Sunday, January 24, 2010

வந்துட்டாங்கய்யா அதிகாரிங்க வந்துட்டாங்கய்யா! -வடிவேலுவின்






சென்னையில் கடந்த 19-ந்தேதி நடந்த ரெய்டுகள் குறித்தும் நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் நடந்த களேபரத்தால் மற்ற நடிகர்கள் பணத்தோடும் டாக்குமெண்ட்டுகளோடும் அன்று முழுதும் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்தது குறித்தும் கடந்த நக்கீரன் இதழ் "ராங்-கால்' பகுதியில் ட்ரெய்லர் பாணியில் மிகச் சுருக்கமாய் சொல்லியிருந்தோம். இப்போது திரை பிரபலங்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாய் புகுந்தது குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.



டெல்லியில் இருந்து சென்னையில் தரையிறங்கிய வருமானவரித்துறை அதிகாரிகளோடு சென்னை அதிகாரிகளும் 19-ந் தேதி அதிகாலை, ஒரு தனியார் டிராவல்ஸில் 40 கார்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டனர்.

திபுதிபுவென காரில் ஏறிய அதிகாரிகள் முதலில் அந்தந்த கார் டிரைவர்களின் செல்ஃபோன்களை வாங்கி ஸ்விட்ச் ஆப் செய்தனர்.பின்னர் 4 டீமாகப் பிரிந்து நடிகர்கள் சூர்யா, வடிவேலு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரைக் குறிவைத்து... அவர்களின் வீடுகளை நோக்கி விரைந்தனர்.

அதேநேரம்... முன்னதாகவே மதுரையில் லேண்ட் ஆகியிருந்த மற்றொரு டீம்... மதுரை அருகே இருக்கும் ஐராவதநல்லூர் கிராமத்தில் இருக்கும் நடிகர் வடிவேலுவின் வீட்டுமுன் போய் நின்றது. அப்போது ஹாயாக எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக் கொண் டிருந்த வடிவேலு...

அதிகாரிகளைப் பார்த்து "ஷாக்'காகி... ""என்ன சார் மதுரை வரை வந்து என்னைத் துரத்திப் பிடிக்கிறீங்க'' என சமாளித்தபடி சிரிக்க முயல... அதிகாரிகளோ இறுக்கமான முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்து கதவுகளை உட்பக்கமாக தாழிட்டனர்."சட்'டென பாத்ரூமுக்குள் ஓடிய வடிவேலு... "மதுரைக் காரரை' அழைத்து... விஷயத்தைச் சொல்ல... அவரது செல்ஃபோனையும் கேட்ச் பண்ணினார்கள் அதிகாரிகள். இருந்தும் வடிவேலு வின் சமயோஜித புத்தியால் அங்கு சுருக்கமாகவே ரெய்டை முடித்துக் கொண்ட அதிகாரிகள்...

""சென்னைக்குப் புறப் படுங்க'' என அவரைத் தமிழகத் தலைநகரில் தரை இறக்கம் செய்தனர்.இதற்கிடையே சென்னை தி.நகர் கிருஷ்ணா தெருவில் இருக்கும் நடிகர் சூர்யாவின் வீட்டுக்குள் அதிகாரிகள் நுழைய முயல... செக்யூரிட்டிகள் அவர்களை உள்ளே விட மறுத்து வாக்குவாதத்தில் இறங்கினர்.அப்போது தனது "சிங்கம்' படத்திற்காக டப்பிங் பேசக் கிளம்பிய சூர்யாவை, வாசலிலேயே அதிகாரிகள் மடக்க... ""என்ன சார் ரெய்டா... வாங்க'' என அவர் களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். திபு திபுவென வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள்... முதல் வேலையாக வீட்டுத் தொலைபேசி இணைப்புகளை "கட்' பண்ணிவிட்டு செல் ஃபோன்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா கொஞ்சம் டென்ஷனாக இருக்க... வீட்டில் இருந்த நடிகர் சிவகுமாரும் அவர் மனைவியும் அமைதியாக சோபாவில் உட்கார்ந்தபடி... ரெய்டை வேடிக்கை பார்த்தனர்.

தனது "ஆயிரத்தில் ஒருவன்' படம் எப்படி ஓடுகிறது என்று பார்ப்பதற்காக மதுரைப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த நடிகர் கார்த்தி... அவசரமாக சென்னைக்கு அழைக்கப்பட்டார் விசாரணைக்கு என்று.இதை வழக்கமான ஃபார்மால்டி ரெய்டு என நினைத்த சூர்யாவும் வடிவேலுவும் நேரம் செல்லச் செல்ல... அதிகாரிகள் காட்டிய தீவிரத்தைப் பார்த்துத் திகைத்தனர்.

வீட்டில் அன்றாட செலவுக்கு வைத்திருந்த ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கே கணக்கைக் கேட்டு குடைந்து அதிகாரிகள் பீதியூட்ட... ஆரம்பத்தில் கேஸுவலாக இருந்த இந்த இருவரும் பதட்டமடைந்தனர்.டிரைவர்களையும், வீட்டு வேலைக்காரர்களையும் கூட விட்டு வைக்காமல் தீவிரமாய் விசாரித்தனர். வடிவேலுவின் சாலிகிராமம் ஆபீசுக்கு சான்ஸ் கேட்டு வந்த திருச்சி இளைஞர் ஒருவரையும் பிடித்து உட்கார வைத்துவிட்டார்கள் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள்.

""ஏண்ணே அவனை புடுச்சிருக்கீங்க... பாவம்ணே அந்த பையன் என்று'' அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தார் வடிவேலு. நள்ளிரவு 1 மணி வரை அமர வைத்துவிட்டார்கள்.இவர்களைப் போலவே இயக்குநர்களான ரவிக்குமாரும், முருகதாஸும் அதிகாரிகளின் நட வடிக்கைகளைப் பார்த்து விழிபிதுங்கினர். ரவிக்குமாருக்கு ஏற்கனவே ரெய்டு அனுபவம் உண்டு. அப்போதெல்லாம் இவ்வளவு கெடுபிடி இல்லை.

ரவிக்குமார் வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த வட இந்திய அதிகாரி ஒருவர் இயக்குநரின் மகளின் பெட்டில் படுத்துக் கொண்டு யாரிடமோ ஃபோனில் மிதப்பாக பேசிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து கடுப்பான ரவிக்குமார், ""உங்க லிமிட்டுக்கு மேல போறீங்க... இப்படி பெட்ரூமில் அட்டகாசம் செய்வதற்கு எந்த ரைட்சும் கிடையாது'' என்று கோபப்பட்டார். அதன் பிறகு மற்ற அதிகாரிகள் அவர்களை சமாதானப் படுத்தி ரெய்டை தொடர்ந்தனர். முருகதாஸுக்கோ ரெய்டு அனுபவம் புதிது. எனவே அவர்தான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானார்.

வழக்கமாக சில மணி நேரங்கள் மட்டுமே நடக்கும் ரெய்டு இந்தமுறை நள்ளிரவைத் தாண்டிப் போகப் போக... திரைப்பிரபலங்களான நால்வரும் கைபிசைந்தனர். சூர்யாவின் வீட்டருகே அவர் நடத்தும் "அகரம்' அறக்கட்டளை அலுவலகமும், அடையாறு பிளாட்டும் "ஸ்டுடியோ கிரீன்' என்ற படத் தயாரிப்பு நிறுவன அலுவலகமும் கூட ரெய்டுக்குத் தப்பவில்லை.அதிகாரிகள் தீவிரமாக ரெய்டு நடத்தும் தகவல் கலைஞர் காதுக்குப் போக...

அவர் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் பழனி மாணிக்கத்தை தொலைபேசியில் அழைத்து ""என்னய்யா நடக்குது. சினிமாக்காரங்க என்ன செஞ்சாங்க?

ஏன் இந்தக் குடை குடையறாங்க. சூர்யா, வடிவேலெல்லாம் சரியாகத்தானே இருக்காங்க. நார்மலா நடக்குற ரெய்டு மாதிரி தெரியலையே... யாரோட தூண்டுதல்ய்யா இது'' என்ற ரீதியில் கறார் குரலில் வறுத்தெடுக்க...""பாக்கறேண்ணே... விசாரிக்கிறேண்ணே... நாம சொல்லி இது நடக்கலேண்ணே...'' என அவர் திணறினார். இதன்பின்னர் ரெய்டின் போக்கு இயல்பு நிலைக்கு மாறியதோடு...

வழக்கமான சில காமெடிக் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்தன.சூர்யா வீட்டில் கறாராய் ரெய்டு நடத்திய அதிகாரி ஒருவர் ""சார்... என் வொய்ப்... உங்க தீவிர ரசிகை சார். எனக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்க'' என பாக்கெட் நோட்டை நீட்டினார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கிய ரெய்டு வைபவத் துக்கு மறுநாள் காலை அதிகாரிகள் முற்றுப் புள்ளி வைத்தனர். இந்த ரெய்டில் பணத் தையோ நகைகளையோ கைப்பற்றாத அதிகாரிகள் -கணக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றனர். ஆரம்பத்தில் வடிவேலுவிடம் கடுமை காட்டிய அதிகாரிகள் முடியும் நேரத்தில் ஒருமணி நேரம் வாய்விட்டு சிரிக்கும் அளவு காமெடி கச்சேரி பார்த்திருக்கிறார்கள். இனி சொந்த பந்தம் யாரும் எட்டு வருஷம் வரமாட்டாங்க என தன் ஸ்பெஷல் மாடுலேஷனில் பேச... இதுக்கு ஏன் பயப்படணும் என அதிகாரிகள் திருப்பி கேட்டிருக்கிறார்கள்.

""ஏண்ணே நீங்க சும்மாவா விடுவீங்க. வர்ற சொந்தக்காரங் களை புடுச்சு உன் வீட்ல இருக்கிற கோழி எத்தனை வருஷமா இருக்கு? அது போட்ட முட்டை எவ்வளவு? அதுக்கு கணக்கு எங் கேன்னு குடைஞ்சுருவீங்களே'' என்று ஜாலியாக கலாய்த்திருக்கிறார். நள்ளிரவுக்கு பின் ரெய்டு முடிந்து கிளம்பிய அதிகாரிகளிடம், ""அடிக்கடி வந்துட்டு போங்கண்ணே'' என்று வழியனுப்பியிருக்கிறார்.திரையுலகப் புள்ளிகள் அனைவர் வயிற்றிலும் இந்த ரெய்டு... புளியக் கரைக்க... எல்லோருமே கணக்கில் வராதவைகளை பாதுகாப்பாய் வைக்க... அந்த ரெண்டு நாளும் படாதபாடு பட்டனர். இந்த ரெய்டு... குறித்த டாக்கும்... விதவிதமாய் எழுந்து கொண்டிருக்கிறது.""இந்த ரெய்டின் பின்னணியில் இருப்பவரே உதயநிதிதான்'' என அடித்துச் சொல்கிறது ஒரு தரப்பு.""எப்படி என்றால்...

"ஆதவன்' படத்தில் சூர்யாவும் வடிவேலுவும் இயக்குநர் ரவிக்குமாரும் தங்கள் சம்பளத்தில் ரொம்பவும் கறார் காட்டினர். இதனால் இவர்களோடு தயாரிப்பு தரப்பிற்கு லேசான உரசல் இருந்தது. எங்களிடமே இப்படியா? எங்க பவரைப் பாக்கறீங்களா? என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தத்தான் இந்த ரெய்டை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்'' என அந்தத் தரப்பே... ஏகப்பட்ட புள்ளிகளை வைத்து... கோலத்தையும் போட்டுக் கொண்டிருக்கிறது.உதயநிதி மீதான இந்தப் புகார்கள் குறித்தும் ரெய்டு குறித்தும் சம்பந்தப்பட்ட திரைப் பிரபலங்கள் என்ன நினைக்கிறார்கள். நடிகர் சூர்யாவோ, ""ச்சே! ச்சே! உதயநிதி ஜென்டில்மேன்.

ரெய்டு பத்தி தெரிஞ்சதும் எங்களுக்கு முதல்ல லைன்ல வந்து அக்கறையா விசாரிச்சி ஆறுதல் சொன்னதோடு... ஏதாவது சிக்கல்ன்னா சொல்லுங்கன்னு உதவிக்கரமும் நீட்ட ரெடியானார். அதே சமயம் எங்க கணக்கு வழக்குகள் கிளியரா இருந்ததால் நாங்க யாரும் பயப்படவோ கவலைப்படவோ இல்லை'' என்கிறார் நம்மிடம்.நடிகர் வடிவேலுவோ ""இது என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு. உதயநிதி எப்பவுமே எங்களுக்கு உதவும் நிதியாத்தான் இருப்பார். உபத்திரநிதியா அவர் யாருக்கும் இருக்கமாட்டார். அவர் தயாரிப்பில் ரவிக்குமார் சார் டைரக்ட் பண்ற அடுத்த படத்தில் நானும் நடிக்கிறேன். ரெய்டுக்கு வந்த அதிகாரிகளுக்கு என்ன பிரச்சினையோ... அவங்க எரிச்சலை எல்லாம் எங்க மேல காட்டிட்டாங்க. பொங்கல் கொண்டாட மதுரைக்கு போன என்னை வரச் சொன்னாங்க.

கணக்கு வழக்கு எல்லாம் தெளிவா கொடுத்திருக்கேன். ஒரு பிரச்சினையும் இல்லை'' என்று நம்மிடம் வெளிப்படையாக பேசினார். இயக்குநர்களான ரவிக்குமாரும் முருகதாஸும் கூட ""இது டிபார்ட்மெண்ட் ரெய்டு. இதில் சம்பந்தமே இல்லாம உதயநிதி சாரை எதுக்கு சம்பந்தப்படுத்தறாங்க. எங்கக்கிட்ட அள்ளிக்கிட்டு போற அளவுக்கு எதுவும் இல்லை. அதனால் பயமில்லை.

மன உளைச் சல் உண்டாக்கிட்டுப் போயிட்டாங்க'' என்றார்கள் வேதனையோடு.மழை விட்டும் தூவானம் விடாததைப்போல் ரெய்டு முடிந்த பிறகும்... அது தொடர்பான சர்ச்சை அலைகள் ஓயாமல் எழுந்தபடி இருக்கிறது.

No comments:

Post a Comment