Saturday, May 1, 2010
கலைஞர் இருட்டடிப்பு:பா.விஜய் மீது அதிருப்தி
shockan.blogspot.com
ரஷ்ய இலக்கிய மேதை எழுதிய ’தாய்’ நாவலை , கலைஞர் கவிதை நடையில் தமிழில் எழுதியுள்ளார். தாய் காவியம் என்ற அந்த கவிதை நடை காவியத்தை அடிப்படையாக வைத்து ’தாய் காவியம்’ என்ற படத்தை பா.விஜய் தொடங்கினார். பாலி ஸ்ரீரங்கம் இப்படத்தை இயக்கினார்.
பிரம்மாண்ட விழா, சீனாவில் ஒரு பாடல் காட்சியோடு படம் நின்று போனது. பின்பு, ஞாபகங்கள் படத்திற்கு கதை எழுதி நடித்தார் விஜய்.
இதையடுத்து மீண்டும் இவர் தாய்க்காவியத்தை கையில் எடுத்தார். கே.எஸ்.ரவிக்குமாரை இப்படத்தை இயக்கச்சொல்லி கேட்டுக்கொண்டார். அவர் மறுத்துவிட்டார்.
சுரேஷ்கிருஸ்ணா இயக்கி சமீபத்தில் வெளிவந்த ஆறுமுகம் படத்தின் முழுப்பாடல்களையும் எழுதியது பா.விஜய். இதனால் உண்டான நெருக்கத்தினால் சுரேஷ்கிருஸ்ணாவிடம் கேட்க, அவரால் மறுக்கமுடியவில்லை.
பிரபல லாட்டரி சீட்டு ஏஜெண்ட் மார்டின் தயாரிக்க ’இளைஞன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கியுள்ளது.
கலைஞரின் 75வது படைப்பு என்ற விளம்பரத்துடன் பட பூஜை நடந்தது. கலைஞர் நேரில் வந்து படப்பிடிப்பை துவக்கிவைத்தார்.
நகரெங்கும் படத்தின் சுவரொட்டிகள் இருந்தன. கலைஞர் கதை,வசனம் எழுதும் படங்களின் போஸ்டர்களில் கலைஞர் படம்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்தப்பட போஸ்டர்களில் அப்படியில்லை. இது கலைஞர் ரசிகர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.
’தலைவரின் 75 வது படைப்பு என்கிற பெருமையோடு எடுக்கப்படுகிறது இந்தப்படம். தலைவரை முன்னிலைப்படுத்தாமல் இருக்கிறாரே..சின்னதாய் படத்தை போட்டு ஏன் இப்படி தலைவரை இருட்டடிப்பு செய்கிறார் ’என்று திமுக தரப்பினர் பா.விஜய் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment