Sunday, June 13, 2010
ஜெ.'' வருகை! சாபமிட்ட தொண்டர்கள்!
shockan.blogspot.com
கடந்த வாரம் திடீரென்று ஞானோதயம் வந்தது போல 9-ந் தேதி மதியம் 2 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து கட்சிப் பிரச்சினைகள் தொடர்பாக மனு வாங்கப்போவதாக அறிவித்தார் ஜெயலலிதா.
ஜெ.விடம் பேசவே முடிய வில்லை என முத்துசாமி போன்ற பெரிய நிர்வாகிகளே வருத்தப்பட்டு தி.மு.க.வுக்கு போகின்ற சூழ்நிலையில் சாதாரண தொண்டன் அம்மாவை நேரில் பார்த்துப் பேச ஒரு வாய்ப்பா? என புளகாங்கிதமடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள், தமிழகம் முழுவது மிருந்து மடை திறந்த வெள்ளம் போல பத்தாயிரம் பேர் சென்னையில் குவிந்தனர்.
பென்னாகரம் இடைத்தேர்தல் முடிந்தவுடன் தொண்டர்களைச் சந்திக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம், தம்பித்துரை, செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்ற நிர்வாகிகளோடு "ஜெ' ஆலோசனை நடத்தியபோது "அதற்கு நிறைய செலவாகும்... செலவு செய்தாலும் தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வர பேருந்துகளை தி.மு.க. அரசு தராது' என்றார்கள். "அதற்கென்ன கேரளா, கர்நாடகா, பாண்டியிலிருந்து பேருந்துகளை ஏற்பாடு செய்யுங்கள்' என அவர்களிடம் எதிர்வாதம் செய்த ஜெ., அத்தோடு அந்த யோசனையை கைவிட்டுவிட்டார்.
முத்துசாமி, கரூர் சின்னச்சாமி ஆகியோர் அ.தி.மு.க.வை விட்டுப் போகும்போது அளித்த பேட்டிகளின் தாக்கத்தால், மறுபடியும் தொண்டர்கள் சந்திப்பு நடத்தினால் என்ன என்கிற ஐடியா ஜெ.வுக்கு உதிக்க, தலைமை நிலைய நிர்வாகிகளிடம் கூட ஆலோசிக்கவில்லை. காரணம், அவர்கள் செலவாகும்... பிரச் சினையாகும் என்று சொல்வதால், திடீரென தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முழுவதும் சசிகலா உறவினர்கள் ஆதரவு பெற்ற கோஷ்டி, அதை எதிர்க்கும் எதிர் கோஷ்டி என இரு பெரும் பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினர், பதவியில் இருக் கும் கோஷ்டிக்கு எதிராக அதிக மாக புகார் கொடுத்தால் அவர் களது பதவிகளைப் பறித்துவிடுவார் "ஜெ' என்று நூற்றுக்கணக்கில் ஆட்களைத் திரட்ட ஆரம்பித்தனர். பதவியில் இருப்பவர்களோ இந்தப் புகார் படலத்தை எப்படி தடுப்பது என டெலிபோனில் மிரட்டவே ஆரம்பித்தனர். இதன் க்ளைமாக்ஸ் என்னவென அறிய இருதரப்பும் சென்னையில் குவிந்ததால்தான் பிரச்சினையே என்கிறார் அ.தி.மு.க. வின் முன்னணி தலைவர்.
இவர்களோடு வாழ்க்கையில் கஷ்டப்படும் அ.தி. மு.க. தொண்டர்கள் எம்.ஜி.ஆர். பாணி யில் ஜெ., உதவிகள் செய்வார் என எதிர்பார்த்து குவிய, கூட்டம் கட்டுக்கு அடங் காமல் போனது.
2 மணிக்கு ஜெ.வின் வாகனம் தொண்டர்களின் வெள்ளத்தில் அரைமணி நேரம் சிக்கித் திணறித்தான் தலைமைக் கழகத்தின் உள்ளே வந்தது. அடுத்து என்ன நடந்தது என விளக்கினார் திருச்சி ஏர்போர்ட் பகுதி மகளிரணி ஜாக்குலின். ""நான் மனு கொடுக் கும் வரிசையில் முதல் ஆளாக நின்றிருந் தேன். மா.செ. ஆர்.மனோகரன் எங்கள் பகுதியில் அ.தி.மு.க.வை அழித்துவிட்டார். நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 164 வாக்குகள் வாங்கிய அ.தி.மு.க.வை 50 லட்ச ரூபாய் செலவு செய்து பாராளுமன்றத் தேர்தலில் 1700 வாக்குகள் வாங்கும் அளவுக்கு நான் வளர்த்தேன். நீ ஏன் செலவு செய்கிறாய்? கட்சியை வளர்க்கிறாய் என என்னை கேள்வி கேட்டுவிட்டு தி.மு.க.வுக்கு அனுசரணையாகப் போகும் ஒருவரை வட்டச் செயலாளராக்கிவிட்டார். அதை ஒரு புகாராக எழுதி அம்மாவைப் பார்க்க வந்த என்னை அம்மாவின் பாதுகாப்புக் காக போட்டிருந்த கயிற்றால் ஒரு கும்பல் இறுக்கியது. கழுத்து நெரிபட்டு நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன். என்னை மிதித்துக் கொண்டு பலர் ஓட ஆரம்பித்தார்கள். அரைமணி நேரம் உயிருக்காக நான் மயக்க நிலையில் போராடிக்கொண் டிருந்தேன். தலைமைக் கழக வாசலில் தேங்கியிருந்த தண்ணீரில் பிணம்போல கிடந்த என்னை அம்மாவின் செக்யூரிட்டிகள் ஆம்புலன்ஸில் அனுப்பி உயிர்பிழைக்க வைத்தார்கள்'' என்கிறார்.
தென்சென்னையைச் சேர்ந்த ரஷிதாவை ஜெ.வின் பாதுகாவலர்கள் தூக்கியெறிய புடவையெல்லாம் சேறாக... கசங்கிய துணிபோல எம்.ஜி.ஆர். சிலை முன்பு கை நீட்டி கதறிக்கொண்டிருந்தார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த ரஜினி செல்வமும் குமாரசாமியும் ""நாங்கள் ஒன்றிய கவுன் சிலர்கள். எங்களால் மக்கள் பணி எதையும் செய்ய தி.மு.க.வினர் உதவமாட்டேன்கிறார்கள். இதை நிர்வாகி களிடம் சொன்னோம். எதுவும் நடக்கலை. அம்மாவைப் பார்க்க வந்தோம், அடித்து துவைத்துவிட்டார்கள்'' என வருத்தப்பட்டார்கள்.
மூளை வளர்ச்சியில்லாத குழந்தையுடன் வந்திருந்த ஹரிஹரன், போக்குவரத்து தொழிற்சங்கத்தில் பெண்களுக்கு உரிய இடமில்லை என புகார் கொடுக்க வந்த கௌரி, திருவள்ளூர் மா.செ. மாதவரம் மூர்த்தி மேல் புகார் கொடுக்க வந்த ர.ர.க்கள் என பலரும் ஜெ.வைப் பார்க்க முடியவில்லை என நம்மிடம் வருத்தப்பட்டார்கள்.
ஒருமணி நேரம் மட்டும் மனு வாங்கிவிட்டு மிச்சத்தை அவைத்தலைவர் மதுவிடம் கொடுங்கள் என மீண்டும் காரிலேறி புறப்பட்ட ஜெ.வின் வாகனம், ஆர்வத் தோடு வந்து நின்ற தொண்டர்களை அகற்றி சுற்றியபடி வெளியேறியது. வடசென்னை மா.செ. வுக்கு எதிராக மனு கொடுக்க நிறைய பேர் வந்திருந்தார்கள். "சேகர்பாபுவுக் கெதிராக அவர் மாமா மதுகிட்ட மனு கொடுக்கணுமா? நல்ல கூத்துடா இது' என புலம்பிக்கொண்டி ருந்தனர்.
"எம்.ஜி.ஆர். கஷ்டப்பட்டு வளர்த்த இந்தக் கட்சி இனி உருப் படாது' என ஜெ.வின் கார் முன் னே நின்று சாபம் விட்டுவிட்டு "இதை எழுதுங்கள்' என நமக்கும் கட்டளை யிட்டுவிட்டுச் சென் றார் ஒரு கன்னியா குமரி மகளிரணி.
ஜெயலலிதா எதிர்பார்த்ததற்கு எதிராகவே எல்லாம் நடந்து முடிந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment