Wednesday, March 10, 2010

ஆயில் மசாஜ்! பெண்களுடன் நித்யானந்தர்! இதுவரை வெளிவராத அதிர்ச்சிப் படங்கள்!

ன்மீகத்தையும் கடவுளையும் தேடிக்கொண்டிருப்பதாக இத்தனை காலமாகப்பிரசங்கம் செய்து வந்த சாமியார் நித்யானந்தா, இப் போது தலைமறைவாக இருந்தபடி, உண்மைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும், சட்டரீதியாக எந்தத் தவறும்செய்யவில்லை என்றும் வீடியோவில் பேசியிருக்கிறார். நக்கீரன் அம்பலப்படுத்திய நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ காட்சிகளும், அந்த ரகசியவீடியோவை எடுத்த ஸ்ரீநித்ய தர்மானந்தா என்கிற லெனி னின் பேட்டியும்தான்நித்யா னந்தாவை பேச வைத்திருக் கிறது.

இந்நிலையில், நக்கீரன் வாசகர்களிடம் தொடர்ந்து பேசி வரும் லெனின் ஆசிரமரகசியங்களை விரிவாக விளக்கி னார். ""சென்னையில் கறையான் மருந்து அடிக்கும்நிறு வனத்தைத் தொடங்கினேன். என் சொந்த சம்பாத்தியத்தில் தனி ஃப்ளாட்வாங்கினேன். எம்.எல்.எம் எனப்படும் சங்கிலித் தொடர் பிசினஸ் மூலம் வீ-கேன்காந்தப்படுக்கை பிரபலமானது. 20 லட்சம் பேர் அதில் பணம் கட்டினர்.தங்களுக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்து விட்டனர். நானும் அதில்உறுப்பினராகி பணம் கட்டினேன். வீ-கேன் நிறுவனத்திடம் ஏமாந்த பல இலட்சம்பேரில் நானும் ஒருவன். என் மேல் இது சம்பந்தமாக புகாரோ, வழக்கோ கிடையாது.
ஆன்மீகத்தில் மனம் நாட்டமாக இருந்ததால், நித்யானந்தாவின் பிரசங்கங்கள்நடக்கும் இடத்திற்கு நேரில் போய் அவர் பேச்சைக் கேட்பேன். இந்துமதத்திற்கு நானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரது பேச்சைக்கேட்கும்போது ஏற்பட்டது. அவர் நடத்தும் மெடிட்டேஷன் கிளாசுக்குப் போவேன். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லவேண்டும். நித்யானந்தர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் ரொம்பவும் எளிமை யானவை. அந்தப் பயிற்சிகளுக்கு நல்ல பலன் இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அவரால் ரொம்பவேஈர்க்கப்பட்டதால், பிசினசை ஓரங்கட்டி வைத்துவிட்டு, சொந்தக் காருடன்நித்யானந்தர் ஆசிரமத்திற்குப் போய்ச் சேர்ந் தேன்.


அவருடைய முக்கிய சீடராக ஆகினேன். சொன்னால் நம்பமாட்டீங்க. குஜராத்முதல்வர் நரேந்திர மோடி ஒரு முறை ஆசிரமத்துக்கு வந்தப்ப, நித்யானந்தர்காலில் விழுந்ததோடு என் காலிலும் விழுந் தார். அந்தளவுக்கு என்னை ஆசிரமத்தில் முக்கிய இடத்தில் நித்யா னந்தர் வைத்திருந்தார். ஆசிரமத்தில்ஆன்மீகப் பணிகளை நிறைவேற்று வதற்காக நிறைய பிரிவுகள் உண்டு. அதில்,சி.டி-புத்தகங்கள் ஆகிய வற்றைத் தயாரித்து வெளியிட்டு, வெளிநாடுகள் வரைஅனுப்பும் முக்கிய பொறுப்பைக் கொடுத்தார்.
தமிழகத்திற்கு நித்யா னந்தர் வரும்போதெல்லாம் அவருக்கு நான்தான் கார் ஓட்டுவேன். அவரைக் கடவுளா நினைச்சிருந்த எனக்கு இது பெரும் பாக்கியமாகஇருந்தது. நித்யானந்தரை சந்திக்க தமிழகத்து வி.ஐ.பி.கள், வி.வி.ஐ.பி.கள், சினிமா நடிகர்கள்-நடிகைகள் யார் வந்தாலும் நான் பக்கத்தில் இருப்பேன். என்மீது அவருக்கு ரொம்ப அன்பு உண்டு. அந்த அன்பு, ஆசிரமத்தில் இருந்த ஒருசிலருக்கு எரிச்சலையும் பொறாமையையும் உண் டாக்கியிருந்தது. எந்தநிர்வாகமாக இருந்தாலும் அதில் பாலிடிக்ஸ் இருக்கும். ஆசிரமத்திலும்பாலிடிக்ஸ்தான். அங்கே இருந்த 2 பேர் என்னை அவமரியாதை செய்தாங்க. அவங்கசெயல்பாடு பிடிக் காம ஒரு கட்டத்தில், ஆசி ரமத்தைவிட்டு வெளியேபோயிடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த விஷயம் நித்யானந்தருக்குத் தெரிந்துவிட்டது.
"தர்மா... நான் இருக்கிறேன். நீ ஓன்றும் கவலைப்படாதே' என்று சொல்லி என்னைசமாதானப் படுத்தினார். ஆசிரமத்திலிருந்து வெளியேற நினைத்த என்னை அங் கேயேதங்க வைத்தார். கடவுளோட விளையாட்டைப் பார்த்தீங்களா? அன்னைக்கே என்னை அவர்போகச் சொல்லியிருந்தால் இந்தளவுக்கு அவர்கையும் களவுமா மாட்டியிருக்கமாட்டார். கடவுளே என்னை அனுப்பி வச்சி, இதையெல்லாம் முடிச்சிட்டுஆசிரமத்திலிருந்து வெளியே வாடா தர்மான்னு சொன்ன மாதிரி நினைக்கிறேன். நான்நித்யானந்தா வைத்தானே கடவுளா நினைச்சிருந்தேன். அவரை அம்பலப்படுத்துற வேலையை கடவுள் எனக்கு ஏன் கொடுக்கணும்?
நித்யானந்தாவின் பயிற்சிகள் பலனளிப்பதாகவும் பவர்ஃபுல்லாகவும் இருந்தது.ஆனா, அந்த பவர் அவருக்கு 3, 4 வருஷமாகவே குறைந்துவிட்டது. அதை நான் மெல்லமெல்ல புரிஞ் சுக்கிட்டேன். அதை எல்லோருக்கும் ரஞ்சிதா வீடியோ மூலமாநித்யா னந்தரே புரிய வச்சிட்டார். அவருக்குப் பவர் இருந்திருந்தா,உண்மையான சக்தி உடையவரா இருந்திருந்தா, அவரோட பெட்ரூமில் அவரையே பார்த்துக்கிட்டிருந்ததே அந்த கேமரா, அதை உடனடியா கண்டுபிடிச்சி,அப்புறப்படுத்தியிருப்பாரே! அந்த பவர் அவர்கிட்டே இல்லாமப் போயிடிச்சி.
நாங்க அவர் ரூமில் வைத்தது லேட்டஸ்ட் டெக்னிக் கேமரா. அதில் வாய்ஸ்ரெகார்டிங் இல்லாதபடி செட்டப் செய்தோம். ஏன்னா, வாய்ஸ் ரெகார்டிங் ஆனில்இருந்தால், செல்போன் அழைப்புகள் வரும்போது, கேமராவிலிருந்து டுர்ர்ர்..னு ஒரு சத்தம் வரும். அதை வச்சு நித்யானந்தர் கண்டுபிடிச்சிடுவாருங்கிறதால வாய்ஸ் ரெகார்டிங் இல்லாம எடுத்தோம். அந்தக் கேமராவோட விசேஷம் என்னன்னா, அறையில் ஏதாவது அசைவுகள் இருந் தால் வீடியோ எடுக்கும். அசைவுகள் இல்லாட்டாஆஃப் ஆயிடும். வெளி நாட்டிலிருந்து ஸ்பெஷலா வரவழைச்ச கேமரா.
அந்த வீடியோ காட்சிகளை முழுசா பார்த் தவங்களுக்கு ஒரு விஷயம் தெரியும்.சோம்பேறியான நித்யானந்தர் சும்மா படுத்தே கிடக்கும்போது, கேமரா அப்படியேஸ்டில் போல இருக்கும். ரஞ்சிதாவை நித்யானந்தர் கட்டிப் பிடிக் கும்போதும்,கால்களைத் தூக்கிப்போடும்போதும் கேமரா படம் பிடிக்கும். இத்தனைடெக்னிக்குகள் உள்ள கேமராவை அவர் அறைக்குள்ளேயே வச்சி ருந்தும், அவரால்அதை ஏன் முழுசா உணர முடியலை? அவரிடமிருந்த சக்தி என்னவானது?
தன்னுடைய போதனை களுக்கு எதிராக தானே நடந்துகொண்டால் சக்தி எப்படிஇருக்கும்? நித்யா னந்தர் எங்களுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கும் போது, பாலுறவு என்பது சந்நியாசி வாழ்க்கைக்கு எதிரானது, அது கூடாதது என்று பல மேற்கோள்களைக் காட்டிப் பேசுவார். ஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளை அடக்கி ஆளவேண்டும் என்று சொல்வார். அவ ருடைய வார்த்தைகளை கடவுள்வாக்காக நினைக்கும் நாங்கள் அப்படியே நடந்து கொள்வோம். அதிலும், அவர் கிழித்தகோட்டை நான் தாண்டியதில்லை.
ஆசிரமத்தில் பணி விடை செய்பவர்களில் ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டாலேகண்டிப்பார். நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை சொல்றேன். ஆனா இதை நான் நேரடியா பார்க்கலை. ஆசிரமத்தில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங் கன்னு தெரிஞ்சதும் அந்தப் பெண்ணை நித்யானந்தர் கூப்பிட்டு பல பேர் முன்னிலையில் ரொம்ப தரக்குறைவான வார்த்தை களால்திட்டியிருக்கிறார். அதே போல ஆசிரமத்தில் இருந்த இன்னொரு பெண், சந்நியாசத்தை விட்டுட்டு குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி, கல்யாணம்பண்ணிக்கிட்டு வாழலாம்னு நினைச்சது. அந்த பெண் ணுக்கும் ஆசிரமத்தில் இருந்த பையனுக்கும் நட்பு இருந்தது. அவங்க கல்யாணம் பண்ணிக்க முடிவுபண்ணி, ஆசிரமத்தை விட்டு வெளியேறி, கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதற்கப் புறமாஆசிர்வாதம் வாங் குறதுக்காக நித்யானந்தர் கிட்டே வந்தாங்க. அவர்மறுத்துட்டாரு. அவர்கூட இருந்த மற்ற சந்நியாசி களெல்லாம் அந்தப் பெண் ணைரொம்ப கேவலமா திட்டுனாங்க.
"நீ நாசமா போயிடுவே.. உன்னையெல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா? நீசேர்ந்து வாழ மாட்டே... வாழாவெட்டி யாயிடுவே' என்று சாபம் விட்டனர். காவிகட்டி யவர்கள் சாபம் விட்டால் அது பலிக்கும் என்பது விஸ்வாமித்திரர்காலத்தி லிருந்து சொல்லப்படுது. அப்படி இருக்கும்போது, இவர்களின் சாபம்அந்தப் பெண்ணையும் பையனை யும் என்ன பாடுபடுத்தப் போகுதோன்னு பயந்தேன்.இருந்தாலும், சந்நியாச வாழ்க்கையில் இருப்பவர்கள் ரொம்ப கட்டுப்பாடாஇருந்தால்தான் ஆண்டவனை அடைய முடியும்ங்கிறதாலதான் நித்யானந்தர் இத்தனை கெடுபிடியா நடந்துக்கிறார்னு நம்பி னேன்.
நித்யானந்தர் தன்னோட ஆசி ரமத்தில் உள்ள பெண்களை ஆரத்தழுவி தடவுவார்.தன்னுடைய முகத்தை அவர்களின் முகத்தோடு வைத்து, மென்மையாகத் தேய்ப்பார்.வருடுவார். இதனால் , அவருடைய பவர் தங்களுக்கு இடம்மாறுவதாக பெண்கள் நினைப்பார்கள். அந்தத் தழுவுதலின்போது, எந்தப் பெண்ணின் உடலாவது சிலிர்த்துவிட்டால், "நீ இன்னும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவில்லை. நீ சந்நியாசவாழ்க்கைக்கு பொருந்தவில்லை' என்று கோபமாகச் சொல்வார். இதெல்லாம் உண்மையென்றே நம்பினோம்.
ஆசிரமத்தில் இருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் ரொம்பகட்டுப்பாடானவங்க. அர்ப்பணிப்போடு நடந்துக்கிறவங்க. சந்நியாச வாழ்க்கைக்குவிரோதமா இருக்கமாட்டாங்க. 2009-ம் வருசம் கல்பதரு புத்தகத்தை வெளியிடும் பொறுப்பை சென்னையில் தங்கியிருந்து செய்தேன். ராயப்பேட்டையில் தான்பிரிண்டிங். வேலை நடந்துக்கிட்டி ருந்ததால், நவம்பர் மாதம் 13-ந் தேதிமாலையில், பெசன்ட் நகர் பீச்சில் என் காரில் உட்கார்ந்திருந்தேன். நான்இப்ப சொல்லப்போறது உங்களில் பலராலும் நம்ப முடியாத விஷயம். ஆன்மீகஉலகத்தில் இருப்பவர்களுக்குத்தான் அது தெரியும்.
நான் முழு சந்நியாசியாக வாழ்ந்தவன். பொதுவாக மனிதர்களுக்கு விடியற்காலை 4மணியிலிருந்து 6 மணிக்குள்தான் கனவுகள் அதிகமாக வரும். சந்நியாசவாழ்க்கையில் இப்படிப்பட்ட கனவுகளை அனுமதிப்பதில்லை. அத னால்தான் 4மணிக்கெல்லாம் எழுந்து தியானம் செய்துவிட்டு, பச்சைத்தண்ணீரில்குளித்துவிடுவோம். உடல்ரீதியாக எந்த தவறும் நடந்துவிடக்கூடாதுஎன்பதற்காகத்தான் இதைச் செய்வோம். பிரம்மச்சர் யத்தைக் காப்பாற்றுவதில்அத்தனை அக்கறையுடன் இருக்கவேண்டும். அன் றைக்கு மாலை 7 மணிக்கு காவிஉடையில், காரில் உட்கார்ந்தபடி மெடிடேஷன் செய்துகிட்டிருந்தேன். அப்போதுஎன் நினைவில் அந்த காட்சி வந்தது.

நித்யானந்தர் பல பெண்களோடு இருப்பது போன்ற காட்சி அது. நான்அதிர்ச்சியாகிவிட்டேன். நடக்கின்ற ஒன்றுதான் , தியான நிலையில் எங்கள்மனக்கண்ணுக்குத் தெரியும். அந்தக் காட்சியில் எனக்கு முகம் தெரிந்த ஒருபெண்ணும் இருந்தார். அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு, இந்த நினைவு பற்றிசொல்லி, "உனக்கும் நித்யானந்தருக்கும் தொடர்பிருக்கிறதா? ஆம்- இல்லை இந்தஇரண்டில் ஒரு பதில் சொல்லு'ன்னு சொன்னேன். அந்தப் பெண், சிறிது நேரம்மௌனமாக இருந்துவிட்டு பிறகு "ஆமாம்'னு சொன்னாள். ஆசிரமத்தில் முழு அர்ப்பணிப்போடு இருந்த நான் அந்த நொடியிலேயே நொறுங்கிப் போனேன். மேலும் மேலும் விசாரித்த போது அதிர்ந்துபோனேன்.
படிப்பு, தொழில், சொத்து எல்லாவற்றையும் விட்டுட்டு, முழு வாழ்க்கை யையும்இந்த ஆசிரமத் திற்கே அர்ப்பணித்து விட்ட வன். என்னைப்போல பல் லாயிரம் பேர்நித்யானந் தருக்காக எதையும் விட்டு விட்டு வருகிறார்கள். பல லட்சம் பேர்தங்கள் சொத்துகளை இங்கே கொண்டு வந்து கொட்டு கிறார்கள். ஆனால் இங்கேஆன்மீகம் என்ற பெயரில் அக்கிரமங்கள் நடப்பதைப் பார்த் துக் கொண்டுசகித்துக் கொண் டிருக்க முடிய வில்லை. பணக்கார வீட்டைச் சேர்ந்த குடும்பப் பெண்கள், திரு மணமாகாத அழ கான பெண்கள்இவர்களையெல் லாம் தந்த்ராஸ் என்கிற தனக்குத் தெரிந்த கலையின் மூலம் மயக்கிவிடுவார் நித்யா னந்தர்.
இப்படி அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் நூற்றுக் கணக்கில் இருக்கி றார் கள்.இதை இப்படியே விட்டால் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் பாதிப்புஏற்படும். செக்ஸ் பற்றி நித்யானந்தர் பேசு வது ஒன்று, நடப்பதோ வேறொன்று.உலகம் முழுவதும் செல்வாக்குடன் உள்ள இவரால் ஏற்படும் சீரழிவு,ஆன்மீகத்திற்கும் இந்துமதத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற் படுத்தும்என்பதால்தான் இதை அம்பலப்படுத்த முடிவெடுத்தேன்.
2009-ம் வருடம் நவம்பர் 13-ந் தேதி, தியான நிலையில் எனக்குத் தெரிந்ததை,உலகத்திற்கு படம்பிடித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக 1 மாதம் ப்ளான்போட்டு செயல்பட்டேன். எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளநீங்கள் ஆர்வமாக இருப் பீர்கள்.
அது 48 மணி நேர புராஜக்ட். அந்த 48 மணிநேரமும் என்ன நடந் தது என்பதை உங்களுக்கு அப்புறம் சொல்கிறேன்.
இப்போது முக்கிய மான ஒரு விஷயத்தை சொல்லவேண்டும். நக்கீர னில் போன முறைநான் என்ன சொல்லியிருந் தேனோ அதை அப்படியே கமிஷனரிடம் புகாராகக்கொடுத்திருக்கிறேன்.


