Saturday, March 27, 2010

அண்ணன்-தம்பி மோதல்! கலைஞர் போட்ட போடு!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், இந்தியா முழுக்கவே உன்னிப்பாக பார்க்கப் படுகிற அரசியல் கட்சி, தி.மு.க. இப்பவும் அந்தக் கட்சி விவகாரத்தைத்தான் நேஷனல் மீடியாக்கள் உன்னிப்பா கவனிக்குது.''

""ஆமாப்பா... கலைஞரும் அவரோட குடும்பத்தினரும் அரசியலில் இருப்பதால் நேஷனல் மீடியாக் கள் எப்பவும் கண்காணிப்போட இருக்கும். கட்சியிலோ குடும்பத்திலோ சின்ன பிரச்சினை என்றாலும் அது ஹெட்லைன்ஸா ஹைலைட்டாவது வழக்கம்தானே! மத்திய அமைச்சரவை யில் தி.மு.க.வுக்கு போதிய அமைச்சர் பதவி ஒதுக்காமல் போனதும், இதன்பிறகு டெல்லியில் நடந்த பதவியேற்புவிழாவில் கலந்துக்காம கலைஞர் திரும்பி வந்ததும்கூட ஏதோ இந்தியாவுக்கே பாதகம் உண்டாக்குற விஷயம்போல தேசிய சேனல் களெல்லாம் முக்கியச் செய்தியா வெளியிட்டதே!''

""தி.மு.க விஷயம்னாலே வெறும் வாயை மெல்லும் மீடியாக்களுக்கு அவல் அள்ளிக் கொடுத்திருக்கிறார் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சரும் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் கலைஞரின் மகனுமான மு.க.அழகிரி.''

""தி.மு.க தலைவர் பதவி பற்றி அவர் சொன்னதைச் சொல்றியா?''

""ஆமாங்க தலைவரே... கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவரா ஏற்க மாட் டேன்னும், அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் வேறு யாருக்கும் இருப்பதாக நினைக்கவில்லைன்னும் அழகிரி சொல்ல, அது நேஷனல் இஷ்யூவா பத்திக்கிடிச்சி. தி.மு.க யுத்தம்னு இங்கிலீஷ் சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க.''

""அழகிரி சொன்னதில் எந்த தப்பும் இல்லையே? கலைஞரைப்போல பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் தி.மு.கவில் மட்டுமில்லை, இந்தியாவில் வேறெந்த கட்சியிலுமே இல்லையே.. அண்ணா காலத்திலேயே தி.மு.க.வை கிராமம் கிராமமா கஷ்டப்பட்டு வளர்த்தவர் கலைஞர்தான்ங்கிறதை சீனியர் கட்சிக்காரர்கள் இன்னமும் சொல்வாங்க. அண்ணாவைவிட ஃபீல்டு ஒர்க்கில் கலைஞர் ரொம்ப பாடுபட்டதையும், நெருக்கடி நிலை உள்பட எல்லா காலத்திலும் அவர் கட்சியைக் கட்டிக்காப்பாற்றி இன்றைக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியா மாற்றியிருப்பதை யும் எல்லாரும் ஒத்துக்குவாங்களே.. இத்தனை தகுதியும் ஆற்றலும் உள்ள கலைஞருக்குப் பிறகு, அதே திறமைகளுடன் இன்னொரு தலைவர் யார் இருக்கிறார். அதைத்தானே அழகிரியும் சொல்றார்?''

""தலைவரே.. அழகிரி சொல்வதை மேலோட்டமா பார்த்தீங்கன்னா இதைத்தான் சொல்றாருன்னு தோணும். ஆனா, அவர் எந்த நேரத்தில் சொல்லியிருக்கிறாருங்கிறதையும் கவனிக்கணும். செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதா கலைஞர் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருக்கிறார். அதாவது, அவர் முதல்வர் பொறுப்பை விட்டுவிடப்போகிறார். கட்சித் தலைவர் பதவி பற்றி அவர் எதுவும் சொல்லலை. முதல்வர் பொறுப்பிலிருந்து கலைஞர் விலகினால், அந்த பதவி மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும்ங்கிறதுதான் எதிர்பார்ப்பு. இந்த நிலையில், அழகிரி அம்பு விட்டிருப்பது ஸ்டாலினை நோக்கித்தான். ஸ்டாலினை ஏற்கமாட்டேங்கிறதைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக் கிறார்.''

""அவரோட கணக்கு என்ன?'''

""அழகிரியை சந்திக்கும் ஒரு சில மந்திரிகளும், கட்சி நிர்வாகிகளும், அண்ணே... நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி. தேர்தலில் எப்பவுமே உங்களுக்கு வெற்றிதான். நீங்கதான் தி.மு.க.வுக்கு தோல்வியே இல்லைங்கிற வரலாற்றைப் படைத்திருக்கீங்கன்னு உசுப் பேற்றி விட்டுக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்டே அழகிரி, நான் ஸ்டாலினை முதல்வரா ஏற்கமாட்டேன். வேற யார் வேண்டுமானாலும் முதல்வரா வரட்டும். ஸ்டாலின் வரக்கூடாதுன்னு சொல்றாராம்.''

""தம்பிக்கு அண்ணன் முட்டுக்கட்டை போடுவதற்கு என்ன காரணம்?''

""அந்த தகுதி தனக்குத் தான் இருப்பதா அழகிரி நினைக்கிறாராம். அழகிரி கிட்டே பேசும் சில மந்திரி களும் கட்சி நிர்வாகிகளும் ஸ்டாலின் கிட்டேயும் பேசிக் கிட்டிருக்காங்க. அங்கே ஒருவிதமாகவும் இங்கே ஒருவிதமாகவும் உசுப்பேத்தி விட்டுக்கிட்டிருக்காங்க. ஸ்டாலினிடம், உங்களைத் தான் மக்கள் ஏத்துக்கிட்டிருக் காங்க. அழகிரியை மக்கள் ஏத்துக்கலை. பெண்கள் கூட்டம் உங்களுக்குத் தான் அலைமோதுது. உங்களைத் துணை முதல்வர்னு சொன்னாலும் இப்ப நீங்க முதல்வராகவே ஆயிட்டீங்க. அவரு வெறும் கனவு கண்டுக்கிட்டிருக்கிறார்னு சொல்றாங்களாம்.''

""என்னப்பா இது... அண்ணனும் தம்பியும் ஒரே கட்சியில்தான் இருக்காங்க. இரண்டு பேருமே பொறுப்புகளில் இருக்காங்க. இருதரப்பிலும் உசுப்பேத்தி விட்டு, மோதிக்க விட்டால் கட்சியோட எதிர்காலம்தானே பாதிக்கும்? கட்சியோட எதிர்காலம் பாதிச்சா, இவங்களுக்கும்தானே பாதிப்பு?''

""இதைத்தாங்க தலைவரே நானும் அவங்ககிட்டே கேட்டேன். அட போப்பா... குடும்பத்திலே அண்ணன்- தம்பிக்குள்ளே சண்டை இருந்தாதான், நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்னு சொல்றாங்க. கூட்டணி பலம், நலத்திட்டங்கள்னு ஸ்ட்ராங்கா இருக்கும் தி.மு.க.வுக்கு, உள்ளுக்குள்ளேயிருந்து பூதாகர மான பிரச்சினைகள் வெடிக்கும்ங்கிறதுதான் எதிர்க் கட்சிகளோட எதிர்பார்ப்பு. நம்ம நக்கீரனில், ஸ்டாலின்- அழகிரி மீது ஜெ. வைக்கும் நம்பிக்கைன்னு அட்டைப் படக் கட்டுரையே வந்தது. எதிர்க்கட்சிகள் எதிர் பார்க்குறபடி தி.மு.க.வுக் குள் சர்ச்சைகள் வெளிப் பட்டிருக்குது.''

""ஆஸ்திரேலியப் பயண நேரத்தில், அழகிரி இப்படியொரு சர்ச்சையை கிளப்பி விட்டுப் போக என்ன காரணம்?''

""முடிசூடா மன்னர்னு ஸ்டாலின் பற்றி ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. ஸ்டாலினே தன்னை புரமோட் பண்ணிக்கிறதுக்காக பத்திரிகைகளை பயன்படுத்திக்கிறதா நினைக்கும் அழகிரி, இதற்கெல்லாம் செக் வைக்கணும்னு சொல்லிட்டுத்தான் தன்னோட கருத்தை வெளிப்படுத்தினாராம். அழகிரியோட கருத்துக்கு கலைஞர் எப்படி ரியாக்ட் பண்ணப் போறாருன்னு ஸ்டாலின் தரப்பு ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தது. பென்னாகரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிய கலைஞர் கிட்டே பத்திரிகையாளர்கள் இது சம்பந்தமா கேட்டாங்க.''

""அவர் சொன்ன பதிலை நானும் படிச்சேம்ப்பா... ... உங்களுக்கு பிறகு யாரையும் தலைவரா ஏத்துக்க மாட்டேன்னு அழகிரி சொல்லியிருக்கா ரேன்னு கலைஞர் கிட்டே கேட்டப்ப, அதைப் பற்றி அவரையே கேளுங் கன்னு பதில் சொன்னார். உங்களுக்குப் பிறகு யாருக்கும் திறமை இல்லை என்பதைப் போல அழகிரி சொல்லி யிருக்காரேங்கிற கேள்விக்கு, எனக்குப் பிறகுங்கிறது எந்த ஆண்டு முதல்னு எனக்கே தெரியாதுன்னு ஒரே போடா போட்டிருக்காரே!.''

""தி.மு.க தொண்டர்கள் என்ன சொல்றாங்கன்னு நான் சொல்றேன்... ... .. இந்த வயதிலும், முழுமூச்சா இருந்து சட்டமன்றக் கட்டிடத்தை கட்டி முடிக்கிறார். பென்னாகரம் தொகுதிக்குப் போய் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இப்படிப்பட்ட தலைவரை சந்தோஷமா வச்சுக்க இவங்க ளுக்குத் தெரியலையே... கலைஞருக்குப் பிறகுங்கிற பேச்சு இப்ப எதுக்கு வரணும்? பெரியார் வயதைவிடவும் அதிக வயது கலைஞர் வாழ்வார். இப்படிப்பட்ட சர்ச்சைகளை தனக்கேயுரிய ராஜதந்திரத்தோடு அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வரணும். வருவார்னு நம்பிக்கையோடு சொல்றாங்க.''

No comments:

Post a Comment