Monday, November 30, 2009

13-வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் பொன்சேகா தயார்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

சிறீலங்காவின் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த விபரம்:
இந்தியாவே எமது நெருங்கிய அயல்நாடு, பிராந்தியத்தில் வலுவான அயல்நாடு. இதன் காரணமாக இந்தியாவுடன் சிறப்பான உறவைப் பேணுவது அவசியம்.
சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து நான் செயற்பட்டேன் என எவராவது கூறுவார்கள் என்றால் அது இராணுவத் தளபாடங்களுக்காகத்தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு அவை தேவைப்பட்டன. இந்த இராணுவத் தளபாட ரீதியான உதவிகளை அந்த நாடுகள் வழங்கின.
எனினும், யுத்தத்தில் வெல்வதற்குத் தார்மீக ரீதியாக, அரசியல் ரீதியாக உதவியது இந்தியாதான். இந்தியாவுடனான உறவுகள் எப்போதும் உயர்மட்டத்தில் இருந்துள்ளன. எதிர்காலத்திலும் சிறந்த உறவுகளைப் பேண விரும்புகிறேன்.
எங்களுக்கு அருகிலிருக்கும் சிறந்த அயல்நாடு இந்தியா. இதன் காரணமாக சிறந்த உறவுகளைப் பேணவேண்டும். இராணுவத்தில் இணைந்த நான் முதல் நாள் அந்த நாட்டுடன் சிறந்த உறவுகளைப் பேணி வந்துள்ளேன்.
நான் இராணுவப் பயிற்சிக்காகத் தளபதியாக விளங்கியபோதும் நான்கு தடவைகள் இந்தியா சென்றுள்ளேன். அந்த நாட்டு இராணுவத்தைப் பெரிதும் மதிப்பதுடன் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளேன்.
தமிழர் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வுகாண வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பத்திற்கு இணங்கவே இந்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட சட்டம் என்பதால் அச்சட்டத்தில் மாற்றங்களைக் மேற்கொள்ளவது அவசியம் என்றார்.

No comments:

Post a Comment