""மான்னிச்சிருடா தர்மா... உன்கிட்டே மன்னிப்பு கேக்கி றண்டா தர்மா... நான் உனக்கு எந்த விதத்திலும் ஹார்ம் பண்ண மாட்டேன். நானோ, தியானபீடமோ, தியானபீடம் சம்பந்தப்பட்டவர்களோ ஹார்ம் பண்ணமாட்டோம்னு எழுதிக் குடுக்குறோம்டா தர்மா.. ரிட்டனா எழுதித் தர்றேண்டா தர்மா...''
தான் சிக்கிக்கொண்டதும் நித்யானந்தர், தர்மானந்தா என்கிற லெனினிடம் செல்போனில் கெஞ்சியதை கடந்த இதழில் நாம் வெளியிட்டிருந்தோம். நித்யானந்தர் கையெழுத்திட்டுக் கொடுத்த அந்தக் கடிதம் இதோ.. .. ..
இதை கவனிப்போர் யாராகினும் அவர்களின் பார்வைக்கு... ..
பரமஹம்ச நித்யானந்தா (ஸ்ரீநித்யானந்த சுவாமி) என்கிற நான், ஸ்ரீநித்ய தர்மானந்தா (லெனின் கருப்பணன் என முன்பு அறியப்பட்டவர்) என்கிற இவர் பொறுப்பும் அர்ப் பணிப்பும் உள்ள சீடர். நித்யானந்த தியான பீடத்திற்கு தன்னால் இயன்ற அளவில் சிறப்பாக உழைத்தவர் என ஒப்புதல் அளிக்கிறேன்.
ஸ்ரீநித்யானந்த சுவாமி என்கிற நான், எனது செயலாளர் ஸ்ரீ நித்ய சதானந்தா மற்றும் நித்யானந்த தியானபீடத்துடன் இணைந்திருக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கிளைகளைச் சேர்ந்த சீடர்கள், பக்தர்கள், இதர உறுப்பினர்கள் உள்ளிட்டோரை இந்தக் கடிதத்தில் "நாங்கள்' என்று குறிப்பிட்டுள்ளோம்.
"நாங்கள்' ஸ்ரீநித்ய தர்மானந்தாவுக்கு (லெனின் கருப்பணன் என அறியப்பட்டவர்) ஒரு நோக்கத்துடனோ- நோக்கமில்லாமலோ, நேரடி யாகவோ-மறைமுகமாகவோ, உடல்ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ தற்போது அல்லது எதிர்காலத்திலோ எவ்வித துன்பமும் நாங்கள் தரமாட்டோம் என உறுதியளிக்கிறோம். அதற்கு, பரமஹம்ச நித்யானந்தா (ஸ்ரீநித்யானந்த சுவாமி) என்கிற நான் பொறுப்பாளி. அவருடைய பாது காப்புக்கும் நலத்திற்கும் நான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.
இதுதான் லெனினுக்கு நித்யானந்தர் தனது லெட்டர்பேடில் கையெழுத்திட்டு தந்துள்ள கடிதம். கடந்த பிப்ரவரி 23-ந் தேதி இக்கடிதத்தை அவர் எழுதியுள்ளார். நடிகை ரஞ்சிதாவுடன், தான் இருக்கும் வீடியோ காட்சிகள் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்ததும் போன் மூலம் லெனினிடம் கெஞ்சிய நித்யானந்தர், தன்னுடைய உண்மை சொரூபம் வெளிப்பட்டு விடக்கூடாது என்று எந்தளவுக்கு இறங்கி வந்திருக் கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. நித்யானந்தரின் சுயநலத்தைவிட உண்மை வலிமையாக இருந்துள்ளது என்பதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
No comments:
Post a Comment