Sunday, December 20, 2009

வி.புலிகளின் கப்பல் இன்று மதியம் கொழும்பு வந்தது (2ம் இணைப்பு)







"பிரின்சஸ் கிருஸ்டீனா" என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கப்பலை தாம் கைப்பற்றி இருப்பதாக இன்று காலை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து நிருபர் தெரிவித்தார்.
ஆயுதங்களைக் காவிச் செல்லக் கூடிய இந்தக் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளபோதும், இது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதா இல்லை சர்வதேச போலீசாரின் உதவி நாடப்பட்டதா என்பது போன்ற விபரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.
சுமார் 90 மீட்டர் நீளமான இந்தக் கப்பலில் பனாமா நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இக் கப்பல் வெகு விரைவில் இலங்கை வந்துசேரும் எனக் கூறும் அரசு, நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இதை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது என்பது புலனாகிறது. இக் கப்பல் இலங்கை வந்தடைந்தால் சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவின் செல்வாக்கு அதிகரிக்கும் என அரசு கனவு காண்கிறது.

No comments:

Post a Comment