Tuesday, June 15, 2010

'கசமுச' சங்கதிகள்!




shockan.blogspot.com
கவுண்டமணி சமீபமாகத்தான் ஹார்ட் அட்டாக்கில் இருந்து ஆபரேஷன் செய்து மீண்டு வந்து வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அவரது சகா செந்தில் முதுகுத்தண்டு பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கிறார். சில மாதங்களுக்குமுன் விபத்தொன்றில் சிக்கி முதுகுத்தண்டில் அடிபட்ட செந்தில், இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் நன்றாகவே தேறி வருகிறாராம்.

வில்லன் நடிகர் பொன்னம்பலம் கதை- திரைக்கதை- வசனம் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்து தயாரிக்கும் "இடியுடன் கூடிய மழை' படத்திற்கு முதலில் "தம்பி அர்ஜுனா', "அஜந்தா' படங்களின் நாயகன் ரமணாவைத்தான் ஹீரோவாகப் பேசி இருந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் ரமணா, "அப்பாவைக் கேட்கணும், அம்மாவைப் பார்க்கணும்' என ஜகா வாங்க, பொன்னம்பலமே கதாநாயகன் ஆகும் முடிவிற்கு வந்து களம்
இறங்கி விட்டிருக்கிறார்.

சோழர் காலப் பின்னணியில் "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய செல்வராகவன் அடுத்து இயக்கும் படமும் சரித்திரப் பின்னணி படம்தானாம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் கதை 5-ஆம் நூற்றாண்டில் நடந்தது போன்று சித்தரிக்கப்பட்டு இருக்கிறதாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உருவாகும் இன்னமும் பெயர் சூட்டப்படாத இப்படத்தை டி. ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக "சின்ன தளபதி' எனும் பட்டத்தைத் தாங்கி ஆக்ஷன் படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த பரத், சமீபமாக தன் பெயருக்கு முன் டைட்டில் கார்டில் போடப்படும் அப்பட்டத்தை தூக்கி கடாசிவிடும் முடிவிற்கு வந்து விட்டாராம். காரணம், அப்பட்டம் தன் பெயருக்கு முன் வந்த பின் கிடைத்த தோல்விகளும் சமீபத்தில் பரத் சந்தித்த ஒரு ஜோதிடரும்தான் என்கிறது விவரமறிந்த வட்டாரங்கள்.

"எஸ்' பிக்சர்ஸ், ஐங்கரன் பிலிம்ஸ், மோசர்பியர் உள்ளிட்ட பெரிய பட நிறுவனங்கள் பலவும் புதிதாகத் திரைப்படம் தயாரிக்கும் திட்டத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளனவாம்.

"கல்லூரி', "ஈரம்', "ரெட்டச்சுழி' படங்களில் எதிர்பார்த்த லாபம் இல்லாததால், தற்போது தயாரித்து வரும் "அனந்த புரத்து வீடு' படத்தை வெளியிட்ட பின்பே அடுத்த படம் எனும் நிலையில் இருக்கிறது "எஸ்' பிக்சர்ஸ். அதேமாதிரி "அவள் பெயர் தமிழரசி', "பூ', "ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட படங்களின் தொடர் தோல்வியால், பாக்யராஜ்- சந்தணு கூட்டணியின் "சித்து +2' படத்தை ரிலீஸ் செய்த பின்பே அடுத்த படம் எனும் முடிவை எடுக்க வைத்திருக்கிறது மோசர்பியர் பட நிறுவனத்தை! இந்த இரு நிறுவனங்கள் போன்றே ஐங்கரன் பிலிம்ஸ் நிறுவனமும் முடிவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் "அங்காடித் தெரு' ஹிட் என்றாலும் முந்தைய படங்களான "வில்லு', "ஏகன்' உள்ளிட்ட படங்களின் தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிறுவனத்திற்கு! அதன்விளைவு மிஷ்கினின் "நந்தலாலா'வை ரிலீஸ் செய்த பின்பே அடுத்த படம் எனும் முடிவிற்கு வந்துள்ளது. இது மாதிரி பல படக் கம்பெனிகளும் படத் தயாரிப்பு பற்றி பல்வேறு முடிவில் உள்ளனவாம். காரணம் தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைதான்.

No comments:

Post a Comment