தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன.
அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது.
அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அமரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பெருந்திரளான மக்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சென்று தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள அரச தலைவர் மகிந்த, தேசிய தலைவரின் தந்தையாரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டு யாழ். மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊகம் தெரிவித்துள்ளன.
ஆனாலும், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment