு. இதை உங்க பள்ளிகள்ல டி.வி.யில் போட்டுக்காட்டி ஸ்டூடன்ஸுக்கு பாடம் நடத்துங்க''’என்றபடி அனைவருக்கும் கல்வி மைய வட்டாரப் பொறுப்பாளர் அதிராமசுப்புடன் சேர்ந்து சி.டி.க்களை விநியோகித்தார்.
இந்த சி.டி.யை வாங்கிச் சென்ற கட்டுக்குடிபட்டி தலைமையாசிரியர்... பள்ளியில் உள்ள டி.வி.டி.யில் குறுந்தகடை செருகினார்.
முதலில் அலை அலையாக கோடுகள் திரையில் தோன்றியது. பின்னர் திடீரென நடிகை ஷகிலா தன் மெஹா சைஸ் உடம்பை அரை குறையாய்க் காட்டியபடி ஆட்டம்போட்டார். "என்ன இது' என எல்லோரும் திகைத்தபோது... திடீரென உதட்டைக் கடித்துச் சிணுங்கியபடி... கட்டிலில் ஒரு ஆணுடன் பின்னிப் பிணைய ஆரம்பித்துவிட்டார் ஷகி.
ஆசிரியைகள் பகீராக... ஆசிரியர்கள் சங்கடத்தில் நெளிய... மாணவர்கள் கண்களைப் பொத்திக்கொள்ள... அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்துபோன தலைமையாசிரியர் ஓடிப்போய் டி.வி.யை ஆஃப் செய்தார். எல்லோரும் சைலண்டாக எழுந்து அவரவர் வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தனர்.
இந்தத் தகவல் மாவட்ட அதிகாரி களுக்குப் போக... பதறிப்போன அவர்கள் 12 ஒன்றியங்களிலும் விநியோகிக்கப்பட்ட 1500 சி.டி.க்களையும் திரும்ப வாங்க ஆரம்பித்தனர். சி.டி.யை. திருப்பி ஒப்படைக்க வந்த ஒரு ஆசிரியர் நம்மிடம் “""தனக்குத் தெரிஞ்ச ஒரு மதுரை கம்ப்யூட்டர் சென்டர்ல... இந்த ஃபன் வித் இங்கிலீஷ் பாடத்தை ரைட் பண்ணக் கொடுத்தார் சி.இ.ஓ. நடராஜன். அவங்க பொறுப்பே இல்லாம இப்படி ஷகிலாவின் ஆபாசப் படத்தை ரைட்பண்ணிக் கொடுத்திருக் காங்க. எல்லாப் பள்ளிகள்லயும் ஒரே நாள்ல இதை ஒளிபரப்பி இருந்தா பெரிய விபரீதம் ஆகியிருக்கும். எங்க பிள்ளைகளுக்கு செக்ஸ் பாடமா நடத்த றீங்கன்னு ஜனங்கள் எங்களை உதைச்சிருப்பாங்க''’’ என்றார் சங்கடமாய்.
இருந்தபோதும் இந்தத் தகவல் வெளியே கசிய... எஸ்.புதூரில் தே.மு.தி.க.வினர் ஒ.செ.சூரியன் தலைமையில் சாலை மறியலில் குதித்து கல்வித் துறையினருக்கு ஷாக் கொடுத்தனர். போலீஸ் சமாதானம் பண்ணியது. இது குறித்து சி.இ.ஓ. நடராஜனிடம் நாம் கேட்டபோது “""ஆபாசப் படமெல்லாம் இல்லை. அது சும்மா வதந்தி... படம் தெரியாம எரர்னு வந்ததால்தான் சி.டி.க்களை நாங்க திரும்ப வாங்கறோம்''’என்றார் சமாளிக்கும் விதமாய்.
செக்பண்ணிப் பார்க்காமல் சி.டி.க்களை எப்படி பள்ளிகளுக்குக் கொடுத்தார்கள் அதிகாரி கள்? ஆபாசப் படத்தை காப்பி பண்ணி விநியோ கித்த கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை உண்டா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment