Thursday, March 25, 2010

நித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்பட்டது?


shockan.blogspot.com

தமிழ் சினிமா நட்சத்திரங்களை வலை வீசிப் பிடித்து நித்யானந்தாவின் சிஷ்யர்களாகவும், சிஷ்யைகளாகவும் மாற்றியது முன்னாள் நடிகை யும், இந்நாள் சாமியாரினியுமான ராகசுதாதான்.... என எல்லோருமே சொல்கிறார்கள். கடந்த இதழில் நடிகர் விக்னேஷ் நம்மிடம் நித்யானந்தாவுடனான நேரடி அனுபவங்களை பகிர்ந்துகொண்டபோது கூட "ராகசுதாதான் சாமியாரின் பயிற்சி முகாமிற்கு என்னை அழைத்தார்' எனச் சொல்லியிருந்தார். கவுண்டமணியைக் கூட ராகசுதா அழைத்தபோது அவர் போக மறுத்துவிட்டார்.

காவியோடு அரிதாரம் பூசியவர்களை மிங்கிள் பண்ண வைத்த ராகசுதாவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டோம். செல் ஸ்விச்டு ஆஃப்பாகவே இருந்தது. ராகசுதாவின் அம்மாவும், நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையுமான நடிகை கே.ஆர்.சாவித்திரியிடம் பேசினோம்.

நித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்பட்டது?

ஒரு பத்திரிகையில் "கதவைத் திற காற்று வரட்டும்' என தொடர் எழுதி வந்தார் சாமி. அதை தொடர்ந்து படித்து வந்த என் மகள் ராகசுதா சாமி மீது மிகுந்த அபிப்ராயம் கொண்டாள். அவளுக்கு கால் வலி இருந்த போது.... ஹீலிங் எனப்படும் தொடு சிகிச்சை முறையில் சாமி குணப்படுத்து வதை அறிந்து சிகிச்சைக்காக பெங்களூரு போ னாள். சிகிச்சையில் குணமானாள். இதனால் சாமி மீது அவளுக்கு ரொம்பவே மதிப்பு ஏற்பட்டது. சாமியின் பிரம்மச்சர்யமும், மக்களுக்காக அவர் செய்யும் சேவைகளையும் பார்த்து தானும் சேவை செய்ய விரும்பியிருக்கிறாள். ஒருநாள்... காவி உடை யோடு, ருத்ராட்ச மாலையோடு திரும்பி வந்த போது அதிர்ச்சியாயிட்டோம். துறவறம் மூலம் மக் கள் சேவைக்கு அவள் தயாராகிவிட்டாள் என்றா லும் எந்த தாயாலும் தன் பிள்ளை துறவறம் மேற் கொள்வதை தாங்கிக்க முடியாதே? ஆனால் அவ ளின் மன உறுதியைப் பார்த்து சம்மதித்து அனுப்பி வைத்தேன். இப்படித்தான் அவள் அந்த ஆசிரமத் தில் சேர்ந்து பக்திமார்க்க சேவையில் ஈடுபட்டாள்.’

சினிமா நடிகைகளையெல்லாம் ராகசுதாதான் கேன்வாஸ் செய்து சாமியிடம் அழைத்துப் போனாராமே?

எல்லாரையுமே அவதான் கூட்டிட்டுப் போனாள்னு சொல்ல முடியாது. அப்படியே அவ கூட்டிப் போயி ருந்தாலும் நடிகைகளை அவ கூட்டிட்டுப் போனதுக்கு நல்ல நோக்கம் இருந்திச்சு. சினிமா நடிகைகள் குடும்ப வாழ்க்கை பிரச்சினை களிலும், மன உளைச்சலி லும் சில சமயம் தற்கொலை வரை போயிடுறாங்க. இதை தடுக்கணும், அவங்களுக்கு சாமி மூலம் கவுன்சிலிங் கொடுத்து மனக்குழப்பத்தை போக்கணும்னுதான் கூட்டிட்டுப் போனா. அசாதாரணமான சூழல் ஏற்பட்டா அதுக்கு அவ எப்படி காரணமாக முடியும்?

தங்களோட முக்கியத்துவம் குறையுமோன்னுதான் உங்க மகளும், உங்க மகளுக்கு வேண்டப்பட்ட ஒரு வரும் பிரச்சினையை ஆசிரமத் தில் உருவாக்கியதா ஒரு தகவல் வருதே?

