Saturday, June 19, 2010

"ராவணன் எனது கடைசி படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.மிச்சமிருக்கும் நாட்களில் கோல்ப் விளையாட ஆசை-மணிரத்னம்


shockan.blogspot.com

சென்னை: "ராவணன் படமே எனது கடைசி படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். மிச்சமிருக்கும் நாட்களில் கொடைக்கானலில் தங்கி கோல்ப் விளையாட ஆசைப்படுகிறேன்.." என்று கூறியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி:

ராவணன் படத்தை ஆரம்பிக்கும் போதே, இதுதான் எனது கடைசி படம் என முடிவு செய்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி, கொடைக்கானலில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அங்கே தினமும் கோல்ப் விளையாட ஆசை எனக்கு.

இப்போது அடுத்த படம் என்ன என்ன என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் இன்னுமொரு படம் மட்டும் பண்ணலாம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம். ஆனால் அடுத்த படத்துக்கான ஐடியா எதுவும் என்னிடம் இல்லை.

ராவணன் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் அது படத்தைப் பாதிக்காது என்றுதான் நம்புகிறேன்" என்றார்.

இன்று ரிலீஸ்...

இதற்கிடையே ராவணன் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகிறது. தமிழகத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ் ராவணன் வெளியாகிறது. இந்தி ராவண், தெலுங்கு வில்லன் படத்தையும் சேர்த்து 1300 தியேட்டர்களில் வெளியாகிறது.

முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு திருப்தியாக உள்ளதென பிக் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமைக்குப் பிறகு படம் தாக்குப் பிடிப்பது ரசிகர்கள் கையில் உள்ளது.

No comments:

Post a Comment