Thursday, October 29, 2009

அம்பானி சகோதரர்களின் உள்விவகாரம்

மித்தலின் கோபம் ஒருபுறமென் றால், முகேஷ் அம்பானியின் கோபம் மற்றொரு புறத்திலிருந்து ஆ.ராசாவை நோக்கி வந்துகொண்டிருந்தது. 1980-களில் இந்திராகாந்தி பிரதம ராகவும் பிரணாப் முகர்ஜி நிதியமைச்ச ராகவும் இருந்தபோதுதான் திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விறுவிறு வளர்ச்சியைப் பெறத்தொடங்கியது. ராஜீவ் ஆட்சியில் அது இந்தியாவின் புதிய பிரம்மாண்டமாக உருவெடுத்தது. வி.பி.சிங் ஆட்சிக் காலமான 11 மாதங்கள் மட்டும்தான் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சோதனையான காலகட்டம். அதன்பிறகு, நரசிம்மராவ் ஆட்சி வந்ததும் மீண்டும் பெருவளர்ச்சி பெற்றது ரிலையன்ஸ்.திருபாய் அம்பானியின் மரணத்திற்குப்பிறகு, அவரது மகன்களிடையே ஏற்பட்ட சொத்து மோதல்களால் பங்கு பிரிக்கப்பட்டன. முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் பெட்ரோலியத்துறையும் அவரது இளையசகோதரரான அனில் அம்பானிக்கு ரிலையன்ஸ் எனர்ஜி என பிரிக்கப்பட்டதுடன், ரிலையன்ஸ் டெலிகம்யூனிகேஷனும் அனிலுக்கே கிடைத்தது. முகேஷின் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம், அனிலின் ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு குறைந்த விலையில் இயற்கை எரிவாயு தரவேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. ஆனால், ஒப்பந்தப்படி முகேஷ் நடந்துகொள்ளவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, முகேஷுக்கு ஆதரவாகவே இருக்கிறார். தம்பியின் நிறுவனம் வளர்ந்துவிடக்கூடாது என்பதுதான் முகேஷின் பிசினஸ் மந்திரம்.அனிலைவிட தொழிலிலும் சொத்து மதிப்பிலும் முகேஷ் முன்னணியில் இருந்தாலும், அனிலிடமிருந்த ரிலையன்ஸ் டெலி கம்யூனிகேஷன் உடனடி பணப்புழக்கத்திற்கான வணிக நிறுவனமாக இருந்தது. மற்ற துறைகளில் முதலீடு செய்து காத்திருந்தால் தான், பண வரவு இருக்கும். தொலைத்தொடர்புத்துறை என்பது நடுத்தர மக்கள்-அடித்தட்டு மக்கள் எனப் பலரையும் வாடிக்கை யாளராகக் கொண்டிருப்பதால் மாதாமாதம் பில் தொகை கட்டப் படுவதன் மூலம் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. அனில் நிறு வனத்தின் பணப்புழக்கம் முகேஷுக்கு எரிச்சலைத் தந்தது. இதற்கு காரணம், தொலைத்தொடர்புத்துறையில் அமைச்சர் ஆ.ராசா உருவாக்கிய பாதைதான் என அவர் மீது முகேஷுக்கு கோபம் உண்டானது. செல்போன் கம்யூனிகேஷனில் புதிய நிறுவனங்கள் நுழைந்ததால் கோபத்திலிருந்த மித்தலும், தம்பியின் பணப்புழக்கத்தால் எரிச்சலடைந்த முகேஷும் கைகோர்த்தனர்.


பிசினஸ்-அரசியல் கூட்டணி
உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு மீண்டும் பழைய செல்வாக்கு கிடைத்து, தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராகுல்காந்தி. அதனால்தான், 123 ஒப்பந்தம் காரணமாக மன்மோகன்சிங் அரசுக்கு நெருக்கடி வந்தபோது, முழுமையான ஆதரவு தந்த சமாஜ்வாடி கட்சியுடன்கூட எம்.பி தேர்தலில் கை கோர்க்காமல் சமாஜ்வாடியையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் எதிர்த்துக் களமிறங்கி, காங்கிரசுக்கு நம்பிக்கை தரும் வெற்றியை பெற்றுத்தருவதில் முனைப்பாக செயல்பட்டார் ராகுல்காந்தி. சமாஜ் வாடி கட்சிக்கு எதிராக ராகுல் செயல்படும் நிலையில், அனில் அம்பானியோ சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளராக இருக்கிறார்.அரசியல் பகையுடன் பிசினஸ் பகையை முடிச்சுப் போட்டது முகேஷ்-மித்தல் கூட்டணி. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். போடுவதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் உள்ள சோனியா இல்லமான 10, ஜன்பத் சாலை வீட்டில் ராகுல்காந்தியை முகேஷும் மித்தலும் சந்தித்தனர் என்கிற டெல்லி பொலிட்டிக்கல் உயர் மட்டத்தினர், இந்த சந்திப்பின்போது ரிலையன்ஸ், ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது பற்றிப் பேசப்பட்டுள்ளது என்கின்ற னர். உ.பி.யை போலவே மற்ற மாநிலங்களி லும் காங்கிரசை வளர்க்கத் திட்டமிட்டுள்ள ராகுலிடம், ஸ்பெக்ட்ரம் விவகாரம் மூலமாக ஆ.ராசாவுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடியால் தி.மு.க.வுக்கும் நெருக்கடி ஏற்படும். இதை வைத்து, 2011 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு அதிக சீட் கேட்கலாம் என்றும் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.


தி.மு.க.வை குறிவைக்கும் செயல்பாடுகள்


ராசாவை வேறு துறைக்கு மாற்றவேண்டும் என்கிற தன் சபதத்தை நிறைவேற்ற மித்தலும், தம்பியின் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முகேஷும் தீவிரமாக இருக்கின்றனர். இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் இல்லை எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் தொழில்துறையுடன் தொடர் புடைய தகவல்தொடர்பு-ஜவுளி-கெமிக்கல்ஸ் ஆகிய மூன்றும் தி.மு.க வசம்தான் உள்ளன. இதனை காங்கிரசின் வடஇந்தியத் தலைவர்களாலும், வடஇந்தியத் தொழிலதிபர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதில் மாற்றத்தை எதிர்பார்த்திருந்தவர்கள், ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒரு நல்லவாய்ப்பு எனக் கருதுகின்றனர். இதனடிப்படையில் ஆ.ராசா மாற்றப்படுவார் என்ற தகவல்களை அவர்களே மீடியாக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.வியாழக்கிழமையன்று சி.பி.ஐ. ரெய்டு தொடங்கியபின், பிரதமரிடம் அமைச்சர் ஆ.ராசாவும், மறுநாள் டி.ஆர்.பாலுவும் இதுபற்றி கேட்டபோது, தனக்குத் தெரியாமல் இது நடந்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்திருந்தார். அதிகாரிகளிடம் இதுபற்றி பிரதமர் விவரம் கேட்டபிறகும், சி.பி.ஐ. தொடர்ந்து தனியார் நிறுவனங் களில் ரெய்டு நடத்தியுள்ளது. இதன்பின்னணி குறித்து சி.பி.ஐ அதிகாரிகளிடம் கேட்டபோது, நாங்கள் ஒரு ரெய்டு நடவடிக்கை யைத் தொடங்கினால் "ஒரு சர்க்கிள் முடித்துவிட்டுத்தான் நிறுத்துவோம். இது வழக்கமானதுதான்' என்கின்றனர். பிரதமர் அலுவலக வட்டாரத்தில் வேறொரு சந்தேகம் நிலவுவதாகத் தகவல்.பிரதமரின் கண்ட்ரோலில் சி.பி.ஐ. இருந்தாலும் பிரதமர் அலுவலகப் பொறுப்புகளுக்கு இணையமைச்சராக இருப்பவர் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பிரிதிவிராஜ் சவாண். இவருக்கும் சரத்பவாருக்கும் மாநில அரசியலில் ஒத்துவராது. அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ஸ்வான், பவாருக்குச் சொந்தமானது என்பதால் சோனியா, ராகுல் ஆகி யோரின் உத்தரவுப்படி இணையமைச்சர் சவாண், சி.பி.ஐ.யை இயக்கியிருப்பார் என பிரதமரே சந்தேகப்படுவதாக அவரது அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.
சி.பி.ஐ. இயக்குநர் வருகை

இதனிடையே, சி.பி.ஐ. இயக்குநராக அஸ்வின்குமார் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னைக்கு விசிட் அடிக்க, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான ஆவணங்களுக் காகத்தான் வந்திருக்கிறார் என செய்திகள் கிளம்பின. இது குறித்தும் சி.பி.ஐ. வட்டாரங்களில் கேட்டபோது, எல்லாமே காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். தென் மாநிலங்களில் சி.பி.ஐ.யின் செயல்பாடுகள் பற்றி ஆலோ சிப்பதற்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மீட்டிங் இது. முதல் விசிட் என்பதால் முதல்வரையும் கவர்னரையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என எங்கள் டைரக்டர் விரும்பினார். கவர்னர் டெல்லியில் இருக்கிறார்.தமிழக முதல்வரை சி.பி.ஐ. இயக்குநர் சந்திப்பதற்காக 5 நாள் முன்னாடியே அப்பாயிண்ட்மென்ட்டும் கேட்டிருந்தோம். தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழல்களால், முதல்வரை எங்கள் டைரக்டர் சந்தித்தால் அதுவும்கூட விசா ரணை என்ற பெயரில் திசை திருப்பப்படும் என்பதால் அப்பாயிண்ட்மென்ட் தரப்பட லை என்றனர் தெளிவாக. உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்தித்த சி.பி.ஐ. இயக்குநர், ஸ்பெஷல் கோர்ட்டுகள் பற்றி விசாரித் துள்ளார். தலைமைச் செயலாளருடனான சந்திப்பின்போது, பாதுகாப்புக்காக என்று மாநில உள்துறையினர் நிறைய பணம் எங்களிடமிருந்து வாங்குகிறார்கள். அதை குறைக்கணும். சி.பி.ஐ.க்கு சென்னையில் புது பில்டிங் கட்டணும் எனத் தெரிவித் திருக்கிறார் அஸ்வின்குமார்.
முகேஷ்-மித்தல் இருவரும் ஆ.ராசா மீதான கோபத்தை ராகுலுடனான சந்திப் பின்போது வெளிப்படுத்த, ராகுலின் பார்வை மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மீதும் அம்மாநிலத்தின் சக்திமிக்க அரசியல்வாதி யான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீதும் திரும்பியுள்ளது. காங் கிரசும் தேசியவாத காங்கிரசும் ஒரே கூட் டணியில் இருந்தாலும் தேசியவாத காங் கிரசின் செல்வாக்கை ராகுல் விரும்ப வில்லை. அதனால், தேர்தல் களத்தில் பல உள்குத்துகள் நடந்துள்ளன.கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 71 இடங் களிலும் காங்கிரஸ் 69 இடங்களிலும் வென்றது. தற்போது, காங்கிரஸ் 82 இடங்களில் வென்றுள்ளது. தேசியவாத காங்கிரசுக்கு 62 இடங்கள்தான். அதன் எண்ணிக்கை குறைந்ததற்கு காங்சிரசின் திருப்பணிகள் நிறைய இருப்பதாக மும்பை அரசியல் வல்லுநர் கள் தெரிவிக்கிறார்கள். கடந்தமுறை தேசியவாத காங்கிரசுக்கு 24 அமைச் சர்களும் துணை முதல்வர் பதவியும் காங்கிரசுக்கு 19 அமைச்சர்களும் இருந்தனர். நிதி, உள்துறை,மின்சாரம், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், சுங்கவரி, உயர்கல்வி, வீட்டு வாரியம் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தேசியவாத காங்கிரஸ் வசமே இருந்தன.இந்தமுறை முக்கிய துறைகளை காங்கிரஸ் வைத்துக்கொள்ளத் தீர்மானித்திருப்பதுடன், அமைச்சரவை யில் தேசியவாத காங்கிரசுக்கான பிரதிநிதித்துவத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சி.பி.ஐ. மூலம் சரத்பவாரை மிரட்டுகிறது.
அமைச்சர் ஆ.ராசா மாற்றமா?மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையடுத்து, அங்கு ஆட்சியில் பங்குபெற முடியா மல் போனவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர் களுக்கும் மத்திய அமைச்சரவையில் பங்கு தரும் நோக்கத்துடன் அமைச்ச ரவை மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது காங்கிரஸ் மேலிடம். ஆந்திர முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி தரப்படும் என சோனியா வாக்களித்துள்ளார். ஆ.ராசா மாற்றப்படுவாரா என பிரதமரிடம் மீடியாக்கள் கேட்டபோது, இது செய்தியாளர்களுடன் விவாதிக்க வேண் டிய பிரச்சினையில்லை எனப் பதிலளித் தார்.ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மீடியாக்கள் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் ஆ.ராசா, ""தனிநபர்களின் ஆதிக்கத்திலிருந்த தொலைத்தொடர்புத் துறையை மீட்டு, பல நிறுவனங்களும் பங்குபெற்று, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவை கிடைக்கச் செய்தேன்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதமர், நிதியமைச்சர், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற்றே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன'' என உறுதியான குரலில் தெரிவிக்கிறார்.ஆ.ராசா தானாக முன்வந்து ராஜினாமா செய்யவேண்டும் என காங் கிரஸ் எதிர்பார்ப்பதாக ஊடகங்கள் பரப்பிக்கொண்டிருந்த நிலையில், தமிழகத்தின் ரியாக்ஷன் எப்படியிருக்கும் என்பது பற்றி ஐ.பி.யிடமிருந்து மேலிடத் திற்கு குறிப்பு அனுப்பப்பட்டது. அதுபற்றி நம்மிடம் பேசிய உயர்மட்டத்தினர், பெருந்தொழிலதிபர் களுக்கு ஆதரவாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஆ.ராசாவை குறிவைத்து நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டாலோ, சி.பி.ஐ.யின் நடவடிக்கை தொடர்ந்தாலோ மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க விலகும் என்ற முடிவை தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என ஐ.பி அனுப்பிய குறிப்பில் உள்ளது என்றனர். தமிழக முதல்வரின் மனநிலை பற்றிய ஐ.பியின் குறிப்பு, டெல்லியை யோசிக்க வைத்துள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்

No comments:

Post a Comment