இந்தப் புகாருக்குப் பதிலளிக்க வேண்டிய நித்யானந்தரின் ஆட்கள் என் மேல்அபாண்ட பழிகளை சுமத்தி, விவ காரத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்.நித்யா னந்தரும் ஒரு வீடியோ மூலமாக விளக்கமளித்திருக் கிறார்.அந்த வீடியோவில் அவர் முகம் களையிழந்து வழக்க மான சிரிப்பை தொலைத்து விட்டதை டி.வி.யில் பார்க்க முடிந்தது.



நடந்ததற்கு விளக்கம் தராமல், "சட்டரீதியாக எந்தத் தவறையும் நானோ தியானபீடமோ செய்ய வில்லை' என்கிறார். "இந்தக் குற்றச் சாட்டுகளுக்கும்வதந்திகளுக்கும் பின்னால் இருக்கும் காரணம், அவர்களின் மனஅமைப்பு,இவைகளில் இருக்கும் பொய்கள் அனைத்தையும் கண்டறிய எல்லா உண்மைகளையும்திரட்டிக் கொண்டிருக்கிறோம்' என்கிறார். "இது போலியான வீடியோ என்றும்,எப்போது வீடியோ எடுக்கப்பட்டது என்ற நேரம்-தேதி இல்லை என்றும்' அவர்தரப்பி லிருந்து செய்திகள் வெளியிடப் படுகிறது.இந்த வீடியோ கடந்த டிசம்பர் 23, 24, 25 தேதிகளில் எடுக்கப்பட்டது. அந்ததேதியையும் நேரத்தையும் வெளியிட்டால், அந்த சமயத்தில் யார் உடனிருந்தார்கள் என்பதைக் கண்டு பிடித்து அவர்களை ஆசிரம நிர்வாகம் என்னசெய்யுமோ என்ற தயக்கத்தில்தான் அதை எடுத்து விட்டு வெளியிட்டோம். இப்போது, வாசகர்களுக்காக அந்த தேதியும் நேரமும் உள்ள வீடியோ காட்சியைத்தந்திருக்கிறோம். வீடியோவில் உள்ள நேரமும், நித்யானந்தரின் அறையில் உள்ளகடிகாரத்தில் உள்ள நேரமும் ஒன்றாக இருப்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும். இதிலிருந்தே இது போலி அல்ல என்பது நிரூபணமாகும். வீடியோ வெளியிடகாலதாமதம் ஆனதற்குக் காரணம் ஒரு சிலரின் பாதுகாப்புக் காகத்தான். இதுகுறித்தும் பிறகு விளக்கமாகச் சொல்கிறேன்
ரஞ்சிதாவுடன் நித்யானந்தர் இருப்பது போலியானது என்கிறார்கள். அந்த வீடியோகாட்சி, ரஞ்சிதாவுடன் முடிந்து விடவில்லை. நித்யானந்தரின் செகரட்டரிகோபிகா வும் அவருக்குப் பணிவிடை செய்து, தொட்டுப் பார்க்கும் காட்சிகளும்இருக் கின்றன. அதையும் நீங்களே பாருங்கள். வீடியோவில் இருப் பதுநித்யானந்தர் இல்லை என்றால், அவரது பர்சனல் செகரட்டரி வேறு யாருக்குஇந்தளவு பணிவிடை செய் கிறார்? ஆசிரமத்தில் உள்ள செகரட்டரி கோபிகா இன்னொருவருடன் இப்படி இருக்க முடியுமா? இது போலியான வீடியோ அல்ல என் பதற்குஆதாரமாக நித்யானந்தருக்கு ரஞ்சிதா பொடுகு மருந்து தடவி பேன் பார்த்துவிடுவதை யும், காவி உடையை அகற்றிவிட்டு ஆயில் மசாஜ் செய்து விடுவதையும்பாருங் கள்.




தனது ஆசிரம வாசிகளிடம், தன் முதுகில் பெரிய மச்சம் உண்டு என்று நித்யானந்தர் அடிக்கடி சொல்வார். அந்த பெரிய மச்சமும் இந்த வீடியோ காட்சிகளில்இருப்பது தெரியும். போலீஸ் நித்யானந்தரை கைது செய்து காவி உடையைகழட்டினால் இந்தப் பெரிய மச்சம் அவர்களுக்கும் தெரியும். இந்தகாட்சிகளெல்லாம் எப்படி எடுக்கப்பட்டது, இன்னும் யார், யார்நித்யானந்தருடன் இருந்தார் கள் என்பதை இனி சொல்கிறேன்...''

-என்று விளக்கமாக சொன்ன லெனின் என்கிற தர்மானந்தா, அந்த 48 மணி நேர சம்பவத்தை விளக்குவதற்குத் தயாராகிவிட்டார்.

2 comments:

  1. Kalakuringalae Talai. Daily 2 times unga blog aai check pannuna taan yenakku thukkam(sleep) varuthu. Kalakunga. Keep continue your good work.

    ReplyDelete
  2. Please post the latest article from Nakkheeran. Thanks in advance.

    ReplyDelete