என் மகள் வசதியா வாழ்ந்தவ. சினிமாவில் நல்ல வாய்ப்புகள் இருந்த நிலையில் அதெல்லாம் வேணாம்னு தூக்கிப் போட்டுட்டு சேவை செய்யப்போயிருக்கா. அதனால் அவளுக்கு பணமோ, செல்வாக் கோ, வசதியோ முக்கியமில்லை. ஆசிரமத்தில் ஒரு சின்ன அறை யில் தங்கிக்கிட்டு, கால்ல செருப்பு கூட இல்லாம நடந் துக்கிட்டு, வரிசை யில நின்னு தட்டுல சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கிட்டு, தன்னை வருத்திக் கிட்டு ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வர்றா. அப்பப் போ ஆசிரமத்துக்கு போய் அவளை பாக்கிறபோது பெத்த தாயான என் மனசு படுறபாடு எனக்குத்தான் தெரியும். ஆனாலும் ஆன்மிகம் அவளுக்கு நிம்மதியை தருவதால் என்னோட வேதனையை பொறுத்துக்கிட் டேன். அப்படியிருக்க... அவ ஏன் வேண்டாத வேலை யில் ஈடுபடப்போறா? என் மகள் பக்தி பிரசங்கங் களுக்கு போகும்போது சாமியார் தர்மானந்தா தேவை யான ஏற்பாடுகளை செய்வார். அந்த அளவில்தான் அவரோடு அவளுக்கு அறிமுகம். சாமிகூட வழக்கில் அந்த தர்மானந்தா பேரைத்தானே சொல்லிருக்கார். என் மகள் முழு ஈடுபாட்டோடு இருப்பது ஆன்மிக சேவையில் மட்டும்தான்.’’

நீங்க பலமுறை ஆசிரமத்துக்கு போய் வந்திருக்கீங்க. அப்பவெல்லாம் சாமியோட நடவடிக்கையில் உங்களுக்கு சந்தேகம் வரலையா?

“நான் மட்டுமில்ல... என்னோட இன்னொரு மகள் நடிகை அனுஷா, என் மகன், மருமகள்னு குடும்பத்தோட போயிருக்கோம். சாமி நேர்மையோடதான் இருந்தார்.இப்ப வந்திருக்க செய்திகளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

ஆர் என்ற எழுத்தில் தொடங்கும் நடிகைனு செய்தி வந்தப்போ எங்களுக்கே அதிர்ச்சியா இருந்திச்சு. ஆனா "நக்கீரன்'ல அந்த நடிகை யார்னு எழுதின பிறகு நிம்மதி வந்திச்சு. இருந்தாலும் அந்த காட்சிகளையும், செய்திகளையும் பார்த்த பக்தர்களும், மக்களும் என்ன அதிர்ச்சியான மனநிலை யில் இருந்தாங்களோ... அதே மனநிலைதான் எனக்கும் இருக்கு.

இந்த பிரச்சினைகளுக்குப் பிறகு ராகசுதா உங்களிடம் பேசினாரா?

இரண்டு தடவை பேசினாள். ‘"நான் பாதுகாப்பா இருக்கேன். கவலைப்பட வேணாம்'னு சொன்னாள். வேறெதுவும் பேசல.

நித்யானந்தாவின் பெங்களூரு ஆசிரமத் தில் தொடர்ந்து இருக்கப் போகிறாரா? அல்லது நித்யானந்தா மீது அதிருப்தி தெரிவித்தாரா?

சாமியார் பற்றி எதுவும் தெரிவிக்கலை. இருந்தாலும் ‘"நக்கீரன் மூலமா நான் விடுற ஒரு கோரிக்கை.... மகளே... நீ ஆன்மிக வாழ்க்கையைத் தொடர விரும்பினால் தொடர்ந்து போ. ஒரு வேளை நீ குடும்ப வாழ்க்கைக்கு திரும்ப விரும்பினா... வா! ஒனக்காக இந்த பெத்தமனம் காத்துக்கிட்டிருக்கு' -என்று உருக்கமாகப் பேசினார் கே.ஆர்.சாவித்திரி.

பெங்களூரு நித்யானந்த ஆசிரம வட்டாரங்களில் ராகசுதா குறித்து நாம் விசாரித்தோம்.

""கால் வலிக்காக ஹீலிங் சிகிச்சை பெறத்தான் ராகசுதா வந்தார். இன்னும் கூட முழுமையாக அவர் குணமடையவில்லை. அவருக்கு சேவை செய்ய தனி ஆள் இருக்கு. வேற யாருமா இருந்தா இந்நேரம் சாமி துரத்தி விட்டிருப்பார்.

ஆனா... ராகசுதா நடிகை என்பதால் அவர் மூலம் சினிமா தொடர்புகளை பிடிக்கத்தான் சாமியார் ராகசுதாவை ஆசிரமத்திலேயே வச்சிருக்கார்'' என்றார்கள்.

No comments:

Post a Comment