பின்னர் திருமணமாகி, விவாகரத்துமாகியது. இடையில் காஞ்சி மட விவகாரங்களில் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆக, அப்போதும் சினிமாதான் கைகொடுத்தது. சில காலம் ஒதுங்கியிருந்தவருக்கு, பிரகாஷ் ராஜ் ஆதரவில் கிடைத்த வாய்ப்புதான் மொழி. அவரது பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது அந்தப் படத்தில். இப்போது ரேவதி இயக்கும் யாதுமாகி நின்றாய், பாரதிராஜாவின் தெற்கத்திப் பொண்ணு தொடர்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கூடவே தனது நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். சென்னை தவி, காஞ்சிபுரத்திலும் நடனப் பள்ளி நடத்துகிறார் சொர்ணமால்யா. லோக்கலில் இவருக்கு ஏக சப்போர்ட்டாம். இதையெல்லாம் விட இப்போது சொர்ணமால்யா முக்கியமாகக் கருதுவது தனது பிஎச்டி படிப்பைத்தான். கலைத்துறைக்கு உபயோகப்படும் விதத்தில் இந்த பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளாராம்.
அடுத்து...?"அடுத்து சினிமா டைரக்ஷன் பண்ணவேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் இப்போது அந்த எண்ணம் இல்லை. பிஎச்.டி.முடித்துவிட்டுதான் பண்ணவேண்டும் என்று வைராக்கியத்தில் இருக்கிறேன். டாக்டர் சொர்ணமால்யா ஆகிவிட்டுத்தான் டைரக்டர் சொர்ணமால்யா ஆவேன்..." என்கிறார்.நல்லாயிருந்தா சரி!
No comments:
Post a Comment