shockan.blogspot.com
விதி வலியது. இதை முழுமையாக நம்புகிறவர் சரவணபவன் அண்ணாச்சி.
சரவணபவன் அண்ணாச்சியியை எங்கெங்கோ இழுத்துச் சென்ற ஜாதகமும் ஜோதிடமும் இப்போது அவரை ரெஜினா என்ற இளம்பெண்ணிடம் இழுத்துச் சென்றிருக்கிறது.
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலையில் செஷன்ஸில் ஆயுள் தண்டனை பெற்று, மறுபரிசீலனை கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கும் அண்ணாச்சி இப்போது ஜாமீனில் வெளியிலிருக்கிறார்.
அண்ணாச்சி பற்றிய புதிய காதல் கல்யாண செய்திகளோ சென்னை அசோக்நகர் தொடங்கி நாசரேத் மூக்குப்பீறி வரைக்கும் வெள்ளை றெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன.
அண்ணாச்சியின் மன்மத இதயத்தில் இப்போது பாய்ந்திருப்பதாகக் கூறப்படும் ரெஜினா வைப் பற்றி விசாரித்தோம்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்துக்கு பக்கத்தில இருக்கிற மூக்குப்பீறி என்ற கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த ரெஜினா. சாந்த சொரூபி. அண்ணாச்சியின் அசோக்நகர் ஹோட்டலில் சூப்ரெண்டாக வேலை பார்த்தவர். ரெஜினாவின் குணநலன்கள் அந்த ஹோட்டலின் மேனேஜரான சேதுவுக்கு ரொம்பவே பிடித்துப்போனதாம். ரெஜினாவின் ஜாதகத்தை கேட்டு வாங்கி, அண்ணாச்சியின் ஆஸ்தான ஜோதிடரும் மாஜி கிருத்திகா வின் அண்ணனுமான காசியிடம் கொடுத்து "கணிக்க'ச் சொன்னாராம்.
""இப்படியொரு சீதேவியின் ஜாதகத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லையே... இந்தப் பெண்ணுக்கு கணவனாக வருபவன் இந்தத் தரணியை ஆளும் தகுதியுடையவனாவான். ஆகா... ஆகா...'' என்றாராம் ஆஸ்தான ஜோதிடர் காசி. ஜோதிடர் சொன்ன வார்த்தைகளை மாற்றமே இல்லாமல் அண்ணாச்சியின் காதுக்குக் கொண்டு போனார் மேனேஜர் சேது.அசோக் நகரில் சேதுவுக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டில் தான் ரெஜினா- அண்ணாச்சி முதல் சந்திப்பு நடந்திருக்கிறது.
""வாம்மா ராஜயோக ஜாதகக் காரி வா. பெயர் தெரியாத ஒருத்த னுக்காக உன் ராஜயோக வாழ்க் கையை நீயேன் தியாகம் செய்ய வேண்டும். நீயும் நானும் சேர்ந்தால் நாம் இருவருமே உலகத்தை ஆள முடியுமே... அந்த தெய்வாம்சம் பொருந்திய ராஜயோகத்தை நீ எனக்குக் கொடும்மா...'' என்ற கெஞ் சல்களோடு லட்சங்களை ரெஜினா வின் காலடியில் கொட்டி பாதாபி ஷேகம் செய்தாராம் அண்ணாச்சி.
அதுவரை அந்த அசோக் நகர் வீட்டில் இருந்த மேனேஜரின் குடும்பம் அவசர அவசரமாக ஊருக்கு அனுப்பப் பட்டு அதில் அண்ணாச்சியும் ரெஜி னாவும் குடும்பம் நடத்தினார்களாம். இத்தனைக்குப் பிறகுதான் தந்தை யின் புதிய காதல் வாழ்க்கை, அண்ணாச்சியின் மகன் சிவ குமாருக்கு தெரிந்திருக்கிறது.
உடனே டிஸ்மிஸ் செய் யப்பட்டார் ரெஜினா. கூடவே ஹோட்டல் பணத்தை கையாடல் செய்ததாக ஒரு புகாரும் கொடுக்கப்பட்டு, ரெஜினாவை கைது செய்வதற் கான ஏற்பாடுகளும் நடக்க... பதறிய அண்ணாச்சி, ரெஜினாவை சொந்த ஊரான மூக்குப்பீறிக்கு பக்கத்தில் உள்ள புன்னையடிக்கிராம பண்ணை வீட்டிற்கு கூட்டிச் சென் றார். அந்த நிலையில்தான் ரெஜி னாவின் குடும்பத்தினர் ""தாராள மாக அண்ணாச்சியோடு குடும்பம் நடத்து... ஆனால் அதற்கு முன்னால் முறைப்படி உன்னை அண்ணாச்சி மனைவியாக் கிக்கொள்ள வேண்டும்'' என்று கண்டிஷன் போட்டுவிட் டார்கள்.
""சரி... பதிவுத் திருமணம் செய்து கொண்டு விடலாம்... புறப்படு'' -ஒரு காரில் அண்ணாச்சியும் இன்னொரு காரில் ரெஜினா குடும்பமும் நாசரேத் ரிஜிஸ்தர் அலுவலகத்திற்கு வந்தனர்.அங்கே அண்ணாச்சி யின் மகன் சிவகுமாரின் அடியாள் படை தயாராக இருந்தது. உயிர் பிழைத்தால் போதுமென்று அண்ணாச்சியும் ரெஜினா குடும்பமும் பின்வாங்கி ஓடி ஒளிந்திருக்கிறார்கள். ""வெகு விரைவில் அந்த ராஜயோக பெண்ணை மனைவியாக்கிக் கொள்வார் அண் ணாச்சி. பிறகு தரணியாள்வார்'' என்கிறது அண்ணாச்சியின் ஜோதிட வட்டாரம்.
அண்ணாச்சி மீது அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இதெல்லாம் உண்மைதானா? ரெஜினாவின் சொந்த ஊரென சொல்லப்படும் நாசரேத் மூக்குப்பீறி கிராமத்தில் இறங்கினோம்.
""இங்கே அப்படி ஒரு சம்பவம் நடக்கலையே. இந்த ஊரில் பிறந்த எந்தப் பெண்ணும் அண்ணாச்சி ஹோட்டலுக்கு வேலைக்குப் போகலை. நாசரேத்தில் திருமணம் நடக்க இருந் தாலோ, பயந்து ஓடி இருந்தாலோ எங்களுக்கு விஷயம் தெரியாமல் இருக் காதே'' என்றார்கள் மூக்குப் பீறியின் முன்னாள் -இந்நாள் ஊராட்சித் தலைவர்கள்.மூக்குப்பீறி கிராமத்தின் முழு விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ஆலிஷ் என்ற மூதாட்டியிடம் விசாரித்தோம். ""இங்கே பிறந்த ரெஜினாங்கிற ஒரு பொண்ணு மெட்ராஸ்ல டீச்சரா இருக்கா. அவளுக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கே... அந்தப் பெண்ணாக இருக்க முடியாதே'' என்றார்.நாசரேத் காக்கிகளும் இந்தச் செய்திகளை முற்றாக மறுத்தார்கள்.
பக்கத்து ஊரான புன்னையடிதான் அண்ணாச்சியின் பூர்வீகம். அங்குதான் வனதிருப்பதி கோயிலைக் கட்டியிருக்கிறார் அண்ணாச்சி. கோயில் ஊழியர்களிடம் விசாரித்தோம்.""வாராவாரம் கோயிலுக்கு வரும் அண்ணாச்சி ரெண்டு வாரமாக வரலை. மற்றபடி வேற எதுவும் தெரியலையே... ஏதாச்சும் பிரச்சினையா?'' -நம்மையே திருப்பிக் கேட்டார்கள் அண்ணாச்சி கோயில் ஊழியர்கள்.
No comments:
Post a Comment