Tuesday, June 15, 2010
தயாரிப்பாளர் தாணு சுவைத்த மிளகா!
shockan.blogspot.com
"நாளை' படத்தில் நட்டு என்ற கேரக்டரில் பேர் வாங்கிய நட்ராஜ் இந்தியில் 15 படங்களுக்கு மேல் காமிராமேனாகப் பணியாற்றியவர். இவர் சொந்தமாக ஸ்ரீநடராஜா ஆர்ட்ஸ் என்ற படக் கம்பெனியைத் தொடங்கி "மிளகா' என்ற படத்தைத் தயாரித்து நடித்தும் இருக்கிறார். இந்தப் படத்தை கதை- திரைக்கதை- வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் ரவிமரியா.
நட்ராஜ் ஜோடியாக பூங்கொடி யும் இன்னொரு நாயகியாக சுஜாவும் நடித்திருக்கிறார்கள். "மாயாண்டி குடும்பத்தார்', "கோரிப்பாளையம்' போல இதிலும் ரவிமரியா உள்பட சிங்கம்புலி, ஜகந்நாத், ஜி.எம். குமார் ஆகிய இயக்குநர்கள் வேஷம் கட்டி இருக்கிறார்கள்.
""மிளகாய்ன்னா காரம்- தனியா சாப்பிட்டா. அதையே இன்னொரு உணவோடு சேர்த்து சாப்பிட்டா சுவை. இந்தப் படத்தோட ஹீரோவும் தனியா இருக்கும்போது காரம். நண்பர்களோட இருக்கும் போது சுவை. மதுரைன்னா ரத்த பூமி என்ற பேர் ஏற்பட் டுப் போச்சு. அது மிகைப் படுத்தல். நட்புக்காக உயிரையே கொடுக்கிற பாசக்கார பயக வாழ்ற ஊர்னு சொல்லி இருக்கேன்'' என்கிறார் இயக்குநர் ரவிமரியா.
""இந்தக் கதையை ரவிமரியா சொன்னதும், என் வழிகாட்டி கலைப் புலி தாணுவிடம் கதை சொல்லச் சொன்னேன். அவரு பாதி கதை யைக் கேட்டதுமே, "தெலுங்குல இந்தப் படத்தை நான் எடுக்கச் சம்மதித்தால் மீதி கதைலியைக் கேக்கறேன்'னு சொல்லி இருக்கார். ரவிமரியா வும் ஒப்புக் கொள்ள, மீதிக் கதை யைக் கேட்டு விட்டு, நல்ல கதைன்னு எனக்கு சொன்னார் கலைப்புலி தாணு. முழு படத்தையும் பாத்துட்டு தமிழ்நாடு முழுக்க அவரே ரிலீஸ் பண்ண முன்வந்து விட்டார்.
""இந்தப் படத்தோட முதல் ஹீரோ காவல் தெய்வம் மதுரை கருப்பண்ணசாமிதான். ரெண்டா வது ஹீரோ கதை. மூணாவதுதான் நான்'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் நட்ராஜ்.
பிரபல ஒளிப்பதிவாளரும் நட்ராஜின் குருவுமான பாலாஜி
வி. ரங்கா இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராகிறார். இசையை சபேஷ்- முரளி சூப்பரா கப் போட்டிருப்பதால், "சரிகமபதநி' நிறுவனம் ஆடியோ ரைட்ஸை வாங்கி இருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸின் ஆஸ்தான எடிட்டரும் "சிவகாசி', "திருப்பாச்சி' படங்களை எடிட் செய்தவருமான ஜெய்சங்கர் எடிட் பண்ணி "மிளகா'வை மேலும் காரமாக்கி இருக்கிறார்.
"மிளகா' மீண்டும் ரவிமரியாவை பிஸியான இயக்குநராக்கும் என்று நம்புகிறார்.
நல்லதே நினைப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment