Monday, November 30, 2009

திருவண்ணாமலை கார்த்திகை விழா - பரணி தீபம் ஏற்றப்பட்டது - மாலையில் மகா தீபம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை மகா தீபம் எனப்படும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது.அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
10 நாள் நடைபெறும் திருவிழாவில் இங்குள்ள மலையே சிவனாக கருதி வழிபடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவின் இறுதி நாளான இன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இதற்காக இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அதிகாலை 4 மணிளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் பலிபீடம் அருகே அழைத்து வரப்படுவார்கள். பின்னர் கோவிலில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே பலி பீடத்தின் அருகே வருவார்.

அர்த்தநாரீஸ்வரர் வந்ததும் பலி பீடம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்படும்.2,668 மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக தயார் நிலையில் வைத்து இருந்த மகாதீப கொப்பரையை நேற்று காலை மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1,500 மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் ஆகியவை கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் வந்து குவிந்துள்ளனர்.

தீபத் திருவிழாவுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment