Wednesday, December 30, 2009

எரித்திரியாவில் உள்ள புலிகளின் விமானங்களை கைப்பற்றும் முயற்சி தோல்வி

hmmஎரித்திரியா நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்கள் தரித்து நிற்பதாகக் கூறப்படுகிறது. தரித்து நிற்பதாகக் கூறப்படும் சிலின் 143 ரக விமானங்களின் உரிமையினைக் கோரி அவற்றை தேர்தலுக்கு முன்னதாக இலங்கை கொண்டுவரும் நோக்கில் இலங்கை விமானப்படை அதிகாரிகள் சிலர் சமீபத்தில் எரித்திரியா சென்று திரும்பியுள்ளதாக அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளது. இவ்வாறு எரித்திரியா சென்ற அதிகாரிகளிடம் சரியான உரிமைகோரும் பத்திரம் இல்லாததால் விமானங்களை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை அங்கு தரித்து நின்ற 10 விமானங்களில் 4 விமானங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை அதிகாரிகள் அங்கு செல்ல முன்னரே, சுமார் 2 மாதத்திற்கு முன்னரே 4 விமானங்கள் அவுஸ்திரேலியா நோக்கி நகர்த்தப்பட்டு விட்டதாக விமான நிலைய அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். இதனால் மீதம் உள்ள 6 விமானங்களும் சரியான முறையில் உரிமை கோரப்பட்டு அப்புறப் படுத்தப்படலாம் என்று கூறிய அதிகாரிகள், அதனை இலங்கை அரசிடம் கொடுக்க மறுத்துவிட்டனர்.இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய இலங்கை அதிகாரிகள் தற்போது என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகின்றனர். சிலின் 143 இலகு ரக விமானங்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லாவாக்கியாவிடம் இருந்து 2 விமானங்களை கொள்வனவு செய்துவிட்டு, அது தான் தாம் கைப்பற்றிய புலிகளின் விமானம் என்று தேர்தலுக்கு முதல் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment