பள்ளி, கல்லூரி மாணவர் களிலிருந்து பல் விழுந்த கிழங்கள் வரை திரும்பத் திரும்பப் பார்த்து விவாதிக்கும் அந்த இரண்டு காட்சிகள் நம் பார்வைக்கும் வந்தன. விருதுநகரில் தான் இந்த இரட்டை பரபரப்பு.ஒன்று- ஆசிரியர் மாணவியை மிரட்டி உறவு கொள்வதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் அந்த இளம்பெண் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அழுதபடியே இருக்கிறாள். கையெடுத்துக் கும்பிட்டு கதறுகிறாள். ஆனாலும், அந்த முரட்டு ஆண் "எனது செல்ஃபோன் உனது நிர்வாணத்தையும் படம் பிடித்து விட்டது. நடந்ததை வெளியே சொன்னால் உன்னைக் கேவலப்படுத்திவிடுவேன்' என்று பயமுறுத்துவது வசனமில்லாமல் பதிவாகியிருக்கிறது.
அக்காட்சி யின் பின்னணியில் சினிமா பாடல் ஒலிக்கிறது. இந்தக் க்ளிப்பைத்தான், "ஜீன்ஸ் போட்ருக்குற அந்தப் புள்ள நம்ம ஊரு. வாத்தியாரு மூஞ்சிதான் சரியா விழல' என்று அக்கறையோடு பேசுகிறது பப்ளிக்.இன்னொன்று- ஆசிரியை நம்மிடம் சொன்னது. அதில் அந்தப் பெண் அவனிடம், "என்ன நெனச்சுக்கிட்டிருக்குற நீ? நீ பாட் டுக்கு வீடியோ எடுக்குற' என்று கோபிக்கிறாள்.
அவனோ, அவள் பேச்சையும் மீறி தான் எடுத்த காட்சி களை அவளுக்கே காண்பிக்கிறான். அந்தக் கண்றாவியை அவளும் சிரித்தபடி ரசிக்கிறாள். பிறகு "மறக்காம அழிச்சிடு' என்று அவனிடம் கெஞ்சு கிறாள். இருவரின் பேச்சும் துல்லியமாகக் கேட்கிறது. ஒரு இடத்தில் அந்த ஆண், "நான் சிவகாசி பரம்பரையாக்கும். ஷட்டர ஒடச்சிட்டு உள்ளே புகுந்துருவேன்' என்று அவளிடம் ஜம்பமடிக்கிறான். இதுதான் "உள்ளூர் ஆசிரியை' என்ற டைட்டிலோடு ஒவ்வொரு செல்ஃபோனாக உலா வருகிறது.இந்த இரண்டு கவரேஜையும் இண்டர்நெட் டிலும் ஏற்றி விட்டு உலகறியச் செய்து விட்டார்கள். விருதுநகரின் காஸ்ட்லி பள்ளி ஒன்றின் ஆசிரியைதான் செல்ஃபோனில் சிக்கியிருக்கிறார் என ஊரெங்கும் பேச்சு.
"கேமரா செல்ஃபோன் விஷயத்தில் இன் னும் போதிய விழிப்புணர்வு இல்லையே பெண்களுக்கு?' -சமூக ஆர்வலர் விஜயகுமாரிடம் கேட் டோம்.""கத்தி, துப்பாக்கியை விட மோசமான ஆயுதம் இந்தக் கேமரா செல்ஃபோன். எதையாச் சும் படம் எடுக்கணும்னு அவ னவன் துடியாத் துடிக்கிறான். இந்த மாதிரி ஆணுங்களுக்கு, பொண்ணுங்க வாழ்க்கையே வௌயாட்டாப் போச்சு. ரெகவரி சாஃப்ட்வேர்ல்லாம் வந்து டெக் னாலஜிதான் ரொம்ப முன் னேறிடுச்சே. போன்ல இந்த மாதிரி படம் எடுத்தவன் அழிச்சிட்டுக் கொடுத்தாக்கூட, அதுக்கு உயிர் கொடுத்து, அதயே மெமரி கார்டுல ஏத்தி விக்கிற சர்வீஸ் சென்டர்தான் நெறய இருக்கே. அதுவும் பக்காவான வியாபாரத் தந்திரத்தோட "விருதுநகர் வங்கி யின் பெண் அலுவலர், உங்க ஊரு டீச்சர், பக்கத்து ஊரு மாணவி'ன்னு இவங்களே ஒரு தலைப்பைப் போட்டுல்ல ஜாம் ஜாம்னு தொழில் பண்ணுறாங்க. "லோக் கல் சமாச்சாரம்'னா சனங்களுக்கு ஒரு கிக் இருக்கும்னு வீக்னஸ தெரிஞ்சுக்கிட்டுல்ல அடிக்கி றாங்க.
நெட்ல கூட தஞ்சாவூர் மாமி, சென்னை ஆன்ட்டி, மதுரை மல்லிகான்னு ஊரும் பேரும் போட்டுத்தானே சுத்தல்ல விட றாங்க. எங்கேயோ, யாரோ செய்யற தப்புக்காக எந்த ஊரோ, எந்தப் பள்ளிக்கூடமோ அவமானப்பட்டு நிக்கிதுன்னா இந்தக் கொடுமைய என்னன்னு சொல்றது?நாலு சுவத்துக்குள்ள நடக்குறத அவங்களே வீடியோ எடுத்து மாட்டிக்குறது ஒரு ரகம். பொதுவான பார்க்ல, பீச்சுல, டாய்லெட்ல, கோயில் குளத்துல பெண்கள் அப்படி இப்படி இருக்கும் போது ஒளிஞ்சு நின்னு எடுத்து அதயும் பிசினஸ் பண்ணுறது இன்னொரு ரகம்'' என்றார்.18 வருடங் களுக்கு முன் தமிழ் நாட்டில் கால்பதித்த நெதர்லாந்துக்காரன் வில்லியம்ஸ் இது போன்ற குற்றங்களை ஒரு தொழிலாகவே பண்ணி வந்தான். குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்ட அவன், இன்டர்போல் போலீஸ் அளித்த தகவலின் பேரில் இப்போதுதான் கைதாகியிருக்கிறான் சென்னையில். இந் நிலையில் "சைபர் குற்றங்கள் சிவகாசியிலும், கோரமுகம் காட்டி மிரட்டுகின்றனவே?' என்றோம் சிவகாசி டி.எஸ்.பி. ராஜகோபாலிடம்,""தற்செயலாக அந்த டீச்சர் கிளிப்பிங்ஸை நானும் பார்க்க நேர்ந்தது. அது அந்த ஸ்கூல் டீச்சர்தானா என்பதை முதலில் கண்டுபிடித்து வீடியோ எடுத்த குற்றவாளியைப் பிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து புகார் தந்தால்தான், சென்னையிலிருக்கும் சைபர் கிரைம் போலீசுக்கு ஃபார்வர்ட் பண்ணி, லோக்கல் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர். போட்டு குற்றவாளியை தேடிப் பிடிக்க முடியும்'' என்று விளக்கினார்.அவமானத்துக்கு அஞ்சும் நம் கலாச்சாரம் சீரழிந்து வருகிறதